2014
2014 ஆம் ஆண்டு (MMXIV) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். இது கிபி 2014 என்றும் அழைக்கப்படுகிறது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 14ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 14ஆம் ஆண்டும், 2010களின் ஐந்தாம் ஆண்டும் ஆகும்.
ஆயிரமாண்டு: | 3-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
2014 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2014 MMXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 2045 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2767 |
அர்மீனிய நாட்காட்டி | 1463 ԹՎ ՌՆԿԳ |
சீன நாட்காட்டி | 4710-4711 |
எபிரேய நாட்காட்டி | 5773-5774 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
2069-2070 1936-1937 5115-5116 |
இரானிய நாட்காட்டி | 1392-1393 |
இசுலாமிய நாட்காட்டி | 1435 – 1436 |
சப்பானிய நாட்காட்டி | Heisei 26 (平成26年) |
வட கொரிய நாட்காட்டி | 103 |
ரூனிக் நாட்காட்டி | 2264 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4347 |
ஐக்கிய நாடுகள் அவை 2014 ஆம் ஆண்டை குடும்ப வேளாண்மை மற்றும் படிகவியல் ஆண்டாக அறிவித்தது.[1]
நிகழ்வுகள்
தொகுசனவரி 2014
தொகு- சனவரி 1 - யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது.
- ஜனவரி 30 - மகேந்திரகிரியில் அமைந்துள்ள திரவ உந்து மையம் தன்னாட்சி உரிமை பெற்றது.
பெப்ரவரி 2014
தொகு- பெப்ரவரி 1 - மும்பை மோனோரயில் திட்டம் ஆரம்பமானது.
- பெப்ரவரி 1 - இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 3 - உலகில் மிக வயதான பெரும் பூநாரை தனது 83 ஆவது வயதில் ஆத்திரேலியாவின் அடிலெயிட் நகரில் இறந்தது.
- பெப்ரவரி 4 - எகிப்தின் தெற்கே எத்ஃபூ என்ற பண்டைய குடியேற்றப் பகுதியில் 4,600 ஆண்டு காலப் பழமையான படிப் பிரமிது ஒன்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- பெப்ரவரி 4 - ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
- பெப்ரவரி 6 - ஆத்திரேலியாவில் புதிய இன இராட்சத சொறிமுட்டை கண்டுபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 7 - 23 - 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உருசியாவின் சோச்சி நகரில் இடம்பெற்றன.
- பெப்ரவரி 7 - கிலாலம் மொழி பேசும் கடைசி அமெரிக்க பழங்குடி இனத்தவர் இறந்தார்.
- பெப்ரவரி 9 - மிகப் பழமையானதாகக் கருதப்படும் எஸ்.எம்.எஸ்.எஸ் ஜெ031300.36-670839.3 என்ற விண்மீன் 13.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது என ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
- பெப்ரவரி 9 - ஆபிரிக்காவிற்கு வெளியே சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- பெப்ரவரி 11 - அல்ஜீரியா ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 103 பேர் கொல்லப்பட்டனர்.*பெப்ரவரி 13 - இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் கெலூட் எரிமலை வெடித்தது.
- பெப்ரவரி 13 - வதையா இறப்பை 18 வயதிற்குட்பட்டோருக்கும் நீடிக்க பெல்ஜியம் சட்டம் கொண்டு வந்தது.
- பெப்ரவரி 14 - ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் துறந்தார்.
- பெப்ரவரி 16 - நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 17 - 200 ஈஎம்26 என்ற பெரும் சிறுகோள் ஒன்று பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றித் தாண்டிச் சென்றது.
- பெப்ரவரி 18 - இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
- பெப்ரவரி 18 - தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- பெப்ரவரி 22 - உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் புதிய இடைக்காலத் தலவரானார்.
- பெப்ரவரி 24 - மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 4.4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான படிகம் பூமியின் மிகப்பழமையான மேலோடு என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெப்ரவரி 27 - கெப்லர் (விண்கலம்) புதிதாக 715 கோள்களைக் கண்டுபிடித்தது.
மார்ச் 2014
தொகு- மார்ச் 5 - தமது அரசுக்கு எதிராக சதி செய்வதாகக் குற்றம் சாட்டி பனாமாவுடனான தூதரகத் தொடர்புகளை வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் நிக்கோலசு மதுரோ முறித்துக் கொண்டார்.
