1856
1856 (MDCCCLX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1856 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1856 MDCCCLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1887 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2609 |
அர்மீனிய நாட்காட்டி | 1305 ԹՎ ՌՅԵ |
சீன நாட்காட்டி | 4552-4553 |
எபிரேய நாட்காட்டி | 5615-5616 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1911-1912 1778-1779 4957-4958 |
இரானிய நாட்காட்டி | 1234-1235 |
இசுலாமிய நாட்காட்டி | 1272 – 1273 |
சப்பானிய நாட்காட்டி | Ansei 3 (安政3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2106 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4189 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 31 - கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாரிஸ் உடன்பாடு எட்டப்பட்டது.
- ஜூன் 24 - இலங்கையில் முதன் முறையாக புகைப்படக் கலை (photographic art) பார்ட்டிங் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூலை 17 - பென்சில்வேனியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 60 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 10 - லூசியானாவில் இடம்பெற்ற சூறாவளியில் லாஸ்ட் தீவு அழிந்து பல சிறிய தீவுகளாகப் பிரிந்தன. 400 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- டிசம்பர் 9 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகுபிறப்புகள்
தொகு- மே 6 - சிக்மண்ட் பிராய்ட், ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் (இ. 1939)
- ஜூலை 10 - நிக்கோலா தெஸ்லா, செர்பியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1943)
- ஜூலை 23 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
- ஜூலை 26 - ஜார்ஜ் பெர்னாட் ஷா, அயர்லாந்து நாடக ஆசிரியர் (இ. 1950)
- டிசம்பர் 18 - ஜெ. ஜெ. தாம்சன், ஆங்கில இயற்பியலார் (இ. 1940)
- அம்பலவாணர் கனகசபை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் [இ. 1927)
இறப்புகள்
தொகு- ஜூன் 26 - மக்சு இசுரேனர், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1806)
- ஜூலை 9 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (பி. 1776]])
- ஜூலை 29 - ராபர்ட் சூமான், ஜெர்மனிய இசையமைப்பாளர் (பி. 1810]])