அக்டோபர் 27
நாள்
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 27 (October 27) கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார்.
- 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது.
- 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது.
- 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது.
- 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது.
- 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர்.
- 1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது.
- 1867 – கரிபால்டியின் படைகள் ரோம் நகருள் புகுந்தன.
- 1870 – 140,000 பிரெஞ்சுப் படை வீரர்கள் மெட்சு நகரில் இடம்பெற்ற போரில் புருசியாவிடம் சரணடைந்தனர்.
- 1904 – முதலாவது சுரங்க நியூயார்க் நகர சப்வே பாதை திறக்கப்பட்டது. இதுவே ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பெரியதும், உலகில் மிகப் பெரிய சுரங்கப் பாதைகளில் ஒன்றும் ஆகும்.
- 1907 – அங்கேரியில் செர்னோவா என்ற இடத்தில் கிறித்தவக் கோவிலில் வழிபாட்டின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
- 1914 – முதலாம் உலகப் போரில் பிரித்தானிக் கடற்படை முதலாவது தோல்வியைச் சந்தித்தது. ஓடாசியசு என்ற போர்க்கப்பல் அயர்லாந்தின் வடமேற்கே செருமனியின் கண்ணிவெடித் தாக்குதலில் மூழ்கியது.
- 1922 – தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இணைய ரொடீசியாவில் இடம்பெற்ற பொதுவாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
- 1924 – உஸ்பெக் சோவியத் குடியரசு சோவியத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டது.
- 1936 – திருமதி வாலிசு சிம்ப்சன் மணமுறிவு பெற்றார். இது அவருக்கு இங்கிலாந்தின் மன்னர் எட்டாம் எட்வர்டைத் திருமணம் புரிய வழிவகுத்தது. இத்திருமணத்தால் எட்டாம் எட்வர்டு முடிதுறக்க நேரிட்டது.
- 1958 – பாக்கித்தானின் முதலாவது அரசுத்தலைவர் இஸ்காண்டர் மிர்சா இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து இறக்கப்பட்டு இராணுவத் தலைவர் அயூப் கான் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- 1961 – நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 ஏவூர்தியை விண்ணுக்கு ஏவியது.
- 1961 – மூரித்தானியா, மங்கோலியா ஆகியன ஐக்கிய நாடுகள் அவையில் சேர்ந்தன.
- 1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் அமெரிக்காவின் யூ-2 விமானம் சோவியத் தயாரிப்பு நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1971 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 1973 – 1.4 கிகி விண்வீழ்கல் கொலராடோவின் கேனன் நகரைத் தாக்கியது.
- 1979 – செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1981 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி ஒன்று சுவீடனின் கிழக்குக் கரையில் மூழ்கியது.
- 1982 – யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது.
- 1990 – வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம்: யாழ்ப்பாண மாவட்டத்தைத் தாயகமாக கொண்ட முசுலிம்கள் அனைவரும் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
- 1991 – துருக்மெனிஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1999 – ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பிரதமர், அவைத் தலைவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 – பாரிசில் இரண்டு முசுலிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் ஏற்பட்டது.
- 2007 – காங்கோவில் இடம்பெற்ற பெரு வெள்ளம் காரணமாக 30 பேர் உயிரிழந்து, 100 பேர் காயமடைந்தனர்.
- 2014 – 2002, சூன் 20 இல் ஆரம்பிக்கப்பட்ட எரிக் இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டு பிரித்தானிய இராணுவம் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறியது.
- 2017 – காத்தலோனியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புகள்
- 1782 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய இசைக்கலைஞர் (இ. 1840)
- 1855 – இவான் விளாதிமீரொவிச் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (இ. 1935)
- 1858 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1919)
- 1904 – ஜத்தீந்திர நாத் தாஸ், இந்திய விடுதலைப் போராளி, புரட்சியாளர் (இ. 1929)
- 1911 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (இ. 1972)
- 1920 – கே. ஆர். நாராயணன், இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் (இ. 2005)
- 1932 – சில்வியா பிளாத், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1963)
- 1941 – சிவகுமார், தமிழக நடிகர்
- 1942 – மாவை சேனாதிராஜா, இலங்கை அரசியல்வாதி, ஈழ செயற்பாட்டாளர்
- 1945 – லுலா ட சில்வா, பிரேசிலின் 35வது அரசுத்தலைவர்
- 1946 – இவான் ரியட்மேன், செக்-கனடிய நடிகர்
- 1952 – ரொபேர்டோ பெனினி, இத்தாலிய நடிகர், இயக்குநர்
- 1968 – திலீப், மலையாள நடிகர்
- 1977 – குமார் சங்கக்கார, இலங்கைத் துடுப்பாளர்
- 1985 – சுனிதா ராவ், இந்திய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை
- 1986 – டேவிட் வார்னர், ஆத்திரேலிய துடுப்பாளர்
இறப்புகள்
- 1449 – உலுக் பெக், பாரசீக வானியலாளர், சுல்தான் (பி. 1394)
- 1605 – அக்பர், முகலாயப் பேரரசர் (பி. 1542)
- 1845 – சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1785)
- 1930 – எல்லன் காயேசு, அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1851)
- 1982 – ழான் ஃபில்லியொசா, பிரான்சிய இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1906)
- 2001 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (பி. 1917)
- 2002 – வாழப்பாடி ராமமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1940)
- 2011 – எல். ஐ. சி. நரசிம்மன், தமிழகத் திரைப்பட நடிகர்
- 2019 – அபூ பக்கர் அல்-பக்தாதி, இசுலாமிய அரசுத் தலைவர் (பி. 1971)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 27 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்