புனே

மகாராஷ்டிராவிலுள்ள ஒரு நகரம்


புனே (Pune) (மராத்தி: पुणे) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக புணாவாடி அல்லது புண்ய-நகரி அல்லது பூணா என்றறியப்படும் இவ்வூர், நாட்டின் ஒன்பதாவது மிகப்பெரிய நகரம் என்பதுடன், மும்பைக்கு அடுத்து மகாராஷ்டிராவிலேயே மிகப்பெரிய நகரமாகும். முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் தக்காண பீடபூமியில் கடல் மட்டத்திற்கும் மேல் 560 மீட்டர்களில் புணே அமைந்திருக்கிறது.[3] புணே நகரம் புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமாகும்.

புணே (पुणे)
தக்காணத்தின் இராணி
—  பெருநகரம்  —
சனிவார்வாடா கோட்டை
புணே (पुणे)
அமைவிடம்: புணே (पुणे), மகாராட்டிரம் , இந்தியா
ஆள்கூறு 18°31′13″N 73°51′24″E / 18.5204°N 73.8567°E / 18.5204; 73.8567
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் புணே
வட்டம் ஹவேலி வட்டம்
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மேயர் ராஜலக்ஷ்மி போஷலே
நகரவை ஆணையர்
மக்களவைத் தொகுதி புணே (पुणे)
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்

333,7,481[1] (8-ஆவது) (2009)

7,214/km2 (18,684/sq mi)
52,73,211[2] (9th) (2009)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1109.69 கிமீ2 (428 சதுர மைல்)

570.62 மீட்டர்கள் (1,872.1 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.punecorporation.org

பொ.ஊ. 937-ஆம் ஆண்டிலிருந்து புணே என்ற நகரம் இருந்து வருவதாக தெரிகிறது.[4] மராட்டியப் பேரரசை நிறுவிய சிவாஜி புணேயில் ஒரு சிறுவனாக வளர்ந்தார். பின்னாளில் தனது ஆட்சிக்காலத்தில் இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மேற்பார்வையிட்டார். 1730-ஆம் ஆண்டு, சத்ரபதி சாதராவின் பிரதம அமைச்சரான பேஷ்வாவின் தலைமையில் புனே ஒரு மிகமுக்கியமான அரசியல் மையமாக விளங்கியது. 1817-ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவோடு இந்தத் தலைநகரம் இணைக்கப்பட்ட பிறகு, இந்தியா விடுதலை பெறும் வரை பம்பாய் பிரசிடென்ஸியின் "பருவகால தலைநகரமாகவும்", பாசறை நகரமாகவும்(ஆங்கிலத்தில் Cantonment) செயல்பட்டது.

இன்று, நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏழு பல்கலைக்கழகங்களுடன் புணே கல்வி வசதிவாய்ப்புகள் கொண்ட நகரமாக அறியப்படுகிறது.[5] 1950-60-ஆம் ஆண்டுகளில் இருந்து உற்பத்தி, கண்ணாடி, சர்க்கரை மற்றும் உலோக வார்ப்பு ஆகிய தொழிற்துறைகள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளன. புணே மாவட்டத்தில் பல தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆட்டோமேட்டிவ் என்னும் தானியங்கி துறை சார்ந்த நிறுவனங்கள் அமைத்துள்ள தொழிற்சாலைகளோடு புணேவும் வளர்ந்துவரும் தொழிற்துறை நகரமாக உள்ளது. அத்துடன் புணே நகரம் பாரம்பரிய இசை, விளையாட்டுக்கள், இலக்கியம், அயல்நாட்டு மொழியைக் கற்பித்தல், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் ஆய்வு போன்ற பல்வேறு கலாச்சார செயல்பாடுகளுக்காகவும் நன்கறியப்படும் நகரமாக உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் இந்தியா முழுவதிலுமிருந்து புலம்பெயர்பவர்களையும் மாணவர்களையும் கவர்கிறது, அத்துடன் மத்திய கிழக்கு, ஈரான், கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்காசியா ஆகிவற்றிலிருந்து வரும் மாணவர்களையும் கவர்வதால் இது பல சமூகங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் உள்ள நகரமாக விளங்குகிறது. இந்த நகரம் மோசமான பொதுப் போக்குவரத்து வசதியைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த வாகனங்களையே (பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள்) பயன்படுத்துகின்றனர்.

பெயர்

தொகு

புண்ணா என்ற பெயர் (பூணா என்றும் அழைக்கப்படுவது) புண்ய நகரி (சமஸ்கிருதத்தில் "மாசற்ற நகரம்") என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இந்தப் பெயரின் பழமையான குறிப்பு, இந்த நகரம் புண்ய-விஷயா அல்லது புணக் விஷயா என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடிய தற்கால யுகத்தின் (937) தேதியிட்ட ராஷ்டிரகூடர் செப்புத் தகட்டில் காணப்படுகிறது[6].13-ஆம் நூற்றாண்டில், இது காஸ்ப் புணே அல்லது புணாவாடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த நகரத்தின் பெயர் சிலபோது, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியில் சாதாரணமாக வழக்கத்தில் இருந்த ஆங்கில மொழியில் பூணா என்று அழைக்கப்பட்டதுண்டு. எனினும் "புணே" என்ற உச்சரிப்புதான் தற்போது நிலையானதாகும்.

வரலாறு

தொகு
 
படாலேஷ்வர் குகைக் கோயிலில் உள்ள வட்ட வடிவ நந்தி மண்டபம், ராஷ்டிரகூடர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்டது.

முற்காலமும் மத்திய காலமும்

தொகு

புணே நகர வரலாறு ஏறத்தாழ 6-ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படுகிறது.[7] பொ.ஊ. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டு: கசுபா பேட்(Kasba peth) என்ற புணேயின் மையப்பகுதி உருவானது.

 
இராட்டிரகூடர்கள் வம்சத்தால் கட்டப்பட்ட படலேசுவர் குடைவரை கோயில் வட்டவடிவ நந்தி மண்டபம்

758 மற்றும் 768 தேதியிட்ட செப்புத் தகடுகள், இன்று புணே இருக்குமிடத்தில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் 'புணாகா' எனப்படும் விவசாய அமைப்புமுறை இருந்ததாக காட்டுகின்றன. இந்தப் பகுதி ராஷ்டிரகூடர்களால் ஆளப்பட்டதாக அந்தத் தகடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் காலத்தில்தான் பாறைகளை வெட்டிக் கட்டப்பட்ட படாலேஷ்வர் கோயில் இருக்கிறது.

பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் இருந்து 1327-ஆம் ஆண்டுவரை தியோகிரி யாதவப் பேரரசின் ஒரு பகுதியாக புணே இருந்திருக்கிறது. பின்னாளில், 17-ஆம் நூற்றாண்டில் இது முகலாயப் பேரரசால் இணைத்துக் கொள்ளப்படும்வரை நிஜாம்சாஹி சுல்தான்களால் ஆளப்பட்டிருக்கிறது. 1595-ஆம் ஆண்டில் மலோஜ் போஸ்லே புணேவுக்கான ஜாகிர்தாரை நியமித்தார், அத்துடன் அது கூடுதலாக முகலாயர்களாலும் ஆளப்பட்டது[6].

மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சி

தொகு

1625-ஆம் ஆண்டு ஷாஹாஜி போஸ்லே புணேயின் நிர்வாகியாக ரங்கோ பாபுஜி தேஷ்பாண்டேவை (சர்தேஷ்பாண்டே) நியமித்தார். இவர் இந்த நகரத்தை மேம்படுத்திய முதலாமவர்களுள் ஒருவர் என்பதுடன், காஸ்பா, சோம்வார், ரவிவார் மற்றும் சனிவார் கோட்டையின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டார். 1630-ஆம் ஆண்டு விஜய்பூர் சுல்தான் இந்த நகரத்தின் மீது படையெடுத்து அழித்த பின்னர், மீண்டும் ஷாஹாஜி போஸ்லேயின் ராணுவ மற்றும் நிர்வாக அதிகாரியான தாதோஜி கோந்தவ் 1636-ஆம் ஆண்டிலிருந்து 1647-ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியின் வளர்ச்சி மற்றும் கட்டுமானப் பணியை மேற்பார்வையிட்டார். அவர் புணே மற்றும் 12 மாவல்களின் வருவாய் அமைப்பை நிலைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பிரச்சினைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைகளை கட்டுப்படுத்துவதற்கான பயன்மிக்க முறைகளையும் உருவாக்கினார். ஷாஹாஜியின் மகன் சிவாஜி போஸ்லே (பின்னாளில் சத்ரபதி சிவாஜி) தனது தாயாரான ஜிஜாபாயுடன் அந்த நகரத்திற்கு வந்தபோது லால் மஹால் என்னும் அரண்மனையை கட்டும் பணியும் தொடங்கியிருந்தது. 1640-ஆம் ஆண்டு லால் மஹால் கட்டி முடிக்கப்பட்டது.[6]. கஸ்பா கணபதி கோயிலைக் கட்டும் பணியை ஜிஜாபாயே ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அந்தக் கோயிலில் நிறுவப்பட்ட கணபதி சிலை அந்த நகரத்தின் குலதெய்வமாக குறிப்பிடப்படுகிறது[8].

சிவாஜி 1674-ஆம் ஆண்டு சத்ரபதியாக முடிசூட்டப்பட்டார். அவர் புணேயில் மேற்கொண்டு நடந்த குருவார், சோம்வார், கணேஷ் மற்றும் கோர்பாத் கோட்டைகளின் கட்டுமானப் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

1720-ஆம் ஆண்டு சத்ரபதி ஷாகுஜியால் ஆளப்பட்ட மராட்டியப் பேரரசிற்கு முதலாம் பாஜி ராவ் பேஷ்வா ஆனார். 1730-ஆம் ஆண்டு, ஷனிவார்வாடா கோட்டை, முத்தா ஆற்றின் கரைகளில் கட்டப்பட்டது. பேஷ்வா அந்த நகரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்திலேயே அது திறந்துவைக்கப்பட்டது. பேஷ்வாக்களின் உதவிகளால் லக்தி புல், பார்வதி கோயில் மற்றும் சதாசிவ் நாராயண், ராஸ்தா மற்றும் நானா கோட்டை உள்ளிட்ட பல கோயில்களும் பாலங்களும் கட்டப்பட்டன. 1761-ஆம் ஆண்டு நடந்த மூன்றாம் பானிபட் போரில் பேஷ்வாக்கள் தோற்ற பிறகு அவர்களுடைய ஆட்சி வீழ்ச்சியடைந்தது. 1802-ஆம் ஆண்டு, பூணா போரில் புணே பேஷ்வாவிடமிருந்து யஷ்வந்த்ராவ் ஹோல்கரால் கைப்பற்றப்பட்டது, இது 1803-05-ஆம் ஆண்டு இரண்டாவது ஆங்கில-மராட்டிய போரை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. நவி கோட்டை, கன்ஜ் கோட்டை மற்றும் மகாத்மா புலே கோட்டை ஆகியவை பிரித்தானிய ஆட்சிகாலத்தில்தான் புணேவில் உருவானதாக நம்பப்படுகிறது.

பிரித்தானிய ஆட்சி

தொகு

1817-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே மூன்றாவது ஆங்கில-மராட்டியப் போர் மூண்டது. பேஷ்வாக்கள் புணேவுக்கு அருகே 1817-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற காத்கி போரில் (பின்னர் கிர்கீ என்று சொல்லப்படுவது) தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் அந்த நகரம் சூறையாடப்பட்டது.[9] இது பம்பாய் பிரசிடென்ஸியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதுடன், பிரிட்டிஷார் இந்த நகரத்தின் கிழக்கில் பெரிய ராணுவப் பாசறையையும் உருவாக்கினர் (தற்போது இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது). 1858-ஆம் ஆண்டு புணே நகராட்சி நிறுவப்பட்டது.

