தெலங்காணா சட்டப் பேரவை
தெலங்காணா சட்டப் பேரவை (Telangana Legislative Assembly) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவில் சட்டவாக்கத்துக்கான கீழவையாகும். இந்தப் பேரவையில் மொத்தம் 119 உறுப்பினர்களை பொது வாக்குரிமை அடிப்படையில் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த மன்றத்தின் தற்போதைய சபாநாயகராக போச்சாராம் ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளார்,இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் சட்டமன்றத் தேர்தலில், ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராவார். ஒவ்வொரு உறுப்பினர்க்கும் ஐந்தாண்டு காலம் பதவி நீடிக்கும். உறுப்பினர் இறந்தாலோ, பதவி விலகினாலோ, குற்றச் சுமத்தப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டாலோ, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படும். அதிக உறுப்பினர்களை பெற்ற கட்சி, ஆளுங்கட்சியாகிறது.
தெலங்காணா சட்டப் பேரவை Telangana Legislative Assembly తెలంగాణ శాసనసభ | |
---|---|
தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 2 சூன் 2014 |
முன்பு | ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை (தெலங்காணா மாநிலம் உருவாக்கப்படும் வரை) |
தலைமை | |
தமிழிசை சௌந்தரராஜன் 8 செப்டம்பர் 2019 முதல் | |
சட்டமன்ற செயலாளர் | வி. நரசிம்ம சார்யுலு 1 செப்டம்பர் 2017 முதல் |
அவைத் தலைவர் | கதாம் பிரசாத்குமார், இ.தே.கா 14 திசம்பர் 2023 முதல் |
துணை அவைத் தலைவர் | வெற்றிடம், இ.தே.கா 3 திசம்பர் 2023 முதல் |
துணை முதல்வர் | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
துணை எதிர்க்கட்சித் தலைவர் | வெற்றிடம், பா.ரா.ச 3 திசம்பர் 2023 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 119 |
அரசியல் குழுக்கள் | அரசு (76)
எதிர்க்கட்சி (39)
ஏனைய எதிர்க்கட்சிகள் (15)
|
தேர்தல்கள் | |
முதற்கட்ட வாக்குப்பதிவு | |
தேர்தல்தேர்தல் | 30 ஏப்ரல் 2014 |
அண்மைய தேர்தல் | 30 நவம்பர் 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
சட்டப்பேரவைக் கட்டடம், ஐதராபாது, தெலங்காணா | |
வலைத்தளம் | |
தெலங்காணா சட்டப் பேரவை |