யுன்னான் (எளிய சீனமொழி 云南, மரபார்ந்த சீனமொழி 雲南 ஆங்கிலம் Yunnan) என்பது சீனாவின் மாகாணங்களில் ஒன்று. இது சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் தலைநகர் குன்மிங். கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இது ஹன் அரச வம்சத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.[1][2][3]

எல்லை

தொகு

சீனாவின் மாகாணங்களில் திபெத்து, சிச்சுவான், குயீசூ, குவாங்சீ ஆகியவற்றுடனும் மியான்மர், லாவோஸ், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுடனும் எல்லையைக் கொண்டுள்ளது.

ஆளுமைப் பிரிவு

தொகு

எட்டு நகரப்பகுதிகள் எட்டு தன்னாட்சிப்பகுதிகள் என இது பதினாறு பிரிவுகளைக் கொண்டது. தாலி நகரம் முக்கிய இடம் பெறுகிறது.

மக்கள்

தொகு

இங்கு பல்வேறு இன மக்கள் வசிக்கின்றனர். சீன அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 56 இனக்குழுக்களில் 35 இனக்குழு இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர்.

இயற்கை வளங்கள்

தொகு

இது இயற்கை வளங்களும், தாதுக்களும் நிரம்பிய பகுதி. இங்கு காப்பி தயாரிப்பு முக்கிய இடம் பெறுகிறது. அரிசி, சோளம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன.

இம்மாகாணத்தின் வடமேற்கில் உயர்ந்த மலைகளும் தென்கிழக்கில் தாழ்ந்த நிலப்பகுதியும் உள்ளன. இங்குள்ள இயற்கைச் சூழலால் கவரப்பட்டுப் பலர் வருகின்றனர். சுற்றுலாத் துறையும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யுனெசுகோவின் பாரம்பரியக் களங்களும், தேசியப் பூங்காக்களும் இங்கு உள்ளன.

போக்குவரத்து

தொகு

இங்கு ரயில் போக்குவரத்து வசதி உண்டு. பிற நாடுகளை இணைக்கும் சாலைப் போக்குவரத்தும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Doing Business in Yunnan Province of China". Ministry of Commerce, People's Republic Of China. Archived from the original on 7 January 2019. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013.
  2. "Communiqué of the Seventh National Population Census (No. 3)". National Bureau of Statistics of China. 11 May 2021. Archived from the original on 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
  3. "National Data". China NBS. March 2024. பார்க்கப்பட்ட நாள் June 22, 2024. see also 2023年云南省国民经济和社会发展统计公报 (in சீனம்). yunnan.gov.cn. March 29, 2024. பார்க்கப்பட்ட நாள் June 22, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுன்னான்&oldid=4102517" இலிருந்து மீள்விக்கப்பட்டது