கடைசி பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் பிள்ளையான நானாசாகேப் பேஷ்வா, இந்திய கலகத்தின் ஒரு பகுதியாக 1857-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஜான்சி ராணி லட்சுமிபாயும் தாந்த்யா தோபேயும் உதவினர். அந்தக் கலகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மராட்டியப் பேரரசில் இறுதியாக எஞ்சியிருந்தவை பிரித்தானியாவின் இந்தியாவோடு இணைத்துக்கொள்ளப்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புணே சமூக மற்றும் சமய மறுமலர்ச்சிக்கான முக்கியத்துவம் வாய்ந்த மையமாக இருந்திருக்கிறது. லோகமான்ய பால கங்காதர திலகர் என்ற லோகமான்ய திலகர், மகரிஷி வித்தல் ராம்ஜி ஷிண்டே மற்றும் ஜோதிராவ் புலே உட்பட பல புகழ்பெற்ற மறுமலர்ச்சியாளர்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களும் இங்கே வாழ்ந்துள்ளனர்.

1869-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், புணே பிளேக் என்னும் உயிர்க்கொல்லி நோயால் தாக்கப்பட்டது, 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் இந்த நோய் சீற்றத்தோடு பரவியது. சாவு எண்ணிக்கை இரட்டிப்பானதோடு அந்த நகரத்தின் மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரத்தை வி்ட்டு வெளியேறினர். இந்திய பொதுப்பணித்துறை சேவைகள் அலுவலரான டபிள்யூ.சி. ராண்ட் தலைமையில் ஒரு சிறப்பு கொள்ளை நோய் ஆணையம் அமைக்கப்பட்டதோடு நெருக்கடி நிலையை எதிர்கொள்ள படையினர் கொண்டுவரப்பட்டனர். மே மாத இறுதியில் இந்த நோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 1897-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி, விக்டோரியா மகாராணி முடிசூட்டிக்கொண்ட எழுபத்து ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது, சிறப்பு ஆணையத் தலைவர் ராண்ட் மற்றும் லெப்டினென்ட் அயர்ஸ்ட் ஆகியோர் அரசு மாளிகையில் விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது சுடப்பட்டனர். அயர்ஸ்ட் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார், ராண்ட் தனது காயத்தோடு 1897-ஆம் ஆண்டு சூன் 3 ஆம் தேதி மரணமடைந்தார். சேப்கார் சகோதரர்களும் அவர்களுடைய இரண்டு கூட்டாளிகளும் இந்தக் கொலையில் பல்வேறு விதங்களிலும் பங்கேற்றதற்காகவும், இரண்டு உளவாளிகளை சுட்டது மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியை சுட முயற்சி செய்தது ஆகியவற்றிற்காக குற்றம்சாட்டப்பட்டனர். மூன்று சகோதரர்களும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டனர், கூட்டாளியும் அவ்வாறே செய்யப்பட்டார். மற்றொரு பள்ளிக்கூட சிறுவனுக்கு பத்து வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சேப்கர்களின் இந்த செயல் மூன்றாவது கொள்ளை நோய்ப் பரவலின் போது உலகில் காணப்பட்டதிலேயே மிகவும் மோசமான அரசியல் அதிகாரமுள்ளவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையாகப் பார்க்கப்படுகிறது.[10]

விடுதலைக்குப் பின் புணே

தொகு

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு கல்வித்துறையான என்.டி.ஏ. (நேஷனல் டிபென்ஸ் அகாதமி), கதக்வாஸ்லா, பேஷான் மற்றும் சில ஆராய்ச்சி நிறுவனங்களால் நிறைய முன்னேற்றங்களை புணே கண்டது. புணே தெற்கத்திய ராணுவ கட்டளை மையமாகவும் விளங்கியது. 1950-60-ஆம் ஆண்டுகளில் ஹாட்ஸ்பர், போஸாரி, பிம்பாரி மற்றும் பார்வதி தொழிற்துறை எஸ்டேட் போன்ற இடங்களில் தொழிற்துறை முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கிய டெல்கோ (இப்போது டாடா மோட்டார்ஸ்) 1961-ஆம் ஆண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. பல அரசு அலுவலர்கள், சிவில் என்ஜினியர்கள் மற்றும் ராணுவப் பணியாளர்கள் தங்களது பணி ஓய்விற்குப் பின்னர் புணேவையே தங்களுடைய குடியிருப்பிடமாக முன்னுரிமையளித்ததால் புணே ஒரு காலத்தில் "ஓய்வூதியம் வாங்குபவர்களின்" சொர்க்கம் என்றும் குறிப்பிடப்பட்டது. ஒரு காலத்தில் புணேயில் 2,00,000 மிதிவண்டிகள் இருந்திருக்கின்றன. 1961-ஆம் ஆண்டு, சூலை மாதம் பான்ஷத் அணை உடைந்து அதன் தண்ணீர் நகருக்குள் வெள்ளமாக ஓடியது. பெரும்பாலான பழைய பகுதிகளை அழித்துவிட்டாலும் நவீன நகரத் திட்டமிடல் முறையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த எதிர்பாராத நிகழ்ச்சி நகரத்தில் கட்டுமான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்ததால், நகரத்தின் பொருளாதாரம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதிரடி முன்னேற்றத்தைக் கண்டது.

1966-ஆம் ஆண்டு இந்த நகரம் எல்லா திசைகளிலும் வளர்ச்சியுற்றது. 1970-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர், புணே நாட்டின் முன்னணி பொறியியல் நகரமாக உருவானது. குறிப்பாக டெல்கோ, பஜாஜ், கைனடிக், பாரத் ஃபோர்ஜ், ஆல்ஃபா நாவல், தெர்மாக்ஸ் இன்னபிற ஆகியவை ஆட்டோமேட்டிவ் துறையில் தங்களுடைய உள்கட்டுமானத்தை விரிவாக்கிக்கொண்டன. இந்த நேரத்தில் பெரிய அளவிலான கல்வி நிறுவனங்களின் எண்ணி்க்கை காரணமாக 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்ற கௌரவத்தைப் பெற்றது. 1989-ஆம் ஆண்டு தேஹு சாலை-காட்ரஜ் புறவழிச்சாலை (மேற்கத்திய புறவழிச்சாலை) நிறைவுசெய்யப்பட்டு, நகரின் உள்புறத்திலான போக்குவரத்து நெருக்கடியை குறைத்தது. 1990-ஆம் ஆண்டு புணே வெளிநாட்டு மூலதனத்தைக் கவரத் தொடங்கியது, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்களில், தாவர வளர்ப்பு மற்றும் உணவுப் பதப்படுத்தல் தொழில்கள் நகரின் உள்ளேயும் நகரத்தைச் சுற்றியும் வேர்விடத் தொடங்கின. 1998-ஆம் ஆண்டு, ஆறுவழி மும்பை-புணே விரைவுப்பாதை பணி தொடங்கியது; இது நாட்டிற்கான ஒரு பெரிய சாதனை என்பதுடன் இந்த விரைவுப் பாதை 2001-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 2000-ஆம் ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் புணே தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் கண்டது என்பதுடன், அவுந்த், ஹின்ஜவாடி மற்றும் விமான் நகர் சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

2005-ஆம் ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப தொழில்முறையாளர்களுடன் புணே மும்பையையும் சென்னையையும் மிஞ்சியது. 2008-ஆம் ஆண்டு பன்னாட்டு நிறுவனங்களான (எம்.என்.சிக்கள்) ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஃபியட் போன்றவை புணேவுக்கு அருகே முன்னேற்றமடையாத இடங்களில் தொழிற்சாலைகளை நிறுவியதில் புணே மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. அத்துடன், 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் புணேயில் நடத்தப்பட்டன, அது இந்த நகரத்தின் வடமேற்குப் பகுதியிலான வளர்ச்சியை மேலும் தூண்டியது என்பதுடன் புணேயின் சாலைகளில் இயற்கை வாயுவில் (சி.என்.ஜி.) ஓடும் சில பேருந்துகளையும் சேர்த்துக்கொண்டது. 2009-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புணே பெருநகர்ப்பகுதி (மெட்ரோபாலிட்டன்) மண்டல முன்னேற்ற அமைப்பு (PMRDA) நிறுவப்பட்டது. இது முன்மொழிந்த துவக்க முயற்சிகள் நகரத்தின் உள்கட்டுமானத்திற்கு பெரிய அளவிலான ஊக்கத்தை வழங்கும் என்பதோடு மாநகர (விரைவு போக்குவரத்து ரெயில்) மற்றும் பேருந்துகளையும் அத்துடன் பயன்மிக்க தண்ணீர் மற்றும் குப்பை அகற்றல் வசதிகளையும் உள்ளடக்கியிருக்கும்.

சூலை மற்றும் ஆகத்து 2009-ஆம் ஆண்டு இன்ஃபுளூயன்ஸா A(எச். 1 என். 1) வைரஸ்கள் இந்த நகரத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டன. முதல் அதிகாரப்பூர்வ பதிவு அபினவ் பள்ளியில் காணப்பட்டது. மற்ற 38 மரணங்களைத் தொடர்ந்து புனே இந்தியாவின் முதல் எச். 1 என். 1 வைரஸ் உள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற பெரிய அளவிலான எச். 1 என். 1 காரணமாக ஏற்பட்ட மரணங்கள் ஆசிய நகரங்களிலேயே அதிகப்படியானதாகும் என்பதோடு, இந்தச் சூழ்நிலை மாணவர்களும் தொழில்முறையாளர்களும் நகரத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறுவதற்கு காரணமானது என்பதுடன் தாஹி்ல்கந்தி-கோபல்கலா மற்றும் நூற்றாண்டு பழமை வாயந்த கணேஷ் பண்டிகைகளின் மீது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியது. இந்த நகரத்தின் குளிர்ச்சியான மற்றும் ஈரமான வெப்பநிலை இந்த மாதங்களில் இந்த வைரஸ் பரவுவதற்கு உதவின.

புவியமைப்பு

தொகு
 
புணே நகரம் முல்லா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது
 
பஷான் ஏரி மனிதன் உருவாக்கிய ஏரியாகும்

புணே தக்காண பீடபூமியின் மேற்கு முகட்டில் கடல்மட்டத்திற்கு 560 மீட்டர்கள் (1,837 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது. ஷயாத்ரி மலைத்தொடரின் (மேற்குத் தொடர்ச்சிமலைகள்), அதனை அராபியக் கடலிலிருந்து பிரிக்கின்ற மலைத்தொடரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இது அமைந்துள்ளது. இது மலை நகரம் என்பதுடன், இதனுடைய உயரமான மலையான விடல் மலையோடு இது கடல் மட்டத்திற்கு 800 மீட்டர்கள் (2,625 அடிகள்) உயரத்தில் உள்ளன. நகரத்திற்கு சற்று வெளிப்புறத்தில் 1300 மீட்டர்கள் உயரத்தில் சிங்காகத் கோட்டை அமைந்திருக்கிறது.

