1802
1802 (MDCCCII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1802 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1802 MDCCCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1833 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2555 |
அர்மீனிய நாட்காட்டி | 1251 ԹՎ ՌՄԾԱ |
சீன நாட்காட்டி | 4498-4499 |
எபிரேய நாட்காட்டி | 5561-5562 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1857-1858 1724-1725 4903-4904 |
இரானிய நாட்காட்டி | 1180-1181 |
இசுலாமிய நாட்காட்டி | 1216 – 1217 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 14Kyōwa 1 (享和元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2052 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4135 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 1 - இலங்கை சென்னை மாகாண ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு முடிக்குரிய குடியேற்ற நாடாகப் பிரகடனம் செய்யப்பட்டு இங்கிலாந்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- மார்ச் 15 - இலங்கையின் அரச வர்த்தமானி முதன் முதலாக வெளியிடப்பட்டது.
- மார்ச் 27 - இலங்கையில் உள்ள அனைத்து டச்சு உடைமைகளையும் பிரித்தானியரிடம் கையளிக்கும் ஏமியன்சு உடன்பாடு (Treaty of Amiens) கையெழுத்திடப்பட்டது.
- மார்ச் 28 – எச். டபிள்யு. ஓல்பர்ஸ் என்பவர் பலாசு என்ற சிறுகோள் ஒன்றைக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 10 – இந்தியாவில் முதன் முதலாக பிரித்தானிய எல்லைகளை நிர்ணயிக்கும் பெரும் திரிகோண மதிப்பீடு (Great Trigonometric Survey of India) மதராசு மாகாணத்தில் ஆரம்பமானது.
- மே 20 – பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமைத்தனத்தைக் கொண்டு வரும் சட்டமூலத்தை நெப்போலியன் பொனபார்ட் கொண்டு வந்தான்.
- சூன் 2 - ஆத்திரேலியாவில் ஐரோப்பியக் குடியேற்றத்தை எதிர்த்த பழங்குடித் தலைவர் புமுல்வே என்பவர் ஹென்றி ஹாக்கிங் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ஆகத்து 6 - பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி மயிலப்பன் சேர்வைகாரர் தூக்கிலிடப்பட்டார்.
- அக்டோபர் 2 – சுவீடனுக்கும் திரிப்பொலிக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் - பிரெஞ்சு இராணுவம் சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தது.
நாள் அறியப்படாதவை
தொகு- உயிரியல் என்ற சொல்லை முதன் முதலில் டிரெவிரானசு என்பவர் பயன்படுத்தினார்.
- வெற்றிகரமான முதலாவது நீராவிக் கப்பலை வில்லியம் சிமிங்டன் என்பவர் நிர்மாணித்தார்.
- வியட்நாமில் நியூவென் வம்சம் அரசாளத் தொடங்கியது.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- ஆகத்து 6 - மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ் தளபதி
1802 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Christopher Hitchens, The Parthenon Marbles: The Case for Reunification (Verso Books, 2016)
- ↑ Coleman, Helen Turnbull Waite (1956). Banners in the Wilderness: The Early Years of Washington and Jefferson College. University of Pittsburgh Press. p. 206. இணையக் கணினி நூலக மைய எண் 2191890. Archived from the original on November 11, 2012. பார்க்கப்பட்ட நாள் July 25, 2016.
- ↑ Carolyn E. Fick, The Making of Haiti: The Saint Domingue Revolution from Below (University of Tennessee Press, 1990) p210–211