- மார்ச் 8 - 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 தாய்லாந்து வளைகுடாவிற்கு மேல் காணாமல் போனது. இது இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- மார்ச் 8 - ஆசியக் கிண்ணம் 2014: இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.
- மார்ச் 18 - சனிக் கோளின் டைட்டான் துணைக்கோளில் திரவ அலைகள் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. வெளி உலகில் திரவ அலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும்.
- மார்ச் 21 - உக்ரைனின் பகுதியான கிரிமியாவை உருசியாவுடன்]] இணைக்கும் சட்டமூலத்தில் உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் கையெழுத்திட்டார்.
- மார்ச் 24 - கிரிமியா பிரச்சினை தொடர்பாக ஜி8 அமைப்பில் இருந்து உருசியா இடைநிறுத்தி வைக்கப்பட்டது.
- மார்ச் 27 - இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன.
- மார்ச் 27 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க ஜநா மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்தது.
ஏப்ரல் 2014
தொகு- ஏப்ரல் 16 - தென் கொரியாவில் 476 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டனர், 100 பேரைக் காணவில்லை.
- ஏப்ரல் 27 - முன்னாள் திருத்தந்தைகள் 23ம் யோவான், மற்றும் 2ம் அருள் சின்னப்பர் ஆகியோரைக் கத்தோலிக்கத் திருச்சபை புனிதர்களாக அறிவித்தது.
- ஏப்ரல் 30 - இலங்கையில் பளை நோக்கிச் சென்ற விரைவு தொடருந்து ஒன்று மாத்தறை நோக்கிச் சென்ற விரைவு வண்டி ஒன்றுடன் குருணாகல் பொத்துகெர என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதியதில் 75 பேர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 30 - புரூணையில் கடுமையான இசுலாமியச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மே 2014
தொகு- மே 2 - 3,607.4 மீ உயரத்தில் உலகின் மிக உயரமான சுரங்க ரயில் பாதை சீனாவில் திறக்கப்பட்டது.
- மே 12 - 1974 ஆம் ஆண்டில் சைப்பிரசு நாட்டை ஆக்கிரமித்து வடக்கு சைப்பிரசு என்ற அங்கீகரிக்கப்படாத பிராந்தியத்தை உருவாக்கியமைக்காக துருக்கி 124 மில்லியன் டாலர்கள் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- மே 13 - எயிட்டியின் வடக்குக் கரைக்கு அப்பால் கொலம்பசு பயன்படுத்திய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- மே 16 - இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அஇஅதிமுக 37 இடங்களைக் கைப்பற்றியது.
- மே 16 - இந்தியப் பொதுத் தேர்தலில் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 339 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. ஆளும் காங்கிரசுக் கூட்டணி 59 இடங்களைக் கைப்பற்றியது.
- மே 18 - ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைத் தரைப்படையால் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியா தொடர்பாக இராணுவத்தினர் இழைத்ததாகக் கருதப்படும் மேலும் பல போர்க்குற்றப் படங்கள் வெளியாகின.
- மே 22 - தாய்லாந்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
- மே 23 - கொங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.
- மே 26 - நரேந்திர மோதி 15வது இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.
- மே 31 - ஆப்கானித்தானில் தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒரேயொரு அமெரிக்க ஆயுதப் படையினனான போவ் பேர்க்டால் என்பவர் குவாண்டானமோ விரிகுடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆப்கானியக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.
சூன் 2014
தொகு- சூன் 1 - ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா அதிகாரபூர்வமாக இந்தியாவின் 29வது மாநிலமானது. (இந்துத்தான் டைம்சு) பரணிடப்பட்டது 2014-06-07 at the வந்தவழி இயந்திரம்
- சூன் 2 - ஆப்பிள் நிறுவனம் சுவிஃப்ட் என்ற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தியது.
- சூன் 2 - பாலத்தீன அரசுத்தலைவர் மகுமுது அப்பாஸ் ஃபத்தா, ஹமாஸ் உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஒன்றிணைவு அரசை அறிவித்தார்.
- சூன் 4 - அமெரிக்காவில் பெண்ணின் தோலினால் பிணைக்கப்பட்ட ஒரு புத்தகம் ஹார்வடு பல்கலைக்கழக நூலகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
- சூன் 5 - அயர்லாந்தில் துவாம் என்ற இடத்தில் 796 குழந்தைகளின் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- சூன் 6 - மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா தொற்றுநோயின் தாக்கத்தில் 200 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
- சூன் 8 - கராச்சியின் ஜின்னா விமானநிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 10 - ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் இசுலாமியத் தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
- சூன் 12 - ஈராக்கிய குர்துகள் கிர்க்குக் நகரைக் கைப்பற்றினர்.