மத்திய புணே முலா மற்றும் முத்தா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. பீமா ஆறுகளின் கிளை ஆறுகளான பாவனா மற்றும் இந்திரயானி ஆறுகள் புணே மாநகரத்தின் வடமேற்கு துணைப்பகுதிகளை நோக்கி ஓடுகின்றன. நகரத்திற்கு தெற்கே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்கள் கோய்னா அணையைச் சுற்றி பூகம்பம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிக்கு மிகவும் நெருக்கமாக புணே அமைந்துள்ளது, அத்துடன் இது இந்திய வானிலை ஆய்வுத் துறையால் மண்டலம் 4 என்று மதிப்பிடப்பட்டுள்ளது (2 முதல் 5 வரையுள்ள அளவுகோலில், 5 பூகம்பம் ஏற்பட மிகவும் ஏதுவானதாகும்). புணே தனது வரலாற்றில் மிதமான தீவிரம் வாய்ந்த மற்றும் குறைவான தீவிரம் வாய்ந்த பூகம்பங்களை எதிர்கொண்டுள்ளது. புணேயில்கூட பெரிய பூகம்பங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்றாலும், 2008-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி 3.2 அளவுக்கான பூகம்பம் காட்ரேஜ் பகுதியில் ஏற்பட்டதோடு, 2008-ஆம் ஆண்டு சூலை 30-ஆம் தேதி இரவு ஏற்பட்ட குறைந்த தீவிர அளவுள்ள பூகம்பம் செய்தி ஆதாரங்களின் அடிப்படையில் 4.2 என்று அளவிடப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை]. இந்த பூகம்பத்திற்கான மையப்புள்ளி கோய்னா அணைத்தளத்தின் 2004[11] ஆகும்.

காலநிலை

தொகு
தட்பவெப்பநிலை வரைபடம்
புணே
பெமாமேஜூஜூ்செடி
 
 
0
 
30
11
 
 
1
 
33
13
 
 
5
 
36
17
 
 
17
 
38
21
 
 
41
 
37
23
 
 
116
 
32
23
 
 
187
 
28
22
 
 
122
 
28
21
 
 
120
 
29
21
 
 
78
 
32
19
 
 
30
 
31
15
 
 
5
 
30
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: World Weather Information Service
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0
 
87
53
 
 
0
 
91
55
 
 
0.2
 
97
62
 
 
0.7
 
101
69
 
 
1.6
 
99
73
 
 
4.6
 
90
73
 
 
7.4
 
83
72
 
 
4.8
 
82
71
 
 
4.7
 
85
69
 
 
3.1
 
89
66
 
 
1.2
 
87
58
 
 
0.2
 
85
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்க, புணே வெப்பமண்டல ஈரப்பதமான மற்றும் வறண்ட வானிலையைப் பெற்றிருக்கிறது.

புணே மூன்று வெவ்வேறுவித பருவகாலங்களை எதிர்கொள்கிறது: கோடைகாலம், பருவமழைக்காலம், குளிர்காலம். மார்ச் முதல் மே மாதம் வரையிலுமுள்ள கோடைகால மாதங்களில் உள்ள வெப்பநிலை 30 முதல் 38 டிகிரி செல்சியஸ் (85 முதல் 100 பாரன்ஹூட்) வரையிலுமாக உள்ளது. புணேயில் வெப்பமான மாதம் ஏப்ரல்; கோடைகாலம் மே மாதத்தோடு முடிந்துவிடுவதில்லை என்றாலும், உள்நாட்டில் உருவாகும் பலத்த இடிமழையை மே மாதத்தில் பெறுகிறது (இருப்பினும் ஈரப்பதம் உச்ச அளவிலேயே இருக்கிறது). புணே உயரமான இடத்தில் இருப்பதன் காரணமாக, வெப்பம் மிகுந்த மாதங்களில்கூட இரவு நேரங்கள் குளிர்ச்சியாகவே இருக்கின்றன. பதிவுசெய்யப்பட்டதிலேயே அதிகபட்ச வெப்பநிலை 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று 43.3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது[12].

மிதமான மழை மற்றும் 10 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான(50 பாரன்ஹூட் முதல் 82 பாரன்ஹூட் வரையிலான) வெப்பநிலையுடன் இந்த பருவமழை சூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கிறது. இந்த நகரத்தில் பெரும்பாலும் 722 மில்லிமீட்டர் வருடாந்திர மழை சூன் மற்றும் செப்டம்பருக்கு இடையே பெய்கிறது. வருடத்திலேயே சூலை மாதம் தான் ஈரப்பதம் மிகுந்த மாதமாகும். புணே ஒரு காலத்தில் 29 நாட்களுக்கு தொடர்ச்சியான மழை பொழிவை பதிவுசெய்திருக்கிறது[மேற்கோள் தேவை].

குளிர்காலம் நவம்பரில் தொடங்குகிறது; குறிப்பாக நவம்பர் மாதம் இதமான குளிர் நிரம்பியதாக அறியப்படுகிறது (மராத்தி: गुलाबी थंडी). பெரும்பாலும் டிசம்பர் மற்றும் சனவரி மாதங்களில் பகல்நேர வெப்பநிலை கிட்டத்தட்ட 28 டிகிரி செல்சியஸ் (83 பாரன்ஹூட் ) என்ற அளவிலும், இரவுநேர வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் (50 பாரன்ஹூட்) குறைவாகவும் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. அது தொடர்ந்து 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் (42 பாரன்ஹூட்)க்கு குறைகிறது. பதிவுசெய்யப்பட்டதிலேயே மிகவும் குறைவான வெப்பநிலை சனவரி 17 1935 ஆம் ஆண்டு 1.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது[13].

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு
 
புணேயின் பி.ஆர்.டி.எஸ்.தான் இந்தியாவிலேயே முதல் விரைவுப் போக்குவரத்து அமைப்பாகும்.

புணே இரண்டு உள்-நகர நெடுஞ்சாலைகளால் பயன்பெறுகிறது:

  • பழைய மும்பை புணே நெடுஞ்சாலை: இது புணே மாநரகப் பகுதிகளுக்கு பயனளிக்கின்ற முக்கியமான பெருவழிச் சாலையாகும். இந்த நெடுஞ்சாலை நகரத்தின் மையப்பகுதியிலிருந்து தொடங்குகிறது அதாவது சிவாஜி நகரிலிருந்து, தேகு ரோடு வரை நீண்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பிரிவுகள் 8 வழிப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன (ஒவ்வொரு திசைக்கும் 4 வழிகள்). இது மேம்பாலத் தொடர்கள் மற்றும் சுரங்கப்பாதைகளோடு சில பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமலும் இருக்கிறது.
  • காத்ரஜ்-தேகு ரோடு புறவழிச்சாலை: இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி என்பதுடன் நகரத்தின் புறவழி்ச்சாலையை அமைக்கிறது, அத்துடன் அதனுடைய மேற்கு எல்லைகளைச் சுற்றிச் செல்கிறது. இது மேற்குப்பகுதி புறவழி என்றும் அழைக்கப்படுகிறது. இது வடக்குப் பகுதியில் தேஹு சாலையிலிருந்து தெற்குப் பகுதியில் காத்ரேஜ் வரை நீண்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 4 வழிகளைக் கொண்டிருப்பதோடு (ஒவ்வொரு திசைக்கும் 2) தொடர் மேம்பாலங்கள்/சரிவு-பிரிப்பான்களையும் கொண்டிருக்கிறது. புணேயின் மேற்குப்பகுதி சார்ந்த சாலைகள் அனைத்தும் இந்த நெடுஞ்சாலையோடு குறுக்குமறுக்காக இணைந்திருக்கின்றன.

ரயில்

தொகு

கடந்த ஐந்து வருடங்களாக புணேயில் ஒரு விரைவுப் போக்குவரத்து அமைப்பிற்கான வரைவு ஏற்கப்பட்டுள்ளது என்பதுடன் 2010-ஆம் ஆண்டில் தனது செயல்பாட்டைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது[15]. இது டெல்லி மெட்ரோவை உருவாக்கி நடத்திவரும் டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனுடனான ஆலோசனையுடன் திட்டமிடப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

  • கார்வ் சாலை, ஜாங்லி மஹராஜ் சாலை, ஷிவாஜிநகர் மற்றும் புனே-மும்பை சாலை (22 கிலோமீட்டர்கள், எழுப்பப்பட்டது) வழியாக வார்ஜே-சின்ஜ்வாட்
  • ராஜா பகதூர் மில் சாலை மற்றும் புணே அகமதுநகர் சாலை (13 கிலோமீட்டர்கள் எழுப்பப்பட்டது) வழியாக ஷிவாஜி நகர்-கல்யாணி நகர்
  • ஷிவாஜி சாலை வழியாக (10 கிலோமீட்டர்கள், சுரங்கப்பாதை) வேளாண் கல்லூரி-ஸ்வார்கட்

இந்த நகரத்திற்கு இரண்டு ரயில் நிலையங்கள் இருக்கின்றன, ஒன்று நகரத்திலும் மற்றொன்று ஷிவாஜி நகரத்திலும் இருக்கிறது. இரண்டு நிலையங்களும் மத்திய ரயில்வே துறையின் புணே பிரிவின் மூலமாக நிர்வகிக்கப்படுகின்றன. இது லோனாவாலாவிலிருந்து (மும்பை சிஎஸ்டிஎம் பிரிவால் நிர்வகிக்கப்படுவது) டான்டிற்கு முன்பாகவும் (தற்போது சோலாப்பூர் பிரிவில் உள்ளது) பாராமதிக்கும், ஹூப்ளிக்கும் நீள்கிறது (மிராஜ் வழியாக)[மேற்கோள் தேவை]. புணேவுக்கான ரயில் வழிகள் அனைத்தும் லோனாவாலாவுக்கான இரட்டை மின்மயமாக்கப்பட்ட வழிகளுடனும், டான்டிற்கான இரட்டை மின்மயமாக்கப்படாத வழிகளுடனும், மற்றும் மிராஜ் வழியாக கோலாப்பூர் மற்றும் டான்ட் வழியாக பாராமதிக்கு ஒற்றை மின்மயமாக்கப்படாத வழிகளுடனும் அகலப் பாதைகளாக இருக்கின்றன.

இந்த நகரம் மகாராஷ்டிராவிலேயே மிக முக்கியமான ரயில் பாதைகளுள் ஒன்றாகிய புணே-மிராஜ்-ஹூப்ளி-பெங்களூர் பாதையைப் பெற்றிருக்கிறது.

உள்ளூர் ரயில்கள் (இஎம்யூக்கள்) புனேவை தொழிற்சாலை நகரமான பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் மலை நகரமான லோனாவாலாவை இணைக்கின்றன. அதேசமயம் தினசரி விரைவு வண்டிகள் புனேவை மும்பை, ஹௌரா, ஜம்முதாவி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், ஜாம்ஷெட்பூர்(டாடா நகர்) மற்றும் சிலவற்றை இணைக்கின்றன. நாசிக்கையும் புணேவையும் இணைக்கின்ற ரயிலும் இருக்கிறது. புணேயில், டீசல் என்ஜின் பட்டறையும் (டிஎல்எஸ்) எலக்ட்ரிக் பயணப் பட்டறையும் இருக்கின்றன (இடிஎஸ்).

