சீன நாட்காட்டி

சீன நாட்காட்டி ஓர் சூரியசந்திர நாட்காட்டியாகும்.இது சீனா தவிர பல கிழக்கு ஆசிய பண்பாடுகளில் பின்பற்றப்படுகிறது. இது சீனர்களால் கி.மு 500 ஆண்டில் சீரமைக்கப்பட்டது.[1]. கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும், கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக முறையில் பயன்படுத்தப்பட்டாலும் சீன நாட்காட்டி பரம்பரை விடுமுறை தினங்கள் சீன புத்தாண்டு (அல்லது வசந்த திருவிழா (春節), டுயான் வு பண்டிகை, மற்றும் நடு மழைக்கால பண்டிகை போன்றவற்றை குறிக்கவும், திருமண நாள்,புதுமனை புகுவிழா போன்றவற்றிற்கு சோதிடப்படி நல்லநாள் தெரிந்தெடுக்கவும் பயனாகிறது.

இந்தக் கட்டுரை சீன உரையைக் கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ சீன எழுத்துருக்களுக்கு பதிலாக தெரியலாம்.

சீன நாட்காட்டியில் பரம்பரை நாட்காட்டி வழமையாக க்சியா(Xia)நாட்காட்டி(எளிய சீனம்: 夏历; மரபுவழிச் சீனம்: 夏曆பின்யின்: xiàlì) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் துவக்கம் ஆளும் மன்னரால் தீர்மானிக்கப்பட்டு வந்த நிலையில் க்சியா மன்னராட்சி காலத்தில் கூதிர்கால கதிர்த்திருப்பத்தின் பின்னர் ஏற்படும் இரண்டாவது அமாவாசை யன்று ஆண்டு துவங்கும். இவராட்சிக்குப் பின்னர் கடந்த 2000 ஆண்டுகளாக அதே துவக்கம் பின்பற்றப்படுவதால் க்சியா நாட்காட்டி என இப்பெயரே நிலைத்தது.


சீன நாட்காட்டியை "விவசாய நாட்காட்டி" (எளிய சீனம்: 农历; மரபுவழிச் சீனம்: 農曆பின்யின்: nónglì) கிரெகொரியின் நாட்காட்டியை "பொது நாட்காட்டி" (எளிய சீனம்: 公历; மரபுவழிச் சீனம்: 公曆பின்யின்: gōnglì) என குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சீன நாட்காட்டியை,சந்திரனை பின்பற்றுவதால், "யின் நாட்காட்டி" (எளிய சீனம்: 阴历; மரபுவழிச் சீனம்: 陰曆பின்யின்: yīnlì) எனவும் கிரெகொரியின் நாட்காட்டியை,சூரியனை "யாங்க் நாட்காட்டி" (எளிய சீனம்: 阳历; மரபுவழிச் சீனம்: 陽曆பின்யின்: yánglì)எனவும் குறிப்பிடப்படுவதும் உண்டு. கிரெகொரியின் நாட்காட்டி அலுவலக நாட்காட்டியாக அறிவித்தப் பிறகு, அதனை புதிய நாட்காட்டி (எளிய சீனம்: 新历; மரபுவழிச் சீனம்: 新曆பின்யின்: xīnlì) எனவும் சீன நாட்காட்டியை பழைய நாட்காட்டி(எளிய சீனம்: 旧历; மரபுவழிச் சீனம்: 舊曆பின்யின்: jiùlì) எனவும் கூறுவதும் உண்டு.

2009ஆம் ஆண்டு சீன நாட்காட்டியில் எருதின் ஆண்டாகும் (Year of the Ox).சனவரி 26,2009 முதல் பிப்ரவரி 14,2010 வரை இவ்வாண்டு இருந்தது.