- சூன் 12 - 2014 உலகக்கோப்பை காற்பந்து: ஆரம்ப நிகழ்வுகள் பிரேசிலில் ஆரம்பமாயின.
- சூன் 13 - பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நாடாளுமன்றத் தடையை நாடாளுமன்றக் குழு அங்கீகரித்தது.
- சூன் 14 - உக்ரைனிய இராணுவ விமானம் ஒன்றை உருசிய-ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.
- சூன் 14 - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
- சூன் 15 - வடக்கு வரீசித்தானில் பாக்கித்தானியப் படையினர் படை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- சூன் 16 - இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், 2014: இலங்கையின் தெற்கே பேருவளையில் வெல்லிப்பிட்டி பள்ளிவாசல் அருகே முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் நடந்த வன்முறைகளின் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 78 பேர் காயமடைந்தனர். பள்ளிவாசல்கள், மற்றும் கடைகள் எரியூட்டப்பட்டன.
- சூன் 18 - துருக்கியில் 1980 இல் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பங்குகொண்ட முன்னாள் அரசுத்தலைவர் கேனன் எவ்ரென், 96, ஆயுள் தண்டனை பெற்றார்.
- சூன் 19 - நைஜீரியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சானி அபாச்சா தனது ஆட்சிக் காலத்தில் 1990களில் கொள்ளையடித்த பணத்தின் ஒரு பகுதியான 227 மில்லியன் டாலர்களை லீக்டன்ஸ்டைன் நைஜீரியாவுக்குக்த் திரும்பத் தர ஒப்புதல் அளித்துள்ளது.
- சூன் 20 - இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய அகதிகளின் எண்ணிக்கை 50 மில்லியனை 2013 ஆம் ஆண்டில் தாண்டியது.
- சூன் 22 - இந்தியாவில் குஜராத்தில் உள்ள 11ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராணி-கி-வாவ் படித்துறை கிணறு, மியான்மரின் பியூ பழமை நகரங்கள் உலகப் பாரம்பரியக் களமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- சூன் 23 - மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா, டென்மார்க்கின் ஸ்டெவன்சு கிளின்ட் ஆகியவை உலகப் பாரம்பரியக் களமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- சூன் 25 - பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தின் கிளை அமைப்பான ஜமாத்-உத்-தாவாவை பயங்கரவாத இயக்கமாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
- சூன் 26 - இலங்கையில் இந்துக் கோயில்களில் நடத்தப்படும் மிருக பலி யாகங்களை முழுமையாகத் தடை செய்ய முடியாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- சூன் 28 - முதலாம் உலகப் போருக்கு வழிவகுத்த ஆத்திரிய இளவரசர் பிரான்சிஸ் பேர்டினண்ட்டின் படுகொலையின் 100 ஆம் ஆண்டு நினைவை பொசுனியா எர்செகோவினாவின் சாரயேவோ நகரம் நினைவு கூர்ந்தது.
- சூன் 28 - 2014 சென்னை கட்டிட விபத்து: சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் 11-மாடிக் குடியிருப்பு கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
- சூன் 29 - நைஜீரியாவில் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறித்தவக் கோவில்களை இசுலாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
சூலை 2014
தொகு- சூலை 1 - இந்திய-அமெரிக்க அறிவியலாளர் அக்கோரி சின்ஹாவை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய அமெரிக்கா அண்டார்க்டிகாவில் உள்ள மலை ஒன்றுக்கு சின்ஹா என்று பெயர் வைத்தது.
- சூலை 2 - பொது இடத்தில் மது அருந்தும் சுதந்திரம் மக்களுக்கு உள்ளதென இலங்கை நீதிமன்றம் ஒன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
- சூலை 3 - தொங்கா அரசு லாவு தீவுகளுக்காக சர்ச்சைக்குரிய மினெர்வா பவழப்பாறைப் பகுதியை பிஜி நாட்டுக்கு வழங்கும் திட்டம் ஒன்றைப் பரிந்துரைத்துள்ளது.
