பெர்னம்புகோ
பெர்னம்புகோ (Pernambuco) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாநிலத்தின் தலைநகரம் ரெசிஃபி ஆகும். இந்த மாநிலத்தில் பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுக்கூட்டம் உள்ளது. இந்த மாநிலத்தின் வடக்கே பாராயிபாவும் சியாராவும், மேற்கே பியாயுயி மாநிலமும், தெற்கே ஆலகோவாசும் பாகையாவும் அமைந்துள்ளன; கிழக்கு எல்லையாக அத்திலாந்திக்குப் பெருங்கடல் உள்ளது.
பெர்னம்புகோ மாநிலம் | |
---|---|
பிரேசிலில் பெர்னம்புகோ மாநிலத்தின் அமைவிடம் | |
நாடு | பிரேசில் |
தலைநகரமும் பெரிய நகரமும் | ரெசிஃபி |
அரசு | |
• ஆளுநர் | எடுவர்டோ கேம்போசு |
• துணை ஆளுநர் | ஜோவா லிரா நெடோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 98,311.616 km2 (37,958.327 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 19வது |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 89,31,028 |
• தரவரிசை | 7வது |
• அடர்த்தி | 91/km2 (240/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 6th |
இனம் | Pernambucano |
GDP | |
• Year | 2007 estimate |
• Total | R$ 32.255.687 (10th) |
• Per capita | R$ 4.337 (21st) |
HDI | |
• Year | 2005 |
• Category | 0.718 – Medium (23rd) |
நேர வலயம் | ஒசநே-3 (BRT) |
• கோடை (பசேநே) | ஒசநே-3 (not observed) |
அஞ்சல் குறியீடு | 50000-000 - 56990-000 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BR-PE |
இணையதளம் | pe.gov.br |
இந்த மாநிலத்திலுள்ள பிரேசிலின் இரண்டாவது தொன்மையான நகரமான ஒலின்டாவை 1982இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் மாந்த வரலாறு மற்றும் பண்பாட்டு மரபுரிமையாக அறிவித்துள்ளது. இங்கும் ரெசிஃபியிலும் பிரேசிலின் மரபார்ந்த பல கார்னிவல்கள் கொண்டாடப்படுகின்றன. இரு நகரங்களிலும் போர்த்துக்கேய கட்டிடக்கலையைக் காணலாம்; நூற்றாண்டுகள் பழைமையான மாளிகைகளும் தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன. பல கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைகள் அமைந்துள்ளன. நில நடுக்கோட்டிற்கு அண்மையில் உள்ளதால் ஆண்டு முழுமையும் சூரிய ஒளி கிட்டுகிறது; சராசரி வெப்பநிலை 26 °C (79 °F)ஆக உள்ளது.
-
பெர்னான்டோ டெ நோரோன்கா தீவுகள்
-
ரெசிஃபி அன்டிகோ ("பழைய ரெசிஃபி")
-
கட்டிம்பு பள்ளத்தாக்கு - பிரேசிலின் இரண்டாவது பெரிய தொல்லியல் களம்
-
நோசா செனோரா டோ கார்மோ தேவாலயம்
-
மாபெரும் பொம்மைகள் - ஒலின்டா தெருவிழா (கார்னிவல்)