பெப்ரவரி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
<< | பெப்ரவரி 2023 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | ||||
MMXXIII |
பெப்பிரவரி அல்லது பிப்பிரவரி அல்லது பெப்புருவரி என்பது கிரெகொரியின் நாட்காட்டியின் இரண்டாவது மாதமாகும். இதுதான் வருடத்தின் சிறிய மாதம் ஆகும். இம்மாதமானது நெட்டாண்டுகளில் மட்டும் 29 நாட்களை பெற்றிருக்கும். பிற வருடங்களில் 28 நாட்களைக் கொண்டிருக்கும். உரோமானிய கடவுள் பிப்பிரசிடமிருந்து இம்மாதம் தனது பெயரை பெற்றுள்ளது.
பிப்பிரவரி என்பது "சுத்தப்படுத்தல்" என்னும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். புராதன உரோமானியர்கள் பிப்பிரவரி மாதம் 15 ஆம் தேதி 'பெப்பிரா' எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காகச் சூட்டப்பட்டது என்றும் கூறுவர்.
13ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாக்குரொபாசுகோ (Sacrobosco) என்பவரின் கண்டுபிடிப்பின் படி கிமு45 - கிமு8 காலப்பகுதியில் பெப்பிரவரி மாதத்தில் சாதாரண ஆண்டில் 29 நாட்களூம் இலீப்பு ஆண்டுகளில் 30 நாட்களும் இருந்ததாக சிலர் நம்பினார்கள். ஆனால் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்காட்டிகளில் 1712ம் ஆண்டில் பெப்பிரவரி 30 என்ற நாள் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறப்பு மாதம் தொகு
- ஐக்கிய அமெரிக்கா, கனடா: கறுப்பு சரித்திர மாதம்
- நூலக விரும்பிகளின் மாதம்
- வேலன்டைன் நாள் (பெப்ரவரி 14)
- அனைத்துலக தாய்மொழி நாள் (பெப்ரவரி 21)
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | சூன் | சூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | திசம்பர் |