- சூலை 8 - இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே வங்காள விரிகுடா குறித்த எல்லைத் தகராறு பற்றி விசாரித்த ஐக்கிய நாடுகள் அவையின் நிரந்தர நடுவர் நீதிமன்றம் வங்காளதேசத்துக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது.
- சூலை 13 - 2014 உலகக்கோப்பை காற்பந்து: இறுதிப் போட்டியில் செருமனி அணி அர்ச்சென்டீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலகக்கோபையைக் கைப்பற்றியது.
- சூலை 15 - பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கை ஒன்றை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
- சூலை 15 -மாஸ்கோவில் சுரங்கத் தொடருன்று ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- சூலை 16 - ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் அபூர்வமான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது. இவ்வால்வெள்ளி இரு பொருட்களால் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது.
- சூலை 16 - 1995 பொசுனியா போரின் போது சிரெபிரெனிக்காவில் 300 இற்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.
- சூலை 17 - ஆம்ஸ்டர்டாம் இலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைனின் தோனெத்ஸ்க்கில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
- சூலை 18 - பொலிவியாவில் 10 வயது சிறுவர்கள் பாடசலைக்கு சென்றுகொண்டே சுய தொழிலில் ஈடுபடவும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தவும் அனுமதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டது.
- சூலை 23 - லித்துவேனியா நாடு 2015 சனவரி 1 முதல் யூரோவைத் தனது நாணயமாக வைத்திருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டது.
- சூலை 24 - இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மேடக்கில் பாதுகாப்பற்ற கடவையைக் கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது தொடருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 20 மாணவர்கள் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
- சூலை 24 - புர்க்கினா பாசோவில் இருந்து 116 பேருடன் அல்சீரியா நோக்கிப் புறப்பட்ட ஏர் அல்சீரியா விமானம் 5017 புறப்பட்ட 50 நிமிடங்களில் தொடர்புகளை இழந்தது. இதன் சிதந்த பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சூலை 27 - பிலிப்பீன்சின் மக்கள்தொகை 100 மில்லியனைத் தாண்டியது.
- சூலை 30 - லைபீரியாவில் பரவி வரும் எபோலா நோயைத் தடுக்கும் நோக்கில் அங்குள்ள பள்ளிகள் மூடப்பட்டன. மேற்கு ஆப்பிரிக்காவில் 672 பேர் இதுவரை உயிரிழந்தனர்.
- சூலை 31 - தைவானின் கவ்ஷியூங் நகரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 271 பேர் காயம் அடைந்தனர்.
ஆகத்து 2014
தொகு- ஆகத்து 1 - எபோலா ஆட்கொல்லி நோய் பரவியதை அடுத்து லைபீரியா, சியேரா லியோனி நாடுகள் அவசரகால நிலையைப் பிறப்பித்தன. பள்ளிகள் மூடப்பட்டன.
- ஆகத்து 2 - தமிழறிஞர் தனிநாயகம் அடிகளின் உருவச்சிலை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.
- ஆகத்து 3 - முதலாம் உலகப் போரில் பிரான்சு மீது செருமனி போரை அறிவித்த நாளின் நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் நிகழ்வில் பிரெஞ்சு, மற்றும் செருமனி அரசுத்தலைவர்கள் பங்குபற்றினர்.
- ஆகத்து 5 - பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: எகிப்திய மத்தியத்தத்துடன் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இசுரேலியப் படையினர் காசா கரையில் இருந்து வெளியேறினர்.
- ஆகத்து 6 - 2014 யுன்னான் நிலநடுக்கம்: சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்தது.
- ஆகத்து 6 - ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் சுற்றுப்பாதையை அடைந்தது. வால்வெள்ளி ஒன்றின் சுற்றுப்பாதையை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
- ஆகத்து 8 - அமெரிக்க எப்/ஏ-18 போர்விமானங்கள் ஈராக்கின் இசுலாமிய தேசப் போராளிகளின் தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தின.
- ஆகத்து 8 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா வைரசு பரவல் ஒரு உலகளாவிய அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
- ஆகத்து 9 - விடுதலை மற்றும் நீதிக் கட்சி என்ற முசுலிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியை எகிப்திய நீதிமன்றம் கலைத்தது.
- ஆகத்து 12 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த்தாக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது.