வான்வழி

தொகு

புணே சர்வதேச விமான நிலையம் லோகேகானில் உள்ள சர்வதேச விமான நிலையம் என்பதுடன் இது இந்திய விமானநிலையங்கள் நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுகிறது. இது அருகிலுள்ள இந்திய விமானப் படை தளத்தின் ஓடுதளங்களைப் பகிர்ந்துகொள்கிறது என்பதுடன், இந்தவகையில் உலகிலேயே இதுதான் ஒன்றே ஒன்று.[மேற்கோள் தேவை] எல்லா இந்திய நகரங்களுக்குமான உள்நாட்டு விமானங்களுக்கும் அப்பால், இந்த விமான நிலையம் இரண்டு சர்வதேச நேரடி விமானங்களையும் இயக்குகிறது: ஒன்று துபாய்க்கும் (ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ்ஸால் இயக்கப்படுவது) மற்றொன்று ஃப்ராங்க்பர்டிற்கும் இயக்கப்படுவதாகும் (லுஃப்தான்ஸாவால் நேரடி பிஸினஸ் வகுப்பாக இயக்கப்படுவது). சாகானில் ஒரு புதிய விமான தளம் திறக்கப்படவிருக்கிறது. புதிய புணே சர்வதேச விமானநிலையத்தின் கட்டுமானப் பணிக்கு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் பொறுப்பேற்றுள்ளது. சாதுஸ் மற்றும் ஷிரோலி கிராமங்களைச் சுற்றியுள்ள சாகான் மற்றும் ராஜ்குருநகர் பகுதி கட்டுமானப் பணிக்குரிய இடங்களாக தற்போது பரிசீலனையில் இருக்கிறது. இங்கே கட்டப்பட்டால், புணே-நாசிக் தேசிய நெடுஞ்சாலையைச் (என்எச்-50) சுற்றி மத்திய புணேவிலிருந்து 40 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் என்பதோடு ஆசியாவிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக இருக்கும். உள்நாட்டு விமானப் போக்குவரத்து புணேவை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், கோவா, இந்தூர் மற்றும் ஷீர்டி ஆகியவற்றோடு இணைக்கிறது.[சான்று தேவை]

நகர நிர்வாகம்

தொகு
 
புணே ஐ.யு.சி.ஏ.ஏ. மைதானத்தில் உள்ள ஆர்யபட்டாவின் சிலை. அவரது தோற்றத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லாததால், கலைஞரின் எண்ணக் கருத்தை ஒத்தே ஆர்யபட்டாவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

புணே நகரம் புணே மாநகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. நகரத்தின் தூதுவராகவும் பிரதிநிதியாகவும் பெயரளவிற்கு பதவி வகிக்கின்ற புணே மேயரால் வழிநடத்தப்படும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 149 கவுன்சிலர்களை[16] இந்த கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது. உண்மையான அதிகாரம் மகாராஷ்டிரா மாநில அரசால் நியமிக்கப்படும் இந்திய நிர்வாகத் துறை அதிகாரியாக உள்ள முனிசிபல் கமிஷனரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

புணே மாநகராட்சி பகுதிக்கு வெளியே மற்ற நான்கு நிர்வாக அமைப்புகள் செயல்படுகின்றன:

புணே காவல்துறைக்கு இந்திய காவல் சேவைத்துறை அலுவலராக உள்ள புணே காவல்துறை ஆணையரால் தலைமையேற்கப்படுகிறது. புணே காவல்துறை மாநில அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

ராணுவ மையங்கள்

தொகு
 
தேசிய போர் நினைவகம் (மகாராஷ்டிரா)

1800-ஆம் ஆண்டுகளின் முற்பகுதிகளிலிருந்தே புணே ஒரு மிகமுக்கியமான பாசறையாக இருந்து வருகிறது. காத்கி போர் (1817-ஆம் ஆண்டு) மற்றும் கோரேகான் போர் (1818-ஆம் ஆண்டு) உள்ளிட்ட சில முக்கியமான போர்கள் புணேயிலும் புணேவுக்கு வெளியிலும் நடந்துள்ளன. பல ராணுவ மையங்கள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அவை:

முதல் உலகப்போரில் புணேயிலிருந்து போருக்குச் சென்ற அனைவரின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ள பழமைவாய்ந்த போர் நினைவுச்சின்னம் சஸான் மருத்துவமனைக்கு எதிர்ப்புறமாக இருக்கிறது. ஒரு புதிய போர் நினைவிடமான தேசிய போர் நினைவுச் சின்னம் (மகாராஷ்டிரா) கோர்பாடிக்கு அருகில் புணே கண்டோன்மென்டில் உள்ளது. சுதந்திர இந்தியப் போரில் தங்களுடைய உயிரை நீத்த இந்திய ஆயுதம் தாங்கிய மகாராஷ்டிர படையினரின் தியாக நினைவிடமாக இந்த நினைவுச் சின்னம் உள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

தொகு

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புணே நகரத்தின் மொத்த மக்கள்தொகை 31,24,458 ஆகும். அதில் ஆண்கள் 1,603,675 மற்றும் 1,520,783 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,37,062 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.56% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 24,81,627 (79.43%), இசுலாமியர் 3,44,571 (11.03%), பௌத்தர்கள் 123,179 (3.94%), சமணர்கள் 76,441 (2.45%), கிறித்தவர்கள் 67,808 (2.17%), சீக்கியர்கள் 13,558 (0.43%) மற்றும் பிறர் 0.55% ஆகவுள்ளனர்.[20] பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

பொருளாதாரம்

தொகு
 
புணேயிலுள்ள இன்ஃபோஸிஸ் அலுவலக கட்டிடம்

இந்திய நகரங்களிலேயே மிகப்பெரியவற்றுள் ஒன்றாக, இதிலுள்ள பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விளைவாக ஐடி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் விரிவடைவதற்கான ஒரு வளர்ந்துவரும் மிகமுக்கிய நகரமாக இருந்துவருகிறது. புணே இந்தியாவிலேயே ஆறாவது மிகப்பெரிய மெட்ரோபாலிட்டன் பொருளாதாரம் என்பதுடன் உச்ச அளவிலான தலா வருமானத்தையும் கொண்டிருக்கிறது[21].

ஆட்டோமேட்டிவ்

தொகு

ஆட்டோமேட்டிவ் துறைதான் முக்கியமாக சிறப்புவாய்ந்ததாகும். எல்லாவகையான ஆட்டோமேட்டிவ் தொழிற்சாலைகளும் இங்கே இருக்கின்றன, இருசக்கர வாகனங்களிலிருந்து ஆட்டோரிக்சாக்கள் (பஜாஜ் ஆட்டோ, கைனடிக் மோட்டார் நிறுவனம்), கார்கள் (வோல்க்வேகன், ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மெர்ஸிடிஸ்-பென்ஸ், ஃபியட், பியோஜியட்), டிராக்டர்கள் (ஜான் டீரி), டெம்போக்கள், நிலம் அகழ்பவை (ஜேசிபி உற்பத்தி நிறுவனம் லிமிடெட்) மற்றும் டிரக்குகள் (ஃபோர்ஸ் மோட்டார்ஸ்) வரை ஆட்டோமேட்டிவ் உதிரி பாகங்களும் (டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட் டேகோ, விஸ்டியான், காண்டினெண்டல் கார்ப்பரேஷன், ஐ.டி.டபிள்.யூ., எஸ்.கே.எஃப்., மாக்னா) இங்கே தயாரிக்கப்படுகின்றன. ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஃபியட் உள்ளிட்ட பிற ஆட்டோமேட்டிவ் நிறுவனங்கள் புணேவுக்கு அருகே தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. தி இன்டிபென்டென்ட் பத்திரிக்கை இந்த நிறுவனத்தை "மோட்டார் நகரம்" என்று வரையறுத்துள்ளது[22].

பிற உற்பத்திகள்

தொகு

உருக்கு ஆலைகள் (பாரத் ஃபோர்ஜ்), டிரக் போக்குவரத்து அமைப்புகள், கிளட்சுகள் மற்றும் ஹைட்ராலிக் உதிரிபாகங்கள் ஈட்டன் கார்ப்பரேஷன் மற்றும் என்ஜின்கள் (கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்கள், கம்மின்கள்) உள்ளிட்ட என்ஜினியரிங் தயாரிப்புகள் புணேயில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆல்ஃபா லாவல், தைஸன் குரூப் மற்றும் பிளாக் அண்ட் வியேட்ச், செயிண்ட்-கோபைன் செக்குரிட் (தானியங்கி பாதுகாப்பு கண்ணாடி) உள்ளிட்டவை பிற உற்பத்தியாளர்கள் ஆவர்.

இந்தியாவின் மிகப்பெரிய என்ஜினியரிங் திரளான கிர்லோஸ்கர் குரூப் புணேயில் அமைந்திருப்பதோடு புணேயில் முதன்முதலாக உற்பத்தி அமைப்பை நிறுவிய நிறுவனங்களுள் ஒன்றாகும். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் (உலகின் மிகப்பெரிய குழாய் நிறுவனங்களுள் ஒன்று), கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்ஸ் (உலகின் மிகப்பெரிய ஜென்செட் நிறுவனம்), கிர்லோஸ்கர் நிமோட்டிக்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிற கிர்லோஸ்கர் நிறுவனங்கள் புணேயில்தான் அமைந்துள்ளன.

மற்ற பொருள்களும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மின்னணுப் பொருள்களும் வேர்ல்பூல் கார்ப்பரேஷன் மற்றும் எல்ஜி குரூப் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஃபிரிட்டோ லே மற்றும் கோகோ கோலா போன்ற உணவு நிறுவனங்கள் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை கொண்டிருக்கின்றன, டேஸ்டி பைட் போன்ற புதிய நிறுவனங்களும் இதற்கு அருகாமையில் அமைந்துள்ளன. பல சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களும் செயல்படுகின்றன, பெரிய நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களை அவை உற்பத்தி செய்வதோடு இந்திய சந்தைப் பகுதிக்கான பிரத்யேகமான உதிரிபாகங்களையும் உருவாக்குகின்றன.

மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

தொகு

நீல்சாப்ட், ஆம்டாக்ஸ், அப்ளைட் மைக்ரோ சர்க்யூட்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், ஆரக்கிள் ஃபினான்ஷியல் சர்வீஸஸ், கேபிஐடி கம்மின்ஸ், பிட்வைஸ் சொல்யூஷன்ஸ், காக்னிஸன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், மைண்ட்டிரீ, ஸ்டெரியா, மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், டாடா டெக்னாலஜிஸ், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ், சிண்டெல், பிஎம்சி சாப்ட்வேர், பெர்ஸிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், டெக் மஹிந்த்ரா, பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், அக்சன்ச்சர், விப்ரோ, எல் அண்ட் டி இன்ஃபோடெக், இன்ஃபோசிஸ், சென்ஸார், சைபேஜ், கம்ப்யூலின்க், ஜியோமெட்ரிக், ஸ்பைடர் சிஸ்டம்ஸ், சன்கார்ட், ஆஸ்டெக்சாப்ட், ஸ்டார்நெட் நெட்வோர்க்ஸ், டி-சிஸ்டம்ஸ், கேப்ஜெமினி, பார்க்லேஸ் டெக்னாலஜிஸ் சென்டர், எச்எஸ்பிசி டெக்னாலஜிஸ் சென்டர், சைபர்நெட் ஸ்லாஷ் சப்போர்ட், கான்பே மற்றும் ஜான் டீரி போன்ற நிறுவனங்கள் பெரிய மேம்பாட்டு மையங்களை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களோடு புணேவும் ஒரு மென்பொருள் தொழில் விரைவாக வளர்ச்சிபெறும் நகரமாக இருக்கிறது. வளர்ந்துவரும் மென்பொருள் தொழில் புதிய ஐ.டி. நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்கான புதிய ஐ.டி. பூங்காக்கள் கட்டுவதற்கு வழியமைத்துள்ளன. இது ஹின்ஜாவாடியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி ஐ.டி. பூங்கா, மகர்பட்டா சைபர்சிட்டி, டாலேவாடாவில் அமைந்துள்ள எம்.ஐ.டி.சி. மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா, கல்யாணி நகரில் அமைந்துள்ள மேரிசாப்ட் ஐ.டி. பூங்கா மற்றும் குமார் செரிபிரம் ஐ.டி. பூங்கா, இண்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர் (ஐ.சி.சி.), வெய்க்ஃபீல்ட் ஐ.டி. பூங்கா மற்றும் இன்னபிற ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்துள்ளது உலகின் பெரிய குழுமங்களுள் ஒன்றான எமர்ஸன் ஆகும், அவர்கள் தங்களுடைய என்ஜினியரிங் பணியையும் வடிவமைப்பு சேவையையும் சூலை 2003-ஆம் ஆண்டில் இருந்து புணேயில் எமர்ஸன் டிசைன் என்ஜினியரிங் சென்டர் என்ற பெயரில் - இ.டி.இ.சி. தொடங்கினார்கள். தற்போது ஹின்ஜாவாடி பகுதி 2-இல் காணப்படுகிறது. இந்த மையம் உற்பத்தி மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கு மற்ற எமர்ஸன் நிறுவனங்களுக்கு நேரடியாக உதவி செய்கிறது.

