லூலா த சில்வா
லூலா என அழைக்கப்படும் லூயிசு இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva (பிரேசிலிய போர்த்துக்கீசம்: [luˈiz iˈnasju ˈlulɐ dɐ ˈsiwvɐ] ( கேட்க); பிறப்பு: 27 அக்டோபர் 1945),[1] பிரேசில் அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2023 சனவரி 1 முதல் பிரேசிலின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார்.[2][3] தொழிலாலர் கட்சியின் உறுப்பினரான இவர், முன்னதாக 2003 முதல் 2011 வரை 35-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்துள்ளார்.[4] லூலா, மூன்றாவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரேசில் அரசுத்தலைவரும், தேர்தலில் தற்போதைய அரசுத்தலைவரைத் தோற்கடித்த முதல் நபரும் ஆவார். 77 வயதில், பதவியேற்பின் போது இவர் மிகவும் வயதான அரசுத்தலைவரும் ஆவார்.
லூலா த சில்வா | |
---|---|
2023 இல் லூலா | |
பிரேசிலின் அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 சனவரி 2023 | |
முன்னையவர் | சயீர் பொல்சனாரோ |
பதவியில் 1 சனவரி 2003 – 31 திசம்பர் 2010 | |
முன்னையவர் | பெர்னாண்டோ என்றிக்கே கார்தோசோ |
பின்னவர் | டில்மா ரூசெஃப் |
தொழிலாளர் கட்சியின் தேசியத் தலைவர் | |
பதவியில் 15 சூலை 1990 – 24 சனவரி 1994 | |
முன்னையவர் | லூயிசு குசிக்கென் |
பின்னவர் | உரூயி பல்காவோ |
பதவியில் 9 ஆகத்து 1980 – 17 சனவரி 1988 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | ஒலீவியா தத்ரா |
பிரதிநிதிகள் சபை உறுப்பினர் | |
பதவியில் 1 பெப்ரவரி 1987 – 1 பெப்ரவரி 1991 | |
தொகுதி | சாவோ பாவுலோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லூயிசு இனாசியோ த சில்வா 27 அக்டோபர் 1945 கேட்டசு, பெர்னம்புகோ, பிரேசில் |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி (1980 முதல்) |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 5 |
கல்வி | தொழில்துறை பயிற்சிக்கான தேசிய சேவை |
வேலை | உலோகப் பணியாளர், தொழிற்சங்கவாதி |
கையெழுத்து | |
இணையத்தளம் | lula |
இவர் ஏழ்மைப் பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடதுசாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jeff Wallenfeldt (10 April 2018). "Luiz Inácio Lula da Silva". Encyclopædia Britannica. Archived from the original on 2 July 2019. பார்க்கப்பட்ட நாள் 27 July 2018.
- ↑ Magalhaes, Luciana; Pearson, Samantha (2022-10-30). "Brazil's Luiz Inácio Lula da Silva Wins Presidential Election, Beating Jair Bolsonaro". The Wall Street Journal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
- ↑ Phillips, Tom; Malleret, Constance (2022-10-30). "Lula stages astonishing comeback to beat far-right Bolsonaro in Brazil election". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
- ↑ "Luiz Inácio Lula da Silva". Biblioteca da Presidência da República. Archived from the original on 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 30 June 2017.
வெளி இணைப்புகள்
தொகு- Luiz Inácio Lula da Silva's official page on Facebook
- Appearances on C-SPAN
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் லூலா த சில்வா
- லூலா த சில்வா இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)
- Profile: Luiz Inácio Lula da Silva. BBC News. 28 January 2010.
- Moore, Michael (20 April 2010). "The 2010 TIME 100: Luiz Inácio Lula da Silva". டைம்.