இந்திய தேசிய காங்கிரசு

இந்திய விடுதலைப் போராட்டம்
(காங்கிரஸ் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ்
भारतीय राष्ट्रीय कांग्रेस
தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
நிறுவனர்ஆலன் ஆக்டவியன் ஹியூம்
நாடாளுமன்ற குழுத்தலைவர்சோனியா காந்தி
மக்களவைத் தலைவர்அதிர் ரஞ்சன் சௌத்திரி
மாநிலங்களவைத் தலைவர்மல்லிகார்ஜுன் கார்கே
தொடக்கம்28 திசம்பர் 1885 (137 ஆண்டுகள் முன்னர்) (1885-12-28)
தலைமையகம்24, அக்பர் தெரு, புது தில்லி 110001
இளைஞர் அமைப்புஇளைஞர் காங்கிரசு
பெண்கள் அமைப்புமகிளா காங்கிரசு
உறுப்பினர்~20 மில்லியன்[1]
கொள்கை
நிறங்கள்     நீலம்[2][3]
இ.தே.ஆ நிலைதேசியக்கட்சி[4]
கூட்டணிஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐ.மு.கூ) (2004–தொடக்கம்)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
50 / 545
[5](தற்போது 545 உறுப்பினர்கள்)
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
31 / 245
[6](தற்போது 243 உறுப்பினர்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவை)
737 / 4,036
(தற்போது 4025 உறுப்பினர்கள் 11 காலியிடங்கள்)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டமன்ற மேலவை)
55 / 426
(தற்போது 390 உறுப்பினர்கள் 36 காலியிடங்கள்)
தேர்தல் சின்னம்
Hand INC.svg
இணையதளம்
www.inc.in
இந்தியா அரசியல்

வரலாறுதொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

விடுதலைக்கு முன்பான காலப் பகுதிதொகு

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக்[தெளிவுபடுத்துக] என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.

இதன் இரண்டாம் கூட்டம் 1886 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.

முன்றாவது மாநாடு சென்னையில் 1887 டிசம்பர் 27 ல் நடைபெற்றது.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.

காந்தியின் கால பகுதிதொகு

காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் அவர் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.

விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதிதொகு

இந்திரா காந்தி காலப் பகுதிதொகு

சின்னம்தொகு

  • பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது.
  • இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[7][8]
  • இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து.
  • ஆளும் எதிர்கட்சியான ஜனதா கட்சி 1979ல் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் செயல்பட்டது.
  • ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.
  • பின்பு சரண் சிங் அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால். இது பின்பு சரண் சிங் தலைமையில் ஜனதா கட்சி (எஸ்) என அழைக்கப்பட்டது.
  • பின்பு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.
  • இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளது.[9]

கொள்கை மாற்றம்தொகு

மாநில அரசுகளில் காங்கிரஸ்தொகு

 
இந்தியாவில் தற்போது ஆளும் கட்சிகள்
  பாஜக
  பாஜக கூட்டணி
  இதேகா
  இதேகா கூட்டணி
  மற்ற கட்சிகள்
  • தற்போது காங்கிரஸ் கட்சி சட்டிஸ்கர், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நேரடியாக ஆளும் கட்சியாக உள்ளது.
  • மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் பெரும்பான்மையான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிரணியில் பாஜக பக்கம் சென்றுவிட்டதால். தற்போது ம.பியில் பாஜக ஆண்டு வருகிறது.
  • மேலும் ஜார்க்கண்ட், பீகார், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது.
  • இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி புரிந்துள்ளது.
  • ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர்களான ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களில் சறுக்கலை கண்டது. குறிப்பாக மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.

தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள்தொகு

வரிசை எண் மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முதலமைச்சர் கட்சி / கூட்டணி கட்சி பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம்
1 சட்டிஸ்கர் பூபேஷ் பாகல் (இதேகா) இதேகா (68) 17 டிசம்பர் 2018 68/91 11 டிசம்பர் 2023
2 ராஜஸ்தான் அசோக் கெலட் (இதேகா) இதேகா (106), இபொக(மா) (02), பாபக (2), ராலோத (1), சுயேச்சை (9) 17 டிசம்பர் 2018 120/200 11 டிசம்பர் 2023
3 இமாச்சலப் பிரதேசம் சுக்விந்தர் சிங் சுகு (இதேகா) இதேகா (40) 11 டிசம்பர் 2022 40/68 11 டிசம்பர் 2027
4 கர்நாடகம் சித்தராமையா (இதேகா) இதேகா (135) 20 மே 2023 135/224 13 மே 2028

காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள்தொகு

வரிசை எண் மாநிலங்கள் மாநில முதலமைச்சர்கள் கூட்டணி கட்சிகள் பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம்
1 ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 நவம்பர் 2019 16/81 நவம்பர் 2024
2 பீகார் நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் 13 நவம்பர் 2020 19/243 நவம்பர் 2025
3 தமிழ்நாடு மு. க. ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகம் 7 மே 2021 18/234 மே 2026

காங்கிரசின் பிரதான எதிர்கட்சிகள்தொகு

வரிசை எண் ஆளும் கட்சி பிரதான எதிர்கட்சிகள் வருடங்கள்
1 காங்கிரஸ் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1947–1971) (24–வருடம்)
2 இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (1964–1996) (32–வருடம்)
3 நிறுவன காங்கிரஸ் (1969–1977) (8–வருடம்)
4 ஜனதா கட்சி (1977–1988) (11–வருடம்)
5 ஜனதா தளம் (1988–1996) (8–வருடம்)
6 பாரதிய ஜனதா கட்சி (1996–இன்று வரை)

காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்தொகு

இந்தியாவில் 54 வருடங்களாக அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக 7 பிரதமர்களை வழங்கியுள்ளது.
வரிசை எண் பிரதமர் ஆட்சிக்காலம் ஆட்சி நிலவரம் ஆண்டுகள்
1 ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய 1947 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு 1951, 1957, 1962 நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நான்கு முறையும் பெரும்பான்மையான அரசு 17–வருடம்
2 குல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய இடைக்கால பிரதமராக இரண்டு முறை பெரும்பான்மையான அரசு 26–நாட்கள்
3 லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய இடைக்கால பிரதமர் பெரும்பான்மையான அரசு 2–வருடம்
4 இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984 1966 நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 1967, 1971, 1980 மூன்று நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு 15–வருடம்
5 ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு 5–வருடம்
6 பி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய 1991 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு 5–வருடம்
7 மன்மோகன் சிங் 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய 2004, 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் இருமுறையும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தலைமையில் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு 10–வருடம்

காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள்தொகு

காங்கிரஸ் கட்சி சார்பில் 7 பிரதமர்கள் 54 வருடமும் அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 3 கட்சிகளை சார்ந்த 4 பிரதமர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் தலா 1 வருடத்திற்கு மொத்தமாக 4 வருடம் ஆண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவுடன் சேர்த்து 58 வருடங்கள் இந்தியாவை ஆண்டுள்ளது.
வரிசை எண் ஆதரவு காங்கிரஸ் கட்சி ஆதரவு தலைவர்கள் கூட்டணி ஆதரவில் ஆண்ட கட்சிகள் கூட்டணி நிலைப்பாடு பிரதமர்கள் ஆண்டுகள்
1 காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மதச்சார்பற்ற ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி+சிபிஐ+பிற மாநில கட்சிகள் சரண் சிங் (1979–1980) 1–வருடம்
2 இராஜீவ் காந்தி சமாஜ்வாடி ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி+பாஜக+பிற மாநில கட்சிகள் சந்திரசேகர் (1990–1991) 1–வருடம்
3 சீதாராம் கேசரி/சோனியா காந்தி ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) தலைமையிலான காங்கிரஸ் கட்சி+சிபிஐ+சிபிஎம்+பிற மாநில கட்சிகள் தேவ கவுடா (1996–1997) 1–வருடம்
4 ஐ. கே. குஜ்ரால் (1997–1998) 1–வருடம்

மேற்கோள்கள்தொகு

  1. "Indian National Congress - Policy and structure". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 17 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "India General (Lok Sabha) Election 2014 Results". mapsofindia.com.
  3. "Election Results India, General Elections Results, Lok Sabha Polls Results India – IBNLive". in.com. 20 April 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 நவம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  4. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. 24 அக்டோபர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 9 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Lok Sabha Official Website". 2014-09-09. 2015-10-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-09 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Rajya Sabha Official Website". 2014-09-09. 2017-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-09-09 அன்று பார்க்கப்பட்டது.
  7. 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45
  8. President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80
  9. Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்தொகு