ஆண்டுகள் பன்னிரு விலங்குகள் (十二生肖 shí'èr shēngxiào, "பன்னிரு பிறப்பு சின்னங்கள்" அல்லது 十二屬相

shí'èr shǔxiàng, "பன்னிரு உடமை சின்னங்கள்") மூலம் குறிக்கப்படுகின்றன.அவை:எலி(rat), எருது(ox),புலி(tiger),முயல்(rabbit), டிராகான்(dragon), பாம்பு(snake), குதிரை(horse), ஆடு(sheep), குரங்கு(monkey),சேவல்(rooster), நாய்(dog), மற்றும் பன்றி(pig). தற்போதைய ஆண்டு (ஜனவரி 31, 2014 முதல் பிப்ரவரி 18, 2015 வரை) குதிரையின் Wǔnián ஆண்டாகும்.

நவீன ஹான் நாட்காட்டி

தொகு

சூரியன் மற்றும் நிலவு

தொகு

சந்திர சுற்றுப்பாதையின் முறையற்ற தண்மை கி.மு. 1 ஆம் நூற்றாண்டு முதலே அறியப்படுகிறது என்றாலும், 619ஆம் ஆண்டு வரை மாதங்களின் துவக்கம், சூரியன் மற்றும் சந்திரனின் சராசரி இயக்கத்தை பயன்படுத்தி கணக்கிடப்பட்டது.

ஹான் நாட்காட்டி அமைப்பு

தொகு

கூறுகள்

தொகு
 • நாள் - நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரை
 • மாதம் - ஒரு அம்மாவாசையிலிருந்து அடுத்த அம்மாவாசை வரை, சுமார் (29 + 17/32) நாட்கள்.
 • தேதி - மாதத்தில் இருக்கும் ஒரு நாள், 1 முதல் 30 வரை வரிசைப்படுத்தியிருக்கும்
 • வருடம் - ஒரு வசந்த காலம் தொடக்கத்திலிருந்து அடுத்த வசந்த காலம் வரை. சுமார் (365 + 31/128) நாட்கள்
 • ராசி - 1/12 வருடம், அதாவது சுமார் (30 + 7/16) நாட்கள்

இந்து நாட்காட்டியைப் போலவே, சீன நாட்காட்டியும் சூரியசந்திர நாட்காட்டயே.

நாள் ( ri, 日)

தொகு

சீன நாட்காட்டியில் ஒரு நாள் என்பது கிரிகோரியன் நாட்காட்டியில் உள்ளது போல நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை கணக்கிடப்படும்.

ஒரு நாளின் உட்பிரிவுகள்

தொகு

நவீன சீனாவில் ஒரு நாளை, மேற்கத்திய பாணியில் மணி-நிமிடம்-நொடி என பிரித்துள்ளனர். ஆனால் பழைய தரம் இன்னும் சில வேளைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வாரம்

தொகு

நாட்கள் பல்வேறு வகையான வாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. அவை

 • வழக்கமான வகையில் ஏழு நாட்கள் கொண்ட வாரம்.
 • நவீன கால சீனாவில் பயன்படுத்தப்படுத்தப்படும் எண்களால் தீர்மானிக்கப்படும் வாரம். (星期一, முதல் நாள்; 星期二, இரண்டாம் நாள்; 星期三, மூன்றாம்-நாள்; 星期四, நான்காம் நாள்; 星期五, ஐந்தாம் நாள்; 星期六, ஆறாம் நாள்). இதற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் விதிவிலக்கு. (星期日, ஞாயிற்றுக்கிழமை)
 • ஒவ்வொறு நான்கு வாரமும் 28 நாட்களை கொண்ட வாரமாக கொள்ளப்படும்.
 • 10 நாட்கள் கொண்ட வாரம்.
 • 12 நாட்கள் கொண்ட வாரம்.

விடுமுறை தினங்கள்

தொகு

சீன நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒன்பது முக்கிய திருவிழாக்கள் உள்ளன. இவற்றில் ஏழு திருவிழாக்கள் நிலவு நாட்காட்டியை கொண்டும், மற்ற இரண்டு திருவிழாக்கள் சூரிய விவசாய நாட்காட்டியினை கொண்டும் தீர்மானிக்கப்படுகிறது. பாரம்பரிய நிலவு நாட்காட்டியின் துல்லியமற்றத்தன்மையினால் விவசாயிகள் உண்மையில் பயிர்களை பயிரிடும் காலத்தை தீர்மானிக்க சூரிய நாட்காட்டியை பயன்படுத்தினர். இருப்பினும் பாரம்பரிய நிலவு நாட்காட்டியே விவசாயிகளின் நாட்காட்டி என அழைக்கப்பட்டது. க்விங் மிங் திருவிழா மற்றும் குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா ஆகியவை முக்கியமான விடுமுறை தினங்கள் ஆகும்.

