செப்டம்பர் 18
நாள்
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 18 (September 18) கிரிகோரியன் ஆண்டின் 261 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 262 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 104 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார்.
- 1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார்.
- 1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார்.
- 1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது.
- 1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது.
- 1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது.
- 1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது.
- 1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் முக்கால் பகுதியை அழித்துவிட்டு அணைந்தது. பெத்ரோவ்ஸ்கி அரண்மனையில் இருந்து நெப்போலியன் கிரெம்ளினுக்கு வந்தான்.
- 1851 – த நியூயார்க் டைம்ஸ் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
- 1872 – இரண்டாம் ஒஸ்கார் சுவீடன்–நோர்வேயின் மன்னராக முடி சூடினார்.
- 1906 – ஆங்காங்கில் ஏற்பட்ட புயல் மற்றும் ஆழிப்பேரலையினால் 10,000 பேர் உயிரிழந்தனர்.
- 1911 – உருசியப் பிரதமர் பியோத்தர் ஸ்டோலிப்பின் கீவ் ஒப்பேரா மாளிகையில் சுடப்பட்டார்.
- 1919 – நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1922 – உலக நாடுகள் அணியில் அங்கேரி இணைந்தது.
- 1924 – மகாத்மா காந்தி இந்து-முசுலிம் ஒற்றுமைக்காக 21-நாள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
- 1934 – உலக நாடுகள் அணியில் சோவியத் ஒன்றியம் இணைந்தது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: இக்னாசி மொஸ்சிக்கியின் தலைமையிலான போலந்து அரசு உருமேனியாவுக்கு தப்பி ஓடியது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் வாரணாசி நகரம் நாட்சி ஜெர்மனியின் நீர்மூழ்கியினால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 77 குழந்தைகள் உட்படப் பல அகதிகள் உயிரிழந்தனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சோபிபோர் என்ற இடத்தில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: டென்மார்க் யூதர்களை வெளியேற இட்லர் உத்தரவிட்டார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சப்பானின் ஜூனியோ மாரு என்ற கப்பலைத் தாக்கியதில் போர்க்கைதிகள், மற்றும் அடிமைகள் உட்பட 5,600 பேர் கொல்லப்பட்டனர்.
- 1948 – ஐதராபாத் இராணுவம் சரணடைய ஒப்புக்கொண்டதை போலோ நடவடிக்கையை இந்தியா கைவிட்டது.
- 1959 – வன்கார்ட் 3 விண்கலம் பூமியைச் சுற்றிவர அனுப்பப்பட்டது.
- 1960 – பிடல் காஸ்ட்ரோ ஐநா கூட்டத்தொடரில் பங்குபற்ற நியூயோர்க் நகரை அடைந்தார்.
- 1961 – ஐநாவின் பொதுச்செயலர் டாக் ஹமாஷெல்ட் காங்கோவில் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1962 – புருண்டி, ஜமேக்கா, ருவாண்டா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
- 1972 – இடி அமீனினால் விரட்டப்பட்ட முதல் தொகுதி உகாண்டா மக்கள் ஐக்கிய இராச்சியத்தை வந்தடைந்தனர்.
- 1973 – பகாமாசு, கிழக்கு செருமனி, மேற்கு செருமனி ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1974 – சூறாவளி ஃபீஃபி ஒந்துராசைத் தாக்கியதில் 5,000 பேர் உயிரிழந்தனர்.
- 1976 – பெய்ஜிங் நகரில் மா சே துங்கின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
- 1977 – வொயேஜர் 1 விண்கலம் பூமியையும் சந்திரனையும் சேர்த்துப் படம் எடுத்தது.
- 1980 – சோயுஸ் 38 கியூபாவைச் சேர்ந்த விண்வெளி வீரருடனும் ஒரு உருசியருடனும் விண்வெளி சென்றது.
- 1981 – பிரான்சில் மரணதண்டனையை நீக்கும் தீர்மானத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் வாக்களித்தது.
- 1982 – லெபனானில் கிறிஸ்தவ துணை இராணுவத்தினர் 600 பாலஸ்தீனரைக் கொன்றனர்.