- ஆகத்து 15 - பிலிப்பீன்சில் பாங்சமோரோ என்ற தனி அலகு ஒன்றை அமைப்பதற்கு மோரோ இசுலாமிய விடுதலை முன்னணியுடன் பிலிப்பீன்சு அரசு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
- ஆகத்து 16 - சியோல் நகரில் 19ம் நூற்றாண்டில் நம்பிக்கைக்காக இறந்த 124 கத்தோலிக்கர்களை திருத்தந்தை பிரான்சிசு புனிதப்படுத்தினார்.
- ஆகத்து 19 - இசுலாமிய தேச இயக்கத்தினர் 2012 இல் சிரியாவில் கடத்தப்பட்ட அமெரிக்க செய்தியாளர் ஜேம்சு ஃபோலி என்பவரின் தலையைத் துண்டித்துக் கொலை செய்து, அதைக் காணொளியில் எடுத்து வெளியிட்டனர்.
- ஆகத்து 20 - சப்பானில் நிலச்சரிவுகள் காரணமாக 27 பேர் உயிரிழந்தனர்.
- ஆகத்து 23 - பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை: இசுரேலுக்கு உளவு பார்த்தாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பாலத்தீனர்களை ஹமாஸ் இயக்கத்தினர் பகிரங்கமாக சிரச்சேதம் செய்தனர்.
- ஆகத்து 24 - எபோலா தொற்றுநோய்த் தாக்கத்தால் காங்கோ சனநாயகக் குடியரசில் இருவர் உயிரிழந்தனர்.
- ஆகத்து 25 - நைஜீரியாவில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை போகோ அராம் இயக்கத்தினர் இசுலாமிய நாடாகப் பிரகடனப்படுத்தினர்.
- ஆகத்து 29 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: செனிகலில் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டார்.
செப்டம்பர் 2014
தொகு- செப்டம்பர் 3 - இலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- செப்டம்பர் 6 - இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 10 - புற்றுநோயைத் தோற்றுவிக்கும் புற ஊதாக் கதிர்களைக் கட்டுப்படுத்தும் ஓசோன் படலத்தின் பருமன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புதிய ஐநா ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
- செப்டம்பர் 12 - நாசாவின் செவ்வாய்த் தரையுளவியான கியூரியோசிட்ட் தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது.
- செப்டம்பர் 18 - குறு ஒளிர்வண்டம் எம்60-யூசிடி1 என்ற குறு ஒளிர்வண்டம் மீபெரும் கருந்துளையை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய விண்மீன் பேரடை என அறியப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 19 - இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014: இசுக்கொட்லாந்து விடுதலைக்கு எதிராக (55.3%) வாக்களித்தது.
- செப்டம்பர் 22 - நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.
- செப்டம்பர் 24 - இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை வெற்றிகரமாக அடைந்தது.
- செப்டம்பர் 27 - சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் செயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. செயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
- செப்டம்பர் 27 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது.
- செப்டம்பர் 30 - பர்மிய கடும்போக்கு தேரர், அசின் விராத்து, இலங்கையின் பௌத்த இயக்கமான பொது பல சேனா இயக்கத்தினரும் இணைந்து, இசுலாமியப் போராளிகளுக்கு எதிராக போராடப் போவதாக கொழும்பில் அறிவித்தனர்.
அக்டோபர் 2014
தொகு- அக்டோபர் 10 - 2014 அமைதிக்கான நோபல் பரிசு பாக்கித்தானின் மலாலா யூசப்சையி, இந்தியாவின் கைலாசு சத்தியார்த்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
- அக்டோபர் 16 - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்தது.
- அக்டோபர் 18 - கென்யாவில் மிக அருகிய இன ஆண் வடக்கு வெள்ளை மூக்குக்கொம்பன் ஒன்று இறந்தது.
- அக்டோபர் 29 - 2014 பதுளை மண்சரிவு: இலங்கையின் மலையகத்தில் பதுளையில் இடம்பெற்ற மண்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டனர்.
- அக்டோபர் 30 - சுவீடன் பாலத்தீன நாட்டை அதிகாரபூர்வமாக சுதந்திர நாடாக அங்கீகரித்தது. இசுரேல் சுவீடனுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்தது.
- அக்டோபர் 31 - புர்க்கினா பாசோவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து அரசுத்தலைவர் பிளைசி கொம்போரே பதவி விலகினார். இராணுவத்தலைவர் ஒனோரே டிராரே இடைக்காலப் பொறுப்பை ஏற்றார்.