தேதி தமிழ் ஆங்கிலம் சீனம் வியட்நாமிய மொழி குறிப்புகள் 2008 2009 2010 2011 2012 2013 2014
Zhēngyuè 1st சீன புத்தாண்டு Chinese New Year 春節 chūnjié Nguyên Đán (元旦) 3-15 நாட்கள் குடும்பம் ஒன்று கூடி கொண்டாடுவது 0207 0126 0214 0203 0123 0210 0131
Zhēngyuè 15th விளக்கு திருவிழா Lantern Festival 元宵節 yuánxiāo Thượng Nguyên (上元) விளக்கு அணிவகுப்பு மற்றும் Yuanxiao உண்பது. 0221 0209 0228 0217 0206 0224 0214
Wǔyuè 5th டிராகன் படகு திருவிழா Dragon Boat Festival 端午 duānwǔ Đoan Ngọ (端午) டிராகன் படகு பந்தயம் மற்றும் zongzi உண்பது. 0608 0528 0616 0606 0623 0612 0602
Qīyuè 7th க்வி க்சி Night of Sevens 七夕 qīxī Thất tịch காதலர் தினம் 0807 0826 0816 0806 0823 0813 0802
Qīyuè 15th ஆவி திருவிழா Ghost Festival 中元節 zhōngyuán Trung Nguyên (中元) இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினம். 0815 0903 0824 0814 0831 0821 0810
Bāyuè 15th நடு இலையுதிர் கால திருவிழா Mid-Autumn Festival 中秋 Zhōngqiū Trung Thu (中秋) குடும்பத்துடன் ஒன்றுகூடி நிலவு கேக் உண்பது 0914 1003 0922 0912 0930 0919 0908
Jǐuyuè 9th இரட்டை ஒன்பதாவது திருவிழா Double Ninth Festival 重陽 chóngyáng Trùng Cửu (重九) மலை ஏறுதல் மற்றும் மலர் கண்காட்சி 1007 1026 1016 1005 1023 1013 1002
Shíyuè 15th க்சியாயுவான் Xiàyuán Festival 下元節 xiàyuán Hạ Nguyên (下元) நீர் கடவுளிடம் ஒரு அமைதியான ஆண்டு வேண்டி பிரார்த்தனை 1112 1201 1120 1110 1128 1117 1206
Làyuè 23rd or 24th சமையலறை கடவுள் திருவிழா Kitchen God Festival 小年 xiǎonián Táo Quân (竈君) சமையலறை கடவுள் வழிபாடு 0131 0119 0207 0127 0117 0204 0211
April 4 or 5 க்விங் மிங் திருவிழா Qingming Festival 清明節 qīngmíng Thanh Minh (清明) கல்லறை துடைத்தல் 0404 0404 0405 0405 0404 0404 0405
December 21 or 22 குளிர்கால சூரியச்சலன சாய்வு திருவிழா Winter Solstice Festival 冬至 dōngzhì Lễ hội Đông Chí குடும்பத்துடன் ஒன்றுகூடி டாங் யோன் உண்பது 1221 1221 1222 1222 1221 1221 1222

மேற்கோள்கள்

தொகு
 1. Calendars, Time, & Numerology - Egyptian Roots & Mathematical Precision of Our Modern Calendar

கூடுதலாகக் காண்க

தொகு

செயலிகள்

தொகு
ஐபோன் செயலி
 1. https://itunes.apple.com/in/app/vedicpanchangam/id862232382?mt=8

வெளியிணைப்புகள்

தொகு
நாட்காட்டிகள்
அட்டவணை மாற்றம்
விதிமுறைகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_நாட்காட்டி&oldid=3835697" இலிருந்து மீள்விக்கப்பட்டது