1889
1889 (MDCCCLXXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1889 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1889 MDCCCLXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1920 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2642 |
அர்மீனிய நாட்காட்டி | 1338 ԹՎ ՌՅԼԸ |
சீன நாட்காட்டி | 4585-4586 |
எபிரேய நாட்காட்டி | 5648-5649 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1944-1945 1811-1812 4990-4991 |
இரானிய நாட்காட்டி | 1267-1268 |
இசுலாமிய நாட்காட்டி | 1306 – 1307 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 22 (明治22年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2139 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4222 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 4 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் பிரதி ஆளுநர் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- ஜனவரி 8 - ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான (tabulating machine) காப்புரிமம் பெற்றார்.
- ஏப்ரல் 22 - நடுப் பகலில் பல்லாயிரக் கணக்கானோர் காணிகளைக் கைப்பற்றுவதற்காக ஓடினார்கள். சில மணி நேரங்களில் ஐக்கிய அமெரிக்காவில் ஒக்லகோமா மற்றும் கத்ரி (Guthrie) ஆகியவற்றில் 10,000 பேர் அங்கிருந்த வெற்றுக் காணிகளைக் கைப்பற்றிக் குடியேறினர்.
- மே 2 - எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
- மே 6 - பாரிசில் ஐஃபல் கோபுரம் திறந்துவைக்கப்பட்டது.
- மே 31 - பென்சில்வானியாவில் அணைக்கட்டு ஒன்று சேதமடைந்ததில் 2,200 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 3 - அமெரிக்காவின் வில்லா மிட்டி அருவி அருகில் இருந்து 23 கிமீ துரத்தில் ஓரகன் என்னுமிடத்தில் உள்ள போர்ட்லண்ட் பகுதி தெருவிளக்கை எரியவைக்க முதன் முதலில் மின்சாரம் பயன்பட்டது.
- ஜூலை 8 - வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதல் இதழ் வெளிவந்தது.
- செப்டம்பர் 23 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - இந்து சாதனம், த ஹிண்டு ஓர்கன் (the Hindu Organ) ஆகிய பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டன.
- அக்டோபர் 6 - தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்.
நாள் அறியப்படாதவை
தொகு- கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் பிரித்தானியரால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- பெப்ரவரி 8 - சொலொமன் ஜோன்பிள்ளை , சிலோன் பேட்ரியட் இதழின் ஆசிரியர், ஆங்கில எழுத்தாளர்.
- பெப்ரவரி 21 - இன்னாசித்தம்பி, சில்லாலையைச் சேர்ந்த பிரபல சுதேச மருத்துவர்.
- மே 12 - ஜோன் கட்பெரி
- அக்டோபர் 11 - ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்