டபிள்யூ.என்.எஸ்., காலே கன்சல்டன்ட்ஸ், கன்வெர்ஜிஸ், எம்பேஸிஸ், இன்ஃபோஸிஸ் பிபிஓ, இஎக்ஸ்எல், விப்ரோ பி.பி.ஓ., நெக்ஸ்ட், விகஸ்டமர், வென்ச்சுரா, 3 குளோபல் சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்களுடோடு தொழி்ல் நிகழ்முறை அயலாக்க நிறுவனங்களும் இங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளன, ஜேசிபி எக்ஸாவேட்டர்ஸ் லிமிடெட் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களும் இங்கே தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. புணே தி காஸ்மோஸ் கோஆபரேட்டிவ் வங்கியின் தலைமையகமாகவும் இருக்கிறது.

துவக்கங்கள்

தொகு

தகவல்தொழில்நுட்ப சேவைகள் பிரிவு பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றாலும், புணேயின் என்.ஆர்.ஐ. குடியேற்றங்களும் முதல் தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோர்களின் வெற்றியும் தொழில்முனைவோர் நடவடிக்கைகளில் ஒரு மறுமலர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. புணேயிலுள்ள செயல்படு துவக்கநிலை நிறுவனங்கள் புணே ஓபன் காஃபி கிளப், நாஸ்காம் எமர்ஜ் மற்றும் டை புணே ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. புணேயில் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ள குறிப்பிடத்தக்க பள்ளத்தாக்கு சார்ந்த துவக்கங்கள் டாக்டர். சுஹாஸ் பாடில்ஸ் கிரேடில் டெக்னாலஜிஸ், ஸ்மந்தா மற்றும் கோம்லி மீடியா ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.

கல்வியும் ஆராய்ச்சியும்

தொகு
 
ஃபெர்குசன் கல்லூரி இந்தியாவில் உள்ளதிலேயே மிகவும் பழமையான கல்லூரியாகும்
 
புணே பல்கலைக்கழகம்

புணேயில் நூறு கல்வி நிறுவனங்களும் ஒன்பது பல்கலைக்கழகங்களும்[5] இருக்கின்றன, அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் புணே பல்கலைக்கழக கல்லூரிகளில் படிப்பதன் காரணமாக இது 'கிழக்கின் ஆக்ஸ்போர்டு' என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. உலகில் உள்ள எந்த நகரங்களைக் காட்டிலும் புணே அதிகப்படியான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் கொண்டிருக்கிறது.

அடிப்படை மற்றும் சிறப்புக் கல்வி

தொகு

முனிசிபாலிட்டி பள்ளிகள் என்றழைக்கப்படும் பொதுப் பள்ளிகள் பி.எம்.சி.யால் நடத்தப்படுகின்றன, அவை எம்.எஸ்.பி.எஸ்.எச்.எஸ்.இ.யுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிக் கல்வி ஸ்தாபனங்கள் அல்லது தனிநபர்களால் நடத்தப்படுகின்றன. அவை வழக்கமாக மாநில கல்வி நிறுவனங்களுடனோ அல்லது ஐ.சி.எஸ்.இ. அல்லது சி.பி.எஸ்.இ. நிறுவனங்கள் போன்ற தேசிய கல்வி நிறுவனங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்வதற்கான பெரிய மையமாக புணே இருக்கிறது[மேற்கோள் தேவை].ஜேஎல்பிடி தேர்வுகள் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நடத்தப்படுகின்றன. ஜப்பானிய மொழிகளிலான அறிவுறுத்தல்கள் புணே பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. ஜெர்மன் உள்ளிட்ட (மாக்ஸ் முல்லர் பவனில் பயிற்றுவிக்கப்படுவது) மற்ற மொழிகளும் இந்த நகரத்தில் பிரபலமானதாக இருக்கின்றன.

பல்கலைக்கழகக் கல்வி

தொகு

புணேயிலுள்ள பெரும்பாலான கல்லூரிகள் 1948-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புணே பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. பிற ஏழு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் இந்த நகரத்தில் நிறுவப்பட்டுள்ளன[23].

1854-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புணே, பொறியியல் கல்லூரி ஆசியாவில் உள்ளதிலேயே இரண்டாவது பழமையான பொறியியல் கல்லூரியாகும். டெக்கான் கல்விச் சமூகம், சமூக அரசியல் மறுமலர்ச்சி செயல்பாட்டாளரான பால கங்காதர திலகர்[24] உள்ளிட்ட சில உள்ளூர் குடிமகன்களால் 1884-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, அத்துடன் அது 1885-ஆம் ஆண்டு ஃபெர்குசன் கல்லூரியை நிறுவவும் பொறுப்பேற்றிருந்தது. இந்தச் சமூகம் தற்போது புணேயில் 34 நிறுவனங்களை பராமரித்து நடத்தி வருகிறது.

புணே பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம், தேசிய திரைப்பட ஆவணக்காப்பகம், ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி மற்றும் தேசிய ரசாயன ஆய்வகம் ஆகியவை இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் புணேயில் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த நகரத்தில் 33 வெவ்வேறு கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களை நடத்திவரும் சிம்பயாஸிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சிம்பயாஸிஸ் அம்ப்ரெல்லாவுக்குள்ளான சிறந்த நிறுவனம் எஸ்.சி.எம்.எச்.ஆர்.டி. (மேலாண்மை மற்றும் மனிதவள மேம்பாட்டிற்கான சிம்பயாஸிஸ் மையம்) ஆகும், மற்றவை நாட்டிலுள்ளவற்றிலேயே சிறந்த மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்றாகும்.

இந்திய சட்டவியல் சமூகத்தால் நிறுவப்பட்ட ஐஎல்எஸ் சட்டக் கல்லூரி இந்தியாவிலுள்ள சட்டக்கல்லூரிகளிலேயே முதலாவதாகும். ஆயுதப்படைகள் மருத்துவக் கல்லூரி மற்றும் மகாராஷ்டிரா மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்துள்ள மாணவர்கள் பயிற்சி பெறும் பைராம்ஜி ஜீஜீபாய் மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவப்பட்ட மருத்துவப் பள்ளிகள் இந்தியாவிலுள்ள முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். ராணுவ நர்ஸிங் கல்லூரி (ஏஎஃப்எம்சியோடு இணைக்கப்பட்டிருப்பது) உலகிலுள்ள முன்னணி நர்ஸிங் கல்லூரிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது[மேற்கோள் தேவை].

ஆராய்ச்சி நிறுவனங்கள்

தொகு

புணே பல்கலைக்கழகத்திற்கும் மேலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் புனே புகலிடமாக இருக்கிறது. பல்கலைக்கழகத்திற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய ரசாயன ஆய்வகம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்றாகும் என்பதுடன் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்திற்கான மூலப்பொருள்கள் மையமாகவும் இருக்கிறது (சி-எம்.இ.டி.), அதேசமயம் பல்கலைக்கழக வளாகம் உயர் கம்ப்யூட்டிங் மேம்பாட்டிற்கான மையம் (சி-டி.ஏ.சி.), விண்வெளி மற்றும் விண்வெளி பௌதீகத்தி்ற்கான உள்-பல்கலைக்கழக மையம், ரேடியோ விண்வெளி பல்கலைக்கழகத்திற்கான தேசிய மையம் மற்றும் உயிரணு அறிவியலுக்கான தேசிய மையம் ஆகியவற்றிற்கு இடமளித்துள்ளது.

தேசிய தீநுண்மியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா வைரஸ் நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் மற்றும் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்கிறது.

கே.இ.எம். மருத்துமனை ஆராய்ச்சி மையம், மத்திய தண்ணீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையம் (சி.டபிள்.யூ. & பி.ஆர்.எஸ்.), வங்கி நிர்வாகத்திற்கான தேசிய கல்வி நிறுவனம் (என்.ஐ.பி.எம்.), என்.ஐ.சி. [தேசிய தகவலியல் மையம்], வெப்பமண்டல வானிலை இந்திய நிறுவனம், அகார்க்கர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி கூட்டமைப்பு (ஏ.ஆர்.ஏ.ஐ.), தகவல்நுட்ப தயாரிப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு யூனிட் (யு.ஆர்.டி.ஐ.பி.) மற்றும் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய அனைத்தும் புணேவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் நிர்வாகப் பயிற்சி நிறுவனமாக உள்ள யஷாதா புணேயில் ராஜ் பவனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

பண்டார்க்கர் கிழக்கத்திய ஆராய்ச்சி நிறுவனம் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பதுடன் சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் ஆராய்ச்சி மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குகின்ற உலகறிந்த நிறுவனமாகும், அத்துடன் இது 20,000 புராதான கையெழுத்துப்படிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அகழ்வாராய்ச்சி தொடர்பாக டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் செயல்படுகிறது. மேலும் தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம் மற்றும் தேசிய காப்பீட்டு கல்வி நிறுவனம் ஆகியவை புணேயில்தான் அமைந்துள்ளன. கணிப்பொறி அறிவியல்கள் மற்றும் மூலப்பொருள்கள் நிகழ்முறையாக்கலுக்கான மாதிரியாக்கம்/போலியாக்கம் ஆகியவற்றில் ஈடுபடுகின்ற டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் ஒரு ஆராய்ச்சிப் பிரிவாகிய டாடா ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்திற்கும் புணே புகலிடமாக விளங்குகிறது.

சில போர்த்தளவாட மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளும் புனேயில் இருக்கின்றன (இந்தக் கட்டுரையிலுள்ள ராணுவ நிறுவல்கள் பிரிவைப் பார்க்கவும்).

கலாச்சாரம்

தொகு

பெரும்பான்மையினர் மராத்தி பேசுகிற பெரிய நகரமான புணே மராத்தியர்களின் கலை, இலக்கியம், நாடகம் மற்றும் மதம்சார்ந்த நம்பிக்கைகளில் நெருக்கமாக பிணைந்துள்ளது. பல மராத்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் மற்றும் பிற பிரபலங்கள் புணேயி்ல் வாழ்கின்றனர். சமீபத்திய ஆண்டுகளில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முறையாளர்கள் தங்களை எப்போதும் உற்சாகத்தோடு வைத்துக்கொள்ள விரும்புவதால் திரையரங்குகள், டிஸ்கோக்கள் மற்றும் கிளப்புகள் ஆகியவையும் புதிதாத தொடங்கப்பட்டுள்ளன. "வடை பாவ், பானி பூரி, ரக்தா ராவ், குச்சி டாபேலி, சேவ் பூரி, தாஹி பூரி, பாவ் பாஜி, எக் புர்ஜி, சானாச்சுர், குடி கே பால் மற்றும் கோலா" போன்ற பல்வேறு தெருவோர உணவுகள் உட்பட புணேவுக்கென்று ஒரு உணவுக் கலாச்சாரமும் இருக்கிறது.[25]

இலக்கியமும் நாடக அரங்கமும்

தொகு

புணேயில் பேசப்படும் மராத்தியின் வடிவம் நிலையான மொழி வடிவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.[26]

