ஆகத்து 2
நாள்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 2 (August 2) கிரிகோரியன் ஆண்டின் 214 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 215 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 151 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது.
- கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது.
- 1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
- 1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் போது என்றி அட்சன் இன்றைய அட்சன் விரிகுடாவை அடைந்தார்.
- 1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது.
- 1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- 1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
- 1830 – |பிரான்சின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.
- 1858 – இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
- 1870 – உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
- 1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது.
- 1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டா வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆத்திரியாவினால் தாரந்தோவில் மூழ்கடிக்கப்பட்டது.
- 1918 – கனடிய வரலாற்றில் முதல் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.
- 1922 – சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1932 – பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1934 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவரானார்.
- 1937 – ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.
- 1939 – அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படகு ஒன்று சப்பானியக் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. லெப். ஜான் எஃப். கென்னடி (பின்னாளைய அமெரிக்க அரசுத்தலைவர்) உயிர் தப்பினார்.
- 1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாட்சிகளுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. இவ்வதைமுகாமில் 18 மாதங்களில் 900.000 கைதிகள் கொல்லப்பட்டனர்.
- 1944 – சோசலிச மக்கெடோனியக் குடியரசு உருவானது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நேச நாடுகளின் பொட்ஸ்டாம் உச்சி மாநாடு நிறைவடைந்தது.
- 1947 – புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
- 1973 – மான் தீவில் டக்லசு நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
- 1980 – இத்தாலியில் பொலோனா தொடருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 1985 – டெல்ட்டா ஏர்லைன்சு 191 விமானம் டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
- 1989 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பில் மீண்டும் இணைந்தது.
- 1989 – 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
- 1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
- 1999 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் நுழைந்தனர்.
- 2014 – சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 146 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1834 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சிய சிற்பி (இ. 1904)
- 1859 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (இ. 1919)
- 1861 – பிரபுல்லா சந்திர ராய், வங்காளதேச வேதியியலாளர் (இ. 1944)
- 1876 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (இ. 1963)
- 1913 – தனிநாயகம் அடிகள், ஈழத்துத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1980)
- 1923 – சிமோன் பெரெஸ், இசுரேலின் 9வது அரசுத்தலைவர் (இ. 2016)
- 1926 – ஜோர்ஜ் ஹபாஷ், பாலத்தீனத் தலைவர் (இ. 2008)
- 1929 – வித்தியா சரண் சுக்லா, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2013)
- 1930 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
- 1932 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)
- 1941 – சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற லக்சம்பர்கு-பிரான்சிய மருத்துவர்
- 1945 – பங்கர் ராய், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர்
- 1950 – கிரகாம் ஆன்கோக், பிரித்தானிய எழுத்தாளர், ஊடகவியலாளர்
- 1958 – அர்சாத் அயூப், இந்தியத் துடுப்பாளர்
- 1964 – மேரி லூயீஸ் பார்க்கர், அமெரிக்க நடிகை
- 1974 – சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளார்
- 1976 – சாம் வோர்திங்டன், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகர்
- 1979 – தேவி ஸ்ரீ பிரசாத், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
- 257 – முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
- 686 – ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635)
- 1819 – அஸிம்-உத்-தவுலா, கர்நாடகத்தின் நவாப் (பி. 1775)
- 1849 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய அல்பேனியத் தளபதி (பி. 1769)
- 1922 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-கனடியப் பொறியியலாளர் (பி. 1847)
- 1957 – ஜார்ஜி யபேர், பிரெஞ்சு உடற்கல்வி பயிற்சியாளர், கோட்பாட்டாளர் (பி. 1875)
- 1976 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1890)
- 1996 – வி. பி. கணேசன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர்
- 2000 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (பி. 1929
- 2012 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
- 2013 – வெ. தட்சிணாமூர்த்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
- 2013 – சக்தி அ. பாலையா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (பி. 1925
சிறப்பு நாள்
- குடியரசு நாள் (மாக்கடோனியக் குடியரசு)