சாதாரண ஆண்டு

சாதாரண ஆண்டு பொதுவான ஆண்டு வகையாகும். கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு சாதாரண ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. ஒரு சாதாரண ஆண்டில் 52 வாரங்கள் மற்றும் ஒரு நாள் உள்ளது. அதனால் ஆண்டின் துவக்க நாளும் முடியும் நாளும் ஒரே கிழமையில் நிகழும். (உ.ம். 2010 ஆண்டில் சனவரி 1 மற்றும் டிசம்பர் 31 செவ்வாய்க்கிழமையில் நிகழ்ந்தன)

கிரிகோரியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 303 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாகும். ஜூலியன் நாட்காட்டியில் 400 ஆண்டுகளில் 300 ஆண்டுகள் சாதாரண ஆண்டுகளாக உள்ளன.

சந்திர நாட்காட்டி மற்றும் சூரியசந்திர நாட்காட்டியில் சாதாரண ஆண்டு 354 நாட்களைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதாரண_ஆண்டு&oldid=3378473" இலிருந்து மீள்விக்கப்பட்டது