- 1988 – பர்மாவில் அரசியலமைப்பு நிறுத்திவைக்கப்பட்டது. மக்களாட்சிக்கு ஆதரவானோர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். 8888 எழுச்சி முடிவுக்கு வந்தது.
- 1990 – லீக்கின்ஸ்டைன் ஐநாவில் இணைந்தது.
- 1997 – அமெரிக்க ஊடகத் தொழிலதிபர் டெட் டேர்னர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு $1 பில்லியன் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
- 1999 – கிழக்கிலங்கை, அம்பாறையில் உகனை, மகா ஓயா எல்லைக் கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[1]
- 2006 – கிழக்கிலங்கை, அம்பாறையில் 11 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2007 – மியான்மரில் பௌத்த பிக்குகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.
- 2011 – 2011 சிக்கிம் நிலநடுக்கம் வடகிழக்கு இந்தியா, நேபாளம், பூட்டான், வங்காளதேசம், தெற்கு திபெத்து ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
- 2014 – ஐக்கிய இராச்சியத்தில் இருந்து பிரிவதற்கான பொது வாக்கெடுப்பில் 55.3% இசுக்கொட்லாந்து மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.
- 2016 – இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் யூரி என்ற நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில், 19 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 53 – திராயான், உரோமைப் பேரரசர் (இ. 117)
- 1709 – சாமுவேல் ஜோன்சன், ஆங்கிலேயக் கவிஞர், அகராதியியலாளர் (இ. 1784)
- 1765 – பதினாறாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1846)
- 1889 – பரலி சு. நெல்லையப்பர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1971)
- 1908 – விக்தர் அம்பர்த்சுமியான், சார்ச்சிய-ஆர்மீனிய வானியலாளர் (இ. 1996)
- 1925 – இரா. சாரங்கபாணி, தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர் (இ. 2010)
- 1928 – பண்டரிபாய், தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2003)
- 1949 – விஷ்ணுவர்தன், இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (இ. 2009)
- 1950 – சபனா ஆசுமி, இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி, நாடக நடிகை
- 1961 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2013)
- 1968 – உபேந்திரா, இந்திய நடிகர், பாடகர்
- 1971 – லான்சு ஆம்ஸ்டிராங், அமெரிக்க மிதிவண்டி வீரர்
- 1973 – ஜேம்ஸ் மார்ஸ்டன், அமெரிக்க நடிகர்
- 1976 – ரொனால்டோ, பிரேசில் கால்பந்தாட்ட வீரர்
- 1979 – வினய், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1986 – பல்ஜிந்தர் சிங், இந்திய தடகள வீரர்
- 1989 – அசுவினி பொன்னப்பா, இந்திய இறக்கை பந்தாட்ட வீரர்
இறப்புகள்
- 1783 – லியோனார்டு ஆய்லர், சுவிசு கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1707)
- 1945 – இரட்டைமலை சீனிவாசன், ஆதி திராவிடர் இயக்கத் தலைவர் (பி. 1859)
- 1958 – பக்வான் தாஸ், இந்திய இறை மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1869)
- 1961 – டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (பி. 1905)
- 1966 – வித்துவான் க. வேந்தனார், ஈழத் தமிழறிஞர் (பி. 1918)
- 1967 – ஜான் கொக்ரொஃப்ட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1897)
- 1970 – ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க பாடகர் (பி. 1942)
- 1978 – ஆபிரகாம் கோவூர், இலங்கை, மலையாள உளவியலாளர் (பி. 1898)
- 1992 – முகம்மது இதயத்துல்லா, இந்தியாவின் 6வது குடியரசுத் துணைத் தலைவர் (பி. 1905)
- 2005 – ஆவாபாய் பொமாஞ்சி வாடியா, இலங்கை-இந்திய சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் (பி. 1913)
- 2011 – டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1929)
- 2018 – ராபர்ட் வெஞ்சூரி, அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1925)
சிறப்பு நாள்
- எயிட்சு விழிப்புணர்வு நாள் (அமெரிக்கா)
- உலக நீர் கண்காணிப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Principal Ceylon Events, 1999". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 18 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்