நவம்பர் 2014
தொகு- நவம்பர் 12 - ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்திலிருந்து ஏவப்பட்ட பிலே தரையிறங்கி 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியின் மேற்பரப்பினை அடைந்தது.
- நவம்பர் 13 - மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: மேற்கு ஆப்பிரிக்காவின் கினி, லைபீரியா, சியேரா லியோனி ஆகிய நாடுகளில் இறந்தோரின் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது.
- நவம்பர் 14 - 67பி வால்வெள்ளியில் தரையிறங்கிய ஃபிலே விண்கலம் பூமியுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியதை அடுத்து அதன் மின்கலன்கள் போதிய சூரிய வெளிச்சம் இல்லாமையினால் செயலிழந்தன.
- நவம்பர் 23 - உலக சதுரங்கப் போட்டி 2014: உருசியாவின் சோச்சி நகரில் நோர்வே ஆட்டக்காரர் மாக்னசு கார்ல்சன் இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த்தை எதிர்த்து 11வது ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
- நவம்பர் 23 - இசுரேல் ஒரு யூதர்களின் நாடு என்பதை அங்கீகரிக்கும் சட்டத்திற்கு இசுரேலிய அம்மைச்சரவை ஒப்புதல் அளித்தது.
டிசம்பர் 2014
தொகு- டிசம்பர் 3 - சப்பான் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளில் இருந்து மண், பாறை மாதிரிகளை எடுத்துவர தனது ஹயபுசா 2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.
- டிசம்பர் 6 - ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் UTC இரவு 8:00 மணிக்கு விழித்துக் கொண்டது. இது புளூட்டோ மற்றும் அதன் சந்திரன்களை ஆராயும்.
- டிசம்பர் 12 - இலங்கை கொழும்பு நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அத்துருகிரிய என்ற இடத்தில் வான்படையின் அந்தோனொவ்-32 ரக விமானம் ஒன்று வீழ்ந்து எரிந்ததில் 4 படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.
- டிசம்பர் 15 - ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் உணவுசாலை ஒன்றில் ஆயுதம் தாங்கிய நபர் 17 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்த நிகழ்வு 16 மணி நேரத்தின் பின்னர் டிசம்பர் 16 அதிகாலை காவல்துறையின் அதிரடித் தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்தது. இரண்டு பணயக் கைதிகளும் துப்பாக்கி நபரும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர்.
- டிசம்பர் 16 - 2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்: பாக்கித்தான், பெசாவர் நகரில் இராணுவத்தினரால் நடத்தப்படும் பள்ளிக்கூடம் ஒன்றில் தாலிபான்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 132 சிறுவர்கள் உடபட குறைந்தது 141 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆறு தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 17 - ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து பாலத்தீன ஹமாஸ் அமைப்பை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியது.
- டிசம்பர் 28 - இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 சாவகக் கடல் வான்பரப்பில் காணாமல் போனது.
இறப்புகள்
தொகு- சனவரி 3 - ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (பி. 1954)
- சனவரி 5 - எய்சேபியோ, போர்த்துக்கீச காற்பந்து வீரர் (பி. 1942)
- சனவரி 11 - ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)
- சனவரி 12 - அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
- சனவரி 13 - அஞ்சலிதேவி, திரைப்பட நடிகை (பி. 1927)
- சனவரி 16 - ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவசாதிகாரி (பி. 1922)
- சனவரி 16 - சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்துப் பெண் எழுத்தாளர்
- சனவரி 17 - சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)
- சனவரி 19 - ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (பி. 1929)
- சனவரி 22 - அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1924)
- சனவரி 23 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி (பி. 1953)
- சனவரி 27 - ஆர். ஏ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
- பெப்ரவரி 2 - பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (பி. 1967)
- பெப்ரவரி 8 - பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1930)
- பெப்ரவரி 13 - பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)
- பெப்ரவரி 17 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)
- பெப்ரவரி 25 - பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசைக்கலைஞர் (பி. 1947)
- பெப்ரவரி 26 - கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)
- பெப்ரவரி 27 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
- மார்ச் 7 - பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
- மார்ச் 20 - குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- மார்ச் 25 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)
