ஆகத்து 9
நாள்
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 9 (August 9) கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 222 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.
- 378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.
- 1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார்.
- 1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.
- 1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.
- 1655 – ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
- 1814 – கிறீக் அமெரிக்கப் பழங்குடியினர் அலபாமா, ஜோர்ஜியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளை அமெரிக்காவுக்குக் கையளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- 1830 – பத்தாம் சார்லசு முடிதுறந்ததை அடுத்து லூயி பிலிப் பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1842 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ராக்கி மலைத்தொடரின் கிழக்கே எல்லை அமைப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.
- 1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1896 – ஓட்டொ லிலியென்தால் மிதவை வானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.
- 1902 – ஏழாம் எட்வர்டு, தென்மார்க்கின் அலெக்சாந்திரா ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
- 1902 – யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.[1]
- 1907 – தெற்கு இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகத்து 1-இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
- 1925 – இந்தியா, லக்னோவில் கக்கோரி என்ற இடத்தில் தொடருந்து ஒன்று இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பினரால் கொள்ளையிடப்பட்டது.
- 1936 – 11-வது ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஓவென்ஸ் தனது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சாவோ தீவு சமரில், கூட்டுக் கடற்படையினர் சப்பானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் நாகசாகி நகர் மீது ஐக்கிய அமெரிக்கா கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் 23,200-28,200 சப்பானிய போர்ப் பணியாளர்கள், 2,000 கொரியத் தொழிலாளிகள், 150 சப்பானியப் போர் வீரர்கள் உட்பட 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1945 – சப்பானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட மஞ்சூரியா மீது சோவியத் செஞ்சேனைப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.
- 1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார். அவரது துணைத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அரசுத்தலைவரானார்.
- 1991 – யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் சூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
- 1992 – மயிலந்தனைப் படுகொலைகள்: இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்
- 1999 – உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பிரதமர் செர்கே இசுடெப்பாசினை பதவியில் இருந்து அகற்றி, முழு அமைச்சரவையையும் கலைத்தார்.
- 2006 – திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1776 – அமேடியோ அவகாதரோ, இத்தாலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1856)
- 1819 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன், அமெரிக்கப் பல் மருத்துவர் (இ. 1868)
- 1845 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (இ. 1937)
- 1861 – டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு, அமெரிக்க வானியலாளர் (இ. 1942)
- 1896 – ஜீன் பியாஜே, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1980)
- 1897 – ஈ. கிருஷ்ண ஐயர், இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1968)
- 1904 – சரளாதேவி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பெண்ணியலாளர் (இ. 1986)
- 1909 – வி. கே. கோகாக், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (இ. 1992)
- 1911 – வில்லியம் ஆல்பிரெட் பவுலர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர் (இ. 1996)
- 1915 – மரேத்தா வெசுட்டு, அமெரிக்க வானியலாளர், நிலவியலாளர் (இ. 1998)
- 1921 – சிசு நாகேந்திரன், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (இ. 2020)
- 1921 – எஸ். ஏ. ரகீம், இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
- 1922 – பிலிப் லர்கின், ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1985)
- 1923 – அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர் (இ. 2008)
- 1930 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (இ. 2015)
- 1933 – எம். டி. வாசுதேவன் நாயர், மலையாள எழுத்தாளர்
- 1934 – லூயிஸ் வீரபிள்ளை, இரியூனியன் அரசியல்வாதி (இ. 2002)
- 1941 – க. ப. அறவாணன், தமிழக எழுத்தாளர்
- 1953 – ழோன் திரோல், நோபல் பரிசு பெற்ற பிரான்சியப் பொருளியலாளர்
- 1961 – ஜோன் கீ, நியூசிலாந்தின் 38வது பிரதமர்
- 1963 – விட்னி ஊசுட்டன், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2012)
- 1968 – எரிக் பானா, ஆத்திரேலிய நடிகர்
- 1975 – மகேஷ் பாபு, இந்திய நடிகர்
- 1985 – அனா கென்ட்ரிக், அமெரிக்க நடிகை
- 1991 – ஹன்சிகா மோட்வானி, இந்திய நடிகை
இறப்புகள்
- 1516 – இரானிமசு போசு, இடச்சு ஓவியர் (பி. ~1450)
- 1919 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர் (பி. 1834[])
- 1942 – இதித் ஸ்டைன், செருமானியப் புனிதர் (பி. 1891)
- 1948 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய அறிவியலாளர் (பி. 1895)
- 1949 – எட்வர்ட் லீ தார்ண்டைக், அமெரிக்க உளவியலாளர் (பி. 1874)
- 1962 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவிசு எழுத்தாளர், கவிஞர் (பி. 1877)
- 1989 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (பி. 1917)
- 2008 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (பி. 1957)
- 2008 – மஹ்மூட் தர்வீஷ், பாலத்தீன எழுத்தாளர் (பி. 1941)
- 2016 – பஞ்சு அருணாசலம், தமிழ்த் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் (பி. 1941)
- 2016 – கலிகோ புல், இந்திய-அருணாச்சலப் பிரதேச அரசியல்வாதி (பி. 1969)
- 2023 – செ. இராசு, தமிழகக் கல்வெட்டறிஞர், தொல்லியலாளர், நூலாசிரியர் (பி. 1938)
சிறப்பு நாள்
- பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
- தேசிய நாள் (சிங்கப்பூர்)
- தேசிய பெண்கள் நாள் (தென்னாபிரிக்கா)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72