ஈஸ்டர்ன் மிச்சிகன் நூலகத்தின் நூலகரான லிசா குளோஃபர்,[27] மாவட்ட நூலகங்கள் குறித்த தனது பார்வையில் நகரத்தின் மெட்ரோபாலிட்டன் பகுதி "ஐந்து மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக இருக்கிறது, ஆனால் தனது பழமையான சுற்றுப்புறத்தார்களையும் அறிவுத்துறை மையத்தின் தேஜஸையும் கொண்டு விளங்குகிறது" என்று கூறியுள்ளார்.[28] கடந்த சில பத்தாண்டுகளில் வேளாண்-மருந்தாக்கியல் தொழில் நசிந்துவந்த வேளையில் முன்பு புலம்பெயர்ந்த பழங்குடியின மக்களின் புலம்பெயர்வு தற்போது எழுபது சதவிகித மக்கள்தொகை வளர்ச்சிக்கு காரணமாகியிருக்கிறது என்பதுடன் கல்வி பாடத்திட்டங்கள் மற்ற தொழில்துறை பகுதிகளுக்கு ஏற்றபடி சரிசெய்யப்படவில்லை.[29][30]

இது அரசாங்கத்தின் கல்வித்துறை உள்கட்டுமான விரிவாக்கத்தில் நேரடியான சூழலை ஏற்படுத்தியிருப்பதோடு முன்பு அலட்சியப்படுத்தப்பட்ட பகுதிகளில் மராத்தி கல்விகற்ற மக்கள் பல்வேறு வெகுமதிகளைப் பெற்றிருக்கின்றனர். மராத்தி நாடக அரங்கு (மராத்தியில் नाटक அல்லது रंगभूमी) மராத்தி கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பரிசோதனைரீதியான (प्रायोगिक रंगभूमी) மற்றும் தொழில்முறையிலான நாடக அரங்கு மராத்தி சமூகத்திடமிருந்து விரிவான ஆதரவைப் பெற்றிருக்கின்றன. திலக் ஸ்மாரக் மந்திர், பால கந்தர்வா ரங்மந்திர், பாரத் நாட்டிய மந்திர், யஷ்வந்த்ராவ் சவன் நாட்டியகிரிகா மற்றும் சுதர்ஸன் ரங்மன்ச் ஆகியவை இந்த நகரத்திலுள்ள முக்கியமான அரங்குகளாகும். ஸ்வர்கேட் கணேஷ் கலா கிரீட ரங்கமன்ஞ் அருகிலுள்ள அரங்கு 3,000 மக்கள் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட மற்றும் டால்பி சரவுண்ட் அமைப்பு உள்ள ஆசியாவின் மிகப்பெரிய அரங்காகும்.

சித்திரக்கதை வல்லுநரான ஸ்பைக் மில்லிகன் (1918-ஆம் ஆண்டு அகமது நகரில் பிறந்தவர்), தனது குழந்தைப் பிராயத்தில் 1922-ஆம் ஆண்டு முதல் 1930-ஆம் ஆண்டு வரை கிளைமோ சாலை குடியிருப்பு பகுதியில் இந்த நகரத்தில் வாழ்ந்தவராவார். இந்த நகரம் அவர் மீது குறிப்பிடத் தகுந்த மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் அவர் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கிறார், அவரது கற்பனை புணே நகரத்தின் காட்சிகள், ஒலிகள் மற்றும் நடவடிக்கைகளால் தாக்கம் பெற்றதாக இருந்திருக்கிறது. அவர் உருது மொழியை தனது வளர்ப்புத் தாயிடமிருந்து கற்றார், அவர் 2002-ஆம் ஆண்டு மரணமடையும்வரை அந்த மொழியிலுள்ள சொற்றொடர்களை அவரால் கையாள முடிந்தது.

ஒவ்வொரு டிசம்பர் மாதமும் மூன்று நாள் நீடிக்கும் சவாய் கந்தர்வா இசைத் திருவிழாவை புனே நகரம் கொண்டாடுகிறது. இது ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக பாரம்பரிய இசைகளை வழங்குகிறது. தீபாவளி பண்டிகையி்ன்போது, அதிகாலை நேரங்களில் பகத் தீபாவளி என்ற இசை நிகழ்ச்சி தொடங்குகிறது. புணே வசந்தோஸ்தவ இசைத் திருவிழாவையும் கொண்டாடுகிறது.

புணே பாரம்பரிய இந்திய இசை உலகிற்கு புகழ்பெற்ற பல இசைக் கலைஞர்களையும் வழங்கியுள்ளது. சிறந்த பாடகரான பண்டிட் பீம்ஸென் ஜோஷி மற்றும் முந்தைய தலைமுறை சிதார் கலைஞரான பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக் ஆகியோர் நன்கறியப்பட்ட பெயர்களாகும்.

பண்டிட் பீம்ஸென் ஜோஷியின் விருப்பப்படி, பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக் புணே பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவ நிறுவனராக இசை நடனம் மற்றும் நாடகத்திற்கான இளநிலை பட்டப்படிப்பு துறையைத் தொடங்கினார். இது லலித் கலா கேந்த்ரா என்று பெயரிடப்பட்டு பண்டிட் சந்திரகாந்த் சர்தேஷ்முக்கை முதல் இணை ஒருங்கிணைப்பாளராக கொண்டு 1987-ஆம் ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்டது. இந்த துறை தற்போது பேராசிரியர் சதீஷ் அலேகரால் நடத்தப்படுகிறது. இந்தத் துறை குருகுலமும் சம்பிரதாயமான கல்வி அமைப்பும் இணைந்திருப்பதாகும். சிறந்த பாடகரான பண்டிட் பீம்ஸென் ஜோஷி, நன்கறியப்பட்ட கதக் நாட்டியக்கலைஞர்களான ரோஹின் பாதே மற்றும் மணீஷா சாதே, நினைவுகொள்ளப்படும் பரதநாட்டியக் கலைஞர் சுஷிதா பிதே சபேகார், வயலின் கலைஞரான அதுல் உபாத்யே ஆகியோரும் மற்றும் பல கலைஞர்களும் இங்கே பல்கலைக்கழக ஆசிரியர்களாகவும் பாரம்பரிய குருக்களாகவும் இங்கே பாடம் கற்றுத்தந்துள்ளனர்.

சமயம்

தொகு
 
சதுர்ஷிரிங்கி கோயில்
 
டாகாடுஷேத் ஹால்வி கணபதி கோயில்
 
ஓஷோ பன்னாட்டு தியான வளாகம்

வருடத்திற்கு இரண்டு லட்சம் வருகையாளர்களுடன், புணேயிலுள்ள ஓஷோ சர்வதேச தியான மையம் உலகிலேயே மிகப்பெரிய ஆன்மீக மையங்களுள் ஒன்றாகும்]] இந்துமதம் புணேயிலுள்ள மிகப்பொதுவான மதமாகும், இருப்பினும் பல மசூதிகள், குருத்துவாராக்கள், ஜெயின் கோயில்கள் மற்றும் பிற மதக் கட்டிடங்களையும் இந்த நகரம் முழுவதிலும் காண முடியும்[மேற்கோள் தேவை].புணேயிலுள்ள மிக முக்கியமான இந்துக் கோயில் பார்வதி கோயில் ஆகும், இது பார்வதி மலையில் அமைந்திருக்கிறது என்பதுடன் பெரும்பாலான புறநகர்ப் பகுதியிலிருந்து பார்க்கப்படக்கூடியதாகும். மிகப்பிரபலமான கோயில் சதுர்ஷிரிங்கி கோயிலாகும், இது நகரத்தின் வடமேற்குப் பகுதியில் மலைச்சரிவில் அமைந்திருக்கிறது. நவராத்திரியின்போது (வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் வருவது), பெரிய அளவிலான பூஜைகள் நடக்கும் என்பதோடு பக்தர்கள் இங்கே பிரார்த்திப்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து இங்கே கூடுகிறார்கள். புணே நகரத்தின் பிரதான கடவுள் மத்திய புனேயில் உள்ள காஸ்பா பேத்தில் தனது கோயிலைக் கொண்டுள்ள காஸ்பா கணபதி ஆகும்.

1894 ஆம் ஆண்டில் இருந்து பத்து நாட்களுக்கு நீளும் கணேஷ் சதுர்த்தி பண்டிகையை புணே கொண்டாடுகிறது, அப்போது பெரும்பாலான மக்களும் பந்தல் அமைத்து கணேஷ் சிலையை வைத்திருப்பர், அவற்றிற்கிடையே அலங்கார விளக்குகளும் இசைத் திருவிழாக்களும் நடைபெறும். இந்தத் திருவிழா கணேஷ் சிலைகள் நகரம் முழுவதிலுமிருந்து ஆற்றில் கரைக்கப்படுவதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுவதோடு முடிவடைகிறது (கணேஷ் விஸர்ஜன்). நகரத்தின் பிரதான கடவுளாக உள்ள காஸ்பா கணபதி இந்த ஊர்வலத்தில் முதலாவதாக இருக்கும். புணேயில் இந்த பொதுமக்கள் திருவிழா லோகமான்ய திலகரால் துவங்கப்பட்டதாகும், அதிலிருந்து இது பல்வேறு நகரங்களுக்கும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பெருந்திரளான மக்கள் கூடுகின்ற மும்பைக்கு பரவியது.

குறிப்பிடத்தக்க மதத் தலைவர்களான சாந்த் தியானேஸ்வர் (ஆலந்தியில் 13-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்) மற்றும் கவிஞர் சாந்த் துக்காராம் (தேஹூவில் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்) ஆகியோர் புணேவுக்கு அருகாமையில் பிறந்தவர்களாவர். நகரத்துடனான அவர்களுடைய தொடர்பு 300 கிலோமீட்டர்களுக்கு அப்பாலிருக்கும் பந்தர்பூருக்கு வருடாந்திர யாத்திரை செல்வதை நினைவுகூர்வதாக இருக்கிறது, அவர்கள் இருவருடைய உருவப்படங்களையும் பல்லக்கில் இந்துக் கடவுள் விதோபாவின் முக்கியக் கோயிலுக்கு எடுத்துச் செல்வதையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இந்த யாத்திரை ஆஷாதி ஏகாதசி நாள் நிமித்தமாக முடிவுக்கு வருகிறது.

அகமதுநகர் சாலைக்கு வெளியிலுள்ள புலேகான் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ருதிசாகர் ஆசிரமம் வேதாந்த ஆய்வு மையம் மற்றும் பீமா, பாமா மற்றும் இந்திரயாணி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் பிரத்யேகமாக அமைந்திருக்கும் தக்ஷிணாமூர்த்தி கோயில் ஆகிவற்றிற்கு புகலிடமாக இருக்கிறது. இது சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதியால் 1989-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கே ஒருவர் ஸ்ருதி மற்றும் ஸ்மருதி (வேதங்கள், பகவத் கீதை, உபநிஷத் மற்றும் புராணங்கள் உள்ளிட்டவை)ஆகியவற்றுக்கான விரிவான விளக்கங்களை மராத்தியிலும் ஆங்கிலத்திலும் காண முடியும்.

புணே சில குறிப்பிடத்தகுந்த ஆன்மீக வழிகாட்டிகளோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஓஷோ (முன்பு பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அறியப்பட்டவர்) 1970-ஆம் ஆண்டுகள் மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் புணேயில் வாழ்ந்து கற்பித்தார். உலகின் மிகப்பெரிய ஆன்மீக மையங்களுள் ஒன்றான ஒஷோ சர்வதேச தியான மையம் கோரேகான் பூங்காப் பகுதியில்தான் அமைந்திருக்கிறது. இங்கு நூறு நாடுகளிலிருந்து மக்கள் வருகை புரிகின்றனர்[31]. ஆன்மீக குருவான மெஹர் பாபா பிறந்த இடம் புணேவாக இருந்தாலும் மக்கள் வழக்கமாக மெஹர்பாத்திற்குத்தான் யாத்திரை செல்கின்றனர். மெஹர் பாபாவின் கூற்றுப்படி அவர் காலத்தில் வாழ்ந்த ஐந்து முழுமையான குருக்களுள் ஒருவரான ஹஸ்ரத் பாபாஜன் தனது கடைசி இருபத்தைந்து வருடங்களை புணேயில்தான் கழித்தார். அவர் தனது முதல் குடியிருப்பை ராஸ்டிரா பேத்தில் உள்ள புகாரி ஷாவுக்கு அருகில் இருந்த வேப்ப மரத்தின் அடியில்தான் நிறுவினார், பின்னர் அவர் தனது எஞ்சியிருந்த வாழ்நாளைக் கழிக்க புணேயின் சீர்கெட்டுப் போன பகுதியான சார் பாவ்டி எனப்படும் இடத்திலுள்ள மற்றொரு வேப்ப மரத்தின் கீழ் தனது குடியிருப்பை அமைத்துக்கொண்டார். இவர் சமாதியடைந்த புனிதக் கோயில் புணேயில் இருக்கிறது [32].

