பொது வாக்குரிமை

பொது வாக்குரிமை (இலங்கை வழக்கு: சர்வசன வாக்கெடுப்பு, ஆங்கிலம்: Universal suffrageஅல்லது universal adult suffrage அல்லது general suffrage அல்லது common suffrage) என்பது வாக்களிக்கும் உரிமையை அனைத்து முதிர் அகவையர் குடிகளுக்கும் விரிவுபடுத்துவதாகும். தவிர இது முதிரா அகவையினருக்கும் (டெமனி வாக்களிப்பு) குடியல்லாதோருக்கும் விரிவுபடுத்துவதையும் குறிக்கும். வாக்குரிமை வாக்களிக்கும் உரிமை மற்றும் வாக்களிக்க வாய்ப்பு என்ற இரு விழுமியங்களைக் கொண்டிருப்பினும் பொது வாக்குரிமை என்பது வாக்களிப்பு உரிமையை மட்டுமே குறித்தது; நடப்பு அரசு எத்தனை முறை வாக்காளர்களை கலந்து முடிவுகள் எடுக்கிறது என்பதை குறிப்பிடுவதில்லை. எங்கெல்லாம் பொது வாக்குரிமை உள்ளதோ அங்கு வாக்களிக்கும் உரிமை இனம், பால், நம்பிக்கை, செல்வம், அல்லது சமூகநிலை ஆகியவற்றால் கட்டுப்படுத்தப் படுவதில்லை.

1902 பிரெஞ்சு பதாகை.
Annie Kenney and Christabel Pankhurst.jpg

இவற்றையும் காண்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_வாக்குரிமை&oldid=1944411" இருந்து மீள்விக்கப்பட்டது