அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்

இந்திய அரசியல் கட்சி

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (தெலுங்கு: ఆల్ ఇండియా మజ్లిస్ ఎ ఇత్తెహాదుల్ ముస్లిమీన్, All India Majlis-e-Ittehad-ul Muslimeen, AIMM) சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் 1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்து நகரத்தில் நிறுவப்பட்டது. [3]

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
சுருக்கக்குறிAIMIM
தலைவர்அசதுத்தீன் ஒவைசி
நிறுவனர்சுல்தான் சலாவுதீன் ஒவைசி
மக்களவைத் தலைவர்அசதுத்தீன் ஒவைசி
தொடக்கம்12 நவம்பர் 1927 (97 ஆண்டுகள் முன்னர்) (1927-11-12)
தலைமையகம்அகபுரா, ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா.
கொள்கைஇசுலாம்[1]
நிறங்கள்பச்சை  
இ.தே.ஆ நிலைதெலங்காணா (மாநில கட்சி) பீகார் (மாநில கட்சி)
கூட்டணிசனநாயக மதச்சார்பற்ற முன்னணி (2020-தற்போதுவரை)[2] ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2008-2012)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவை & மாநிலச் சட்டமன்ற மேலவை)
தேர்தல் சின்னம்
kite
இணையதளம்
www.aimim.org
இந்தியா அரசியல்

கட்சியின் தோற்றம்

தொகு

1927 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலத்தின் நிசாம் மீர் உஸ்மான் அலி கான் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஐதராபாத் மாநிலத்தின் அதிகாரியாக இருந்த நவாப் முகம்மது நவாஸ் கான் என்பவரால் இக்கட்சி நிறுவப்பட்டு, வரையறுக்கப்பட்டது. பகதூர் யார் ஜங் இதன் முதல் தலைவராக 1938ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர்

தொகு

அசதுத்தீன் ஒவைசி இதன் தற்போதைய தலைவராக இருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் சட்ட மன்றத்தில்

தொகு
  • ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த பொழுது 2009 ஆம் ஆண்டு போட்டியிட்ட 7 சட்ட மன்ற தொகுதிகளையும் வென்றது.
  • 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளை இக்கட்சி கைப்பற்றியுள்ளது.[4].

ஆதாரங்கள்

தொகு
  1. Badri Raina, [1], The Wire, 27 November 2020
  2. "Asaduddin Owaisi, Upendra Kushwaha Form Front Of 6 Parties For Bihar Polls". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  3. Manoj, C. L. (5 December 2018). "Telangana: Several Plots, subplots for muslim votes in Hyderabad & beyond" – via The Economic Times.
  4. https://www.ndtv.com/india-news/telangana-election-2018-aimim-wins-7-seats-retains-hold-in-old-city-of-hyderabad-1961237 கடந்த முறை வென்ற 7 தொகுதிகளை தக்கவைத்தது AIMIM - NDTV இணையதள செய்தியில்