இஸ்கான் இயக்கமும் தன்னுடைய ஸ்ரீ ராதா குன்ஞ்பிஹாரி மந்திருடன் இந்த நகரத்தில் இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் யோகா குருவாக அறியப்பட்டுள்ள பி.கே.எஸ். ஐயங்கார், மாணவர்களை ஐயங்கார் யோகா அமைப்பின்படி பயிற்றுவிக்கும் விதமாக 1975-ஆம் ஆண்டு புனேயில் ரமாமணி ஐயங்கார் நினைவு யோகா நிறுவனத்தை நிறுவினார்.

அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் மற்றும் சரணாயலயங்கள்

தொகு
 
பு.லா. தேஷ்பாண்டே கார்டன்

ஆகா கான் அரண்மனை, ராஜா தின்கர் கேல்கர் அருங்காட்சியகம், மகாத்மா புலே அருங்காட்சியகம், பாபாசாகேப் அம்பேத்கார் அருங்காட்சியகம், புனே பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் தேசிய யுத்த அருங்காட்சியகம் ஆகியவை புணேயிலுள்ள மிகமுக்கியமான அருங்காட்சியகங்களாகும்.

கமலா நேரு பூங்கா, சாம்பாஜி பூங்கா, சாஹூ உதயன், பேஷ்வா பூங்கா, சரஸ் பாக், எம்ப்ரஸ் கார்டன், மற்றும் புந்த் கார்டன் போன்ற நிறைய பூங்காக்கள் புணேயில் இருக்கின்றன. தற்போது பூ லா தேஷ்பாண்டே உதயன் என்று மறுபெயரிடப்பட்டுள்ள புனே-ஓகாயாமா நட்பு பூங்கா ஜப்பான், ஓகாயாமாவில் உள்ள கோரேகான் கார்டனின் மறுபடைப்பாகும்[33].

ராஜீவ் காந்தி உயிரியல் பூங்கா நகரத்திற்கு அருகாமையில் உள்ள காட்ரேஜில் அமைந்துள்ளது[34].முன்பு பேஷ்வா பூங்காவில் அமைந்திருந்த சரணாலயம் 1999-ஆம் ஆண்டு காட்ரேஜ் பூங்காவிலுள்ள பாம்பு பூங்காவோடு இணைக்கப்பட்டது.

ராணுவப் பொறியியல் கல்லூரி அவற்றின் பெரிய படையணி உபகரண அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான சிறிய ரயில் அருங்காட்சியகத்தோடு இணைக்கப்பட்டது. மும்பை ரயில்வே பாதையில் நகரத்திலிருந்து 60 கிலோமீட்டர்கள் அப்பால் உள்ள லோனாவாலாவில் ஒரு பெரிய ரயில்வே அருங்காட்சியகம் வரவிருக்கிறது.

உணவு

தொகு

பாக்ரி (தட்டையாக்கப்பட்ட தானிய பான்கேக்குகள்) பிட்லாவுடன் (மாவில் செய்த கறி), வட பாவ், பேல்பூரி, பானிபூரி, மிஸல் மற்றும் காச்சி டபேலி, பாவ் பாஜி உள்ளிட்டவை புணேயில் கிடைக்கும் பொதுவான தெருவோர உணவுகளாகும். உலர் பழங்களைக் கொண்ட கெட்டியான மில்க்ஸேக்கான மஸ்தானி இந்த நகரத்தின் சிறப்பம்சமாகும். 17-ஆம் நூற்றாண்டில் பேஷ்வா முதலாம் பாஜி ராவின் முரண்பாடான மனைவி மஸ்தானி பெயரால் இது அழைக்கப்படுகிறது.

வேறு பலகலாச்சார நகரங்களைப் போன்றே உலகிலிருந்து வரும் உணவு அனைத்தும் இந்த நகரத்தின் உணவகங்களி்ல் கிடைக்கின்றன. பெரும் எண்ணிக்கையிலான உடுப்பி, கோலாப்பூரி மற்றும் மகாராஷ்டிர உணவகங்களும் காணப்படுகின்றன, மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு உணவளிக்கக்கூடிய குறைந்த விலைகொண்ட உணவு மையங்களும் இவற்றில் இருக்கின்றன. பிஸா ஹட், மெக்டொனால்ட்ஸ், சப்வே, கேஎஃப்சி, ஸ்மோக்கின் ஜோஸ் மற்றும் பாபா ஜோன்ஸ் உள்ளிட்ட பிரபலமான துரித உணவு மையங்களும் இந்த நகரத்தில் இருக்கின்றன. சில காஃபி இல்லங்கள் (ஈரானி காஃபி உட்பட) கஃபே காஃபி டே, மோச்சாஸ் மற்றும் பாரிஸ்டா லவாசா காஃபி போன்ற நவீன தொடர் வரிசை நிலையங்களும் இருக்கின்றன.

வைஷாலி (ஃபெர்குஸன் கல்லூரி சாலை), ஷவாரே மற்றும் ஷபாரி (ஃபெர்குஸன் கல்லூரி சாலை), பல்வேறு இடங்களில் உள்ள கல்யாண் பேல், புஷ்கர்னி பேல் (பாஜிராவ் சாலை அருகில்), சுஜாதா மஸ்தானி (சதாசிவ் பேத்), சக்கார் நகரிலுள்ள ரிலாக்ஸ் பாவ் பாஜி, துர்கா கஃபே மற்றும் ஆனந்த் ஜூஸ் பார் (கோத்ருட்டில்) மற்றும் மர்ஸோரின் சாண்ட்விட்சஸ் (கேம்ப்) ஆகியவை உள்ளூர் மக்களிடையே பிரபலமாக உள்ள உணவு/ஸ்நாக்ஸ் கடைகளாகும். கோரேகான் பூங்காவிலுள்ள ஜெர்மன் பேக்கரி, கல்யாணி பேக்கரியின் ஸ்ரூஸ்பெரி பிஸ்கெட்ஸ் ஆகியவையும் பிரபலமானவையாகும். ஸ்பைஸர் மெமோரியல் கல்லூரியால் (ஆந்த்) தயாரிக்கப்படும் சோயா பானங்களும் டக்னெட்ஸ்களும் பிரபலமானவை.

சுற்றுப்புறங்கள்

தொகு

புணே நகரம் பின்வரும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன:

  • மத்திய புணே: பதினேழு பேத்கள் அல்லது சுற்றுப்புறங்களைக் கொண்டிருக்கிறது. இவை மராட்டிய மற்றும் பேஷ்வா ஆட்சிக்காலங்களின்போது நிறுவப்பட்டு உருவாக்கப்பட்டவை என்பதோடு பழைய நகரம் என்று குறிப்பிடப்படுகின்றன.
  • மேற்குப் பகுதி புணே (உட்புறமிருப்பவை): டெக்கான் ஜிம்கானா, இராண்ட்வான் மற்றும் ஷிவாஜிநகர், கேம்ப், டோலே பட்டீல் சாலை, கிழக்கில் கோரேகான் பூங்கா மற்றும் ஸ்வார்கேட், பார்வதி, ஷங்கர் நகர், முகுந்த் நகர், மகரிஷி நகர், குல்டேக்டி மற்றும் தெற்கில் சாலிஸ்பரி பூங்கா ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது. வடக்குப் பகுதியில் உட்புற நகரம் முல்லா முத்தா நதியால் சூழப்பட்டிருக்கிறது.
  • கிழக்குப்பகுதி புணே (வெளிப்புறம்): புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிகளான வடமேற்கில் உள்ள காத்கி, ஆந்த் மற்றும் கணேஷ்கிந்த், மேற்குப் பகுதியில் உள்ள கோத்ரட் மற்றும் பால் ராட் சாலை, தென்மேற்கில் உள்ள டாடாவாடி, சஹாகர்நகர் மற்றும் தன்காவாடி, தென்கிழக்கில் உள்ள பிப்வேவாடி, லுல்லாநகர் மற்றும் மேல்புற கோந்த்வா, வடகிழக்கில் உள்ள யெர்வதா (கல்யாணி நகர் மற்றும் சாஸ்திரி நகர் உள்ளிட்டவை), வடக்குப் பகுதியில் விஸ்ராந்த்வாடி மற்றும் கிழக்கின் தென்புறத்தில் உள்ள கோர்பாடி, ஃபாத்திமாநகர், வானோவ்ரி மற்றும் ஹடாஸ்பர் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.
  • புறநகரங்கள்: வடமேற்கில் பானேர் மற்றும் பஷான், மேற்கில் பவ்தான் மற்றும் வார்ஜே, தென்மேற்கில் வாட்கோன், தயாரி மற்றும் ஆம்பிகான், தென்கிழக்கில் காட்ரேஜ், கீழ் கோந்த்வா, உந்த்ரி மற்றும் முகம்மத்வாடி, கிழக்கில் ஹடாஸ்பர் நார்த், முந்த்வா மற்றும் மஞ்ரி, வடகிழக்கில் வாட்கேயன் ஷேரி மற்றும் காரடி வடக்கில் தானோரி மற்றும் கலாஸ் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது.

புணே மெட்ரோபாலிட்டன் பகுதி, புணே நகரத்திற்கு வடமேற்கில் அமைந்துள்ள பின்வரும் பகுதிகளையும் உள்ளிட்டிருக்கிறது. இவை பிம்ப்ரி சின்ச்வால் முனிசிபல் கார்ப்பரேஷனால் நிர்வகிக்கப்படுகின்றன.

  • பிம்ப்ரியும் அதன் சுற்றுப்புறங்களும்: சிக்லி, காலேவாடி, கஸார்வாடி, புகேவாடி மற்றும் பிம்பிள் சாதகர்.
  • சின்ச்வாடும் அதன் சுற்றுப்புறங்களும்: தெர்கான், தாதாவாட், மற்றும் டாலேவாட்.
  • சங்வியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: டபோசி, வேகாட், ஹின்ஜேவாடி, பிம்பிள் நிலாக் மற்றும் பிம்பிள் குரவ்.
  • போஸாரியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: மோஷி, திகி, டுடுல்கான், மற்றும் சாரோலி புத்ருக்.
  • நிக்தி-அகுர்தியும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும்: ரேவத், தேஹூ சாலை, மற்றும் சோமாத்னே.

ஊடகமும் தகவல்தொடர்பும்

தொகு

மராத்திய செய்தித்தாள்களான சகால், லோக்சத்தா, லோக்மாத், கேசரி, மகாராஷ்டிரா டைம்ஸ் மற்றும் புதாரி ஆகியவை பிரபலமானவை. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், புனே மிர்ரர், மிட்டே, டெய்லி நியூஸ் அண்ட் அனாலிஸிஸ் (டி.என்.ஏ.) மற்றும் சகால் டைம்ஸ் (முன்னதாக மகாராஷ்டிரா ஹெரால்ட்) ஆகிய ஆங்கில தினசரிகள் உள்ளூர் கூடுதல் இணைப்புகளுடன் புணே சார்ந்த பதிப்புகளை வெளியிடுகின்றன.