- ஏப்ரல் 17 - கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (பி. 1927)
- ஏப்ரல் 17: கர்பால் சிங், மலேசிய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1940)
- மே 14 - சுவாமி சித்ரூபானந்தா, பருத்தித்துறை இராமகிருஷ்ண சாரதா சேவாச்சிரம நிறுவனர்
- மே 17 - சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
- மே 21 - ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)
- சூன் 2 - துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பி. 1924)
- சூன் 3 - கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1949)
- சூன் 12 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (பி. 1925)
- சூன் 12 - கொடுக்காப்புளி செல்வராஜ், நகைச்சுவை நடிகர்
- சூலை 7 - எதுவார்து செவர்துநாத்சே, ஜார்ஜியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (பி. 1928)
- சூலை 10 - சோரா சேகல், இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1912)
- சூலை 13 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)
- சூலை 17 - சுபா ஜெய், மலேசியத் தொலைக்காட்சி, திரைப்பட நடிகை (பி. 1976)
- சூலை 20 - தண்டபாணி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- சூலை 23 - சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
- சூலை 29 - ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
- சூலை 29 - ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)
- சூலை 31 - சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்
- ஆகத்து 11 - ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)
- ஆகத்து 19 - அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (பி. 1933)
- ஆகத்து 20 - பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)
- ஆகத்து 22 - யூ. ஆர். அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)
- ஆகத்து 24 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (பி. 1923)
- ஆகத்து 27 - விக்டர் இசுடெங்கர், அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர் (பி. 1935)
- ஆகத்து 30 - பிபன் சந்திரா, இந்திய வரலாற்றறிஞர் (பி. 1928)
- ஆகத்து 31 - சத்திராசு லட்சுமி நாராயணா, தெலுங்குத் திரைப்பட இயக்குனர், ஓவியர் (பி. 1933)
- செப்டம்பர் 1 - பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)
- செப்டம்பர் 2 - நோமன் கோர்டன், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1911)
- செப்டம்பர் 3 - ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (பி. 1930)
- செப்டம்பர் 7 - சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (பி. 1929)
- செப்டம்பர் 19 - உ. ஸ்ரீநிவாஸ், மேண்டலின் இசைக் கலைஞர் (பி. 1969)
- செப்டம்பர் 29 - வாரன் அண்டர்சன், யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் (பி. 1921)
- அக்டோபர் 2 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- அக்டோபர் 14 - காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)
- அக்டோபர் 20 - ராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
- அக்டோபர் 21 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (பி. 1916)
- அக்டோபர் 24 - எஸ். எஸ். ராஜேந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1928)
- அக்டோபர் 24 - தேனுகா, கலை, இலக்கிய விமரிசகர்
- அக்டோபர் 28 - மைக்கேல் சாட்டா, சாம்பியாவின் அரசுத்தலைவர் (பி. 1937)
- நவம்பர் 8 - வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1933)
- நவம்பர் 10 - எம். எஸ். எஸ். பாண்டியன், சமூக ஆய்வாளர், பேராசிரியர்
- நவம்பர் 18 - சி. ருத்ரைய்யா, தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1947)
- நவம்பர் 23 - செல்வா கனகநாயகம், பேராசிரியர், எழுத்தாளர்
- நவம்பர் 24 - முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (பி. 1937)
- நவம்பர் 26 - எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)
- நவம்பர் 27 - பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1988)
- டிசம்பர் 4 - வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் (பி. 1914)
- டிசம்பர் 8 - நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (பி. 1927)
- டிசம்பர் 19 - எஸ். பாலசுப்பிரமணியன், திரைப்பட தயாரிப்பாளர், விகடன் குழும உரிமையாளர் (பி. 1936)
- டிசம்பர் 23 - கே. பாலச்சந்தர், திரைப்பட இயக்குனர் (பி. 1930)
நோபல் பரிசுகள்
தொகு- வேதியியல் – எரிக் பெட்சிக், இசுடீபன் எல், வில்லியம். ஈ. மோர்னர்
- இயற்பியல் – இசாமு அக்காசாக்கி, இரோசி அமானோ, சுச்சி நாக்காமுரா
- உடலியங்கியலும் மருத்துவமும் – ஜான் ஓ'கீஃப், மே-பிரிட் மோசர், எட்வர்டு மோசர்
- இலக்கியம் – பத்திரிக்கு மொதியானோ
- அமைதி – கைலாசு சத்தியார்த்தி, மலாலா யூசப்சையி
- பொருளியல் – ழோன் திரோல்
2014 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "United Nations Observances". ஐக்கிய நாடுகள் அவை. பார்க்கப்பட்ட நாள் சூலை 26, 2012.