அனுமுலா ரேவந்த் ரெட்டி

இந்திய அரசியல்வாதி

அனுமுலா ரேவந்த் ரெட்டி (ஆங்கில மொழி: Anumula Revanth Reddy, பிறப்பு:08 நவம்பர் 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2] [3][4]இவர் தெலங்காணாவின் இரண்டாவது முதலமைச்சராக 2023 திசம்பர் 7 ஆம் நாள் பதவியேற்றார்.

அனுமுலா ரேவந்த் ரெட்டி
2-ஆவது தெலங்காணா முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 திசம்பர் 2023
ஆளுநர்
முன்னையவர்க. சந்திரசேகர் ராவ்
தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 திசம்பர் 2023
தொகுதிகோடங்கல் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2 சூன் 2014 – 2018
முன்னையவர்தெலங்காணா சட்டப்பேரவை உருவாக்கம்
பின்னவர்பட்னம் நரேந்தர் ரெட்டி
தொகுதிகோடங்கல் சட்டமன்றத் தொகுதி
தெலங்காணா பிரதேச காங்கிரசு கமிட்டி உருவாக்கம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
முன்னையவர்என். உத்தம் குமார் ரெட்டி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
23 மே 2019 – 6 திசம்பர் 2023
முன்னையவர்மல்லா ரெட்டி
தொகுதிமல்காஜ்கிரி
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பின்னவர்தெலங்காணா சட்டப்பேரவை உருவாக்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
அனுமுலா ரேவந்த் ரெட்டி

8 நவம்பர் 1969 (1969-11-08) (அகவை 54)
வாங்கூர், மகபூப் நகர், ஆந்திரப் பிரதேசம் (தற்போதைய நாகர்கர்னூல், தெலங்காணா), இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
தெலுங்கு தேசம் கட்சி (2008-2017)
பிள்ளைகள்1
பெற்றோர்s
  • அனுமுலா நரசிம்ம ரெட்டி (father)
  • அனுமுலா இராமச்சந்தரம்மா (mother)
கல்விஆந்திரா வித்யாலயா கல்லூரி(இளங்கலைப் பட்டம்)
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்revanthreddy.com

2023 தெலங்காணா சட்டமன்றத் தேர்தல் தொகு

சூன் 2021-இல் ரேவந்த் ரெட்டி என். உத்தம் குமார் ரெட்டிக்குப் பதிலாக தெலங்காணா பிரதேசக் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5] இந்தப் பொறுப்பை இவர் 2021 ஆம் ஆண்டு சூலை 7-இல் ஏற்றுக்கொண்டார்.[6]

இவர் அப்போதைய முதல் அமைச்சர் சந்திரசேகர் ராவிற்கு எதிராக 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். பெரும்பான்மைக்கு 4 தொகுதிகள் அதிகமாக 64 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இவர் கோடங்கல் சட்டமன்றத் தொகுதி மற்றும் காமாரெட்டி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். [7][8] இவர் கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்றார். காமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார்.[9] இவர் மூன்றாம் முறையாக கோடங்கல் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சராக தொகு

தெலங்காணாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ரேவந்த் ரெட்டியை காங்கிரசு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்ட தீர்மானத்தை அடுத்து அகில் இந்திய காங்கிரசு கமிட்டி தெலங்காணா முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஏதுவாக இவரை சட்டமன்ற இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக அறிவித்தனர்.[10]

2023 திசம்பர் 7 ஆம் நாள் இவர் தெலங்காணா முதல் அமைச்சராக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Congress leader Revanth Reddy, the rising star of Telangana politics" (in en). Newsd www.newsd.in. https://newsd.in/telangana-revanth-reddy-the-rising-star-of-politics/. 
  2. "Telangana TDP clips wings of MLA said to be eyeing Congress entry". Indianexpress.com. 25 October 2017. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.
  3. ADR. "Asset and declared cases comparison:Anumula Revanth Reddy".
  4. "Do you want water for irrigation or tears: KTR shouts to Kodangal voters".
  5. Apparasu, Srinivasa Rao (26 June 2021). "Parliamentarian A Revanth Reddy appointed Telangana PCC chief". Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/parliamentarian-a-revanth-reddy-appointed-telangana-pcc-chief-101624731781111.html. 
  6. Pisharody, Rahul V. (28 June 2021). "New Telangana PCC chief Revanth Reddy has to take on TRS and keep Congress flock together". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 June 2021.
  7. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/revanth-files-nomination-for-kodangal-constituency/articleshow/105031768.cms
  8. https://www.newindianexpress.com/states/telangana/2023/nov/11/tpcc-chief-a-revanth-reddyfiles-papers-in-kamareddy-constituency-2632024.html
  9. "Telangana Election Results 2023: Who is Revanth Reddy, among key architects of Congress performance in state". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
  10. "Revanth Reddy To Be Sworn In As Telangana Chief Minister Tomorrow". NDTV. 2023-12-07. https://www.ndtv.com/india-news/revanth-reddy-to-be-sworn-in-as-telangana-chief-minister-tomorrow-4640509. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுமுலா_ரேவந்த்_ரெட்டி&oldid=3841255" இலிருந்து மீள்விக்கப்பட்டது