ஸ்டார் மாஜா, ஜீ மராத்தி, தூர்தர்ஷன் ஷயாத்ரி மற்றும் இடிவி மராத்தி, மீ டிவி ஆகியவை பிரபலமான தொலைக்காட்சி சேனல்களாகும். பல ஆங்கில மற்றும ஹிந்தி பொழுதுபோக்கு மற்றும் செய்திச் சேனல்களும் பார்க்கப்படுகின்றன. புணே எஃப்.எம். ரேடியோ சேவைகளைக் கொண்டிருப்பதோடு கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகின்றன. பிரபலமானவற்றின் வரிசையி்ல் ரேடியோ மிர்ச்சி (98.3 MHz) முன்னணியில் இருக்கிறது என்றாலும் (இந்த நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தனியார் எஃப்.எம். சேனலாக இது இருக்கிறது,) ஏ.ஐ.ஆர். எஃப்.எம். (101 MHz), ரேடியோ சி்ட்டி(91.10), ரேடியோ ஒன் (94.30), ரெட் எஃப்.எம். (93.5) மற்றும் வித்யாவாணி (புணே பல்கலைக்கழகத்தின் சொந்த எஃப்.எம். சேனல்) ஆகியவையும் இருக்கின்றன.

புணேவை இந்தியாவின் முதல் கம்பியற்ற நகரமாக ஆக்கும் திட்டமும் இருக்கிறது. இண்டல் கார்ப்பரேஷன், புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பி.எம்.சி.) மற்றும் மைக்ரோசென்ஸ் ஆகியவை கூட்டாக இணைந்து 802.16d Wi-Fi மற்றும் WiMax நெட்வொர்க்கின் முதல் பகுதியை இந்த நகரத்தில் வணிகரீதியாக அறிமுகப்படுத்தியிருக்கின்றன. கம்பியில்லா புனே திட்டப்பணியின் முதல் பகுதி நிகழ்வு நகரத்தின் 25 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு கம்பியில்லா இணைப்பை வழங்கும். முதல் பகுதி நிறைவுற்ற பின்னர் கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் புணே முனிசிபல் கார்ப்பரேஷன் 256 kbit/s வேகமுள்ள சேவைகளை தன்னுடைய குடிமகன்களுக்கு வணிகரீதியாக வழங்க திட்டமிட்டுள்ளது.[35]

விளையாட்டும் பொழுதுபோக்கும்

தொகு

தடகள விளையாட்டுக்கள், கிரிக்கெட், கூடைப்பந்து, இறகுப்பந்து, ஃபீல்டு ஹாக்கி, கால்பந்தாட்டம், டென்னிஸ், கபடி, கோ-கோ, துடுப்பு படகோட்டம் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுக்கள் புணேயில் பிரபலமானவையாக உள்ளன. புனே பன்னாட்டு மாரத்தான் புணேயில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாரத்தான் பந்தயமாகும். 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் போட்டிகள் புணேயில் நடத்தப்பட்டன.[சான்று தேவை]

கிரிக்கெட்

தொகு

மகாராட்டிரா கிரிக்கெட் கூட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ள கிளப்புகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. அது உள்நாட்டு கிரிக்கெட் அணியைப் (மகாராட்டிரா கிரிக்கெட் அணி) பராமரிக்கிறது. இந்த அணி மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அணிகளுள் ஒன்று என்பதுடன் ரஞ்சிக் கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் லீக் போட்டிகளில் போட்டியிடுகின்றன.

கால்பந்தாட்டம்

தொகு

புணே தனக்குச் சொந்தமான புனே எஃப்சி எனப்படும் கால்பந்தாட்ட கிளப்பைக் கொண்டிருக்கிறது. இது 2007-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அணி சமீபத்தில் ஐ-லீக் பிரிவு 1 போட்டிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளது. இது ஐ-லீக் ஆட்டங்களில் விளையாட பேலாவாடி விளையாட்டுக்கள் மையத்தை பயன்படுத்துகிறது. இது புணேயின் வெளிப்புறப் பகுதிகளில் இரண்டு பயிற்சி மையங்களைக் கொண்டிருக்கிறது.

விளையாட்டு நிறுவனங்கள்

தொகு

நேரு விளையாட்டரங்கம், தி டெக்கான் ஜிம்கானா, பிஒய்சி ஹிந்து ஜிம்கானா மற்றும் பாலேவாடியில் உள்ள சிறீ சிவ் சத்ரபதி விளையாட்டு மையம் உள்ளிட்டவை புணேயில் உள்ள முக்கியமான விளையாட்டு நிறுவனங்களாகும். நேரு விளையாட்டரங்கம் மகாராட்டிர கிரிக்கெட் அணியின் சொந்த மைதானமாகும், அத்துடன் இது 1996-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுள் ஒன்று உள்ளிட்ட முக்கியமான கிரிக்கெட் ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. டெக்கான் ஜிம்கானா சில சமயங்களில் டேவிஸ் கோப்பை ஆட்டங்களை நடத்தியிருக்கிறது. பேலாவாடி மையம் 1994-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியிருக்கிறது, அத்துடன் 2008-ஆம் ஆண்டு காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டிகளையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. தி ராயல் கன்னாட் போட் கிளப் முல்லா-முத்தா நதியில் அமைந்துள்ள சில படகு கிளப்புகளுள் ஒன்றாகும்.

சாகச விளையாட்டுக்கள்

தொகு

சயாத்ரி மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளதன் காரணமாக, மலையேறுதல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானதாக புணே இருக்கிறது. தனிநபர் உயரமேறுபவர்கள் தவிர்த்து, சயாத்ரிக்கள் மற்றும் இமயமலைக்கு செல்லும் பலருக்கும் உயரமேறும் பயிற்சிப்பள்ளிகள் இருக்கின்றன. இறகுப் பந்து போட்டிகளுக்கான விதிகள் முதன்முதலாக புணேயில்தான் 1873-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன[36].

குதிரைப் பந்தயம்

தொகு

புணே குதிரைப் பந்தய மைதானம் 1830-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுடைய மொத்தப் பகுதி, 118.5 ஏக்கர்கள் ஆகும். இந்நிலம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சூலை முதல் அக்டோபர் வரை பந்தயம் நடக்கிறது.[37].

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மையங்கள்

தொகு
 
ஆகா கான் அரண்மனை

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Pune Population. World Gazetteer. Retrieved 28 July 2009
  2. Pune Metro Area Population. World Gazetteer. Retrieved 28 July 2009
  3. Nalawade, S.B. "Geography of Pune Urban Area". Ranwa. Archived from the original on 2007-12-22. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  4. "Pune History". பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
  5. 5.0 5.1 Kaul, Sanat (May 2006) (PDF). Higher Education in India: Seizing the Opportunity (working paper). Indian Council for Research on International Economic Relations, New Delhi, India. http://www.icrier.org/pdf/WP_179.pdf. பார்த்த நாள்: 2008-04-04. 
  6. 6.0 6.1 6.2 "Some Important Years In The History Of Pune". Archived from the original on 2005-02-07. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04. புனேயின் காலவரிசை
  7. "புனே வரலாற்று காலவரிசை". Punecity.com. 1916-06-22. பார்க்கப்பட்ட நாள் 2011-06-15.
  8. "Monuments in Pune". Pune district administration. Archived from the original on 2008-03-25. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
  9. "Battle of Khadki". Centre for Modeling and Simulation (புணே பல்கலைக்கழகம்). Archived from the original on 2009-04-01. பார்க்கப்பட்ட நாள் 2008-11-10.
  10. Echenberg, Myron J. (2007). Plague Ports: The Global Urban Impact of Bubonic Plague, 1894–1901. New York: New York University Press. pp. 66–68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0814722326. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  11. "M3.2 Katraj-Pune Earthquake, 2004". பார்க்கப்பட்ட நாள் 2008-04-15.
  12. "City sweats as mercury hits season's high". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2003-04-17. http://timesofindia.indiatimes.com/articleshow/43607013.cms. பார்த்த நாள்: 2008-05-10. 
  13. "Brrr... it's almost March, and Pune's shivering!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2005-02-23. http://timesofindia.indiatimes.com/articleshow/1029115.cms. பார்த்த நாள்: 2008-05-10. 
  14. "Statistics from the Traffic Control Branch, Pune". Archived from the original on 2008-05-10. பார்க்கப்பட்ட நாள் 2008-07-08.
  15. "Three routes for metro rail in city identified". 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-04-24.
  16. "About the Pune Municipal Corporation". பார்க்கப்பட்ட நாள் 2008-04-21.
  17. "Kirkee Cantonment Board: A Brief Profile". Archived from the original on 2009-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-08-22.
  18. "Pune Cantonment Board: Overview". Archived from the original on 2009-04-01. பார்க்கப்பட்ட நாள் 2008-08-22.
  19. "Indian Army: List of PIOs & Appelate Auths". Archived from the original on 2008-04-21. பார்க்கப்பட்ட நாள் 2008-05-10.
  20. Pune City Census 2011
  21. "Demographics of Pune". Punepages.com. Archived from the original on 15 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 July 2010.
  22. "The boom is over in Detroit. But now India has its own motor city". 2008-04-20. http://www.independent.co.uk/news/business/analysis-and-features/the-boom-is-over-in-detroit-but-now-india-has-its-own-motor-city-812050.html. பார்த்த நாள்: 2008-04-22. 
  23. "List of Deemed Universities". Department of Higher Education, Government of India. Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
  24. "History". Deccan Education Society. Archived from the original on 2008-06-07. பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
  25. ஹம்சினி ரவி டபாலிவாலாவின் வாழ்வில் ஒரு நாள் பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம் 25 ஜூன் 2009நசார்
  26. மராத்திய மொழியின் நிலையான வடிவம்
  27. Lisa, Klopfer (2007-07-31). "Specialism". Archived from the original on 2008-05-03. பார்க்கப்பட்ட நாள் 2008-07-19. {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
  28. Klopfer, Lisa (2004), Commercial Libraries in an Indian City: an Ethnographic Sketch (PDF), Saur, பார்க்கப்பட்ட நாள் 2009-06-21
  29. Pordié, Laurent; Lalitha, N. (2006-05-24), https://web.archive.org/web/20080720072412/http://www.ifpindia.org/ecrire/upload/ss_societies_and_medicines_presentation.pdf (PDF), Research Update: Transversal Themes of Indian Society and Medicines, Department of Social Sciences, The French Institute of Pondicherry, archived from the original (PDF) on 2008-07-20, பார்க்கப்பட்ட நாள் 2013-03-09 {{citation}}: |archive-url= missing title (help); Check date values in: |date= (help)
  30. Indian Urban Resource Millennium Assessment by NaturalistsPDF (183 KB)
  31. "Osho Meditation Resort". Osho International Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-07-24.
  32. புனேயிலுள்ள பாபாஜன் சமாதியின் கருவறைக் கல்லறைப் படம்
  33. "A Japanese paradise in Pune". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2004-09-04. http://timesofindia.indiatimes.com/articleshow/836816.cms. பார்த்த நாள்: 2008-07-24. 
  34. "By July, bigger enclosures, battery-operated vehicles for Katraj zoo". Pune Newsline (இந்தியன் எக்சுபிரசு). 2007-03-29. http://cities.expressindia.com/fullstory.php?newsid=229057. பார்த்த நாள்: 2008-07-24. 
  35. "Tech2.com India > Pune to go Wireless > News on Internet Internet & Software". Archived from the original on 2008-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-03-09.
  36. Phillips, Rachel (2002-05-07). "Badminton - From Where did it originate?". Badders.com: The Independent Voice of Badminton. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
  37. புனே குதிரைப்பந்தய மைதானம்

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புனே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே&oldid=3978699" இலிருந்து மீள்விக்கப்பட்டது