பிரேசிலின் மாநிலங்கள்

பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு இருபத்தியேழு கூட்டு அலகுகளின் ஒன்றியம் ஆகும்: இருபத்தி ஆறு மாநிலங்களும் (estados; ஒருமை estado) கூட்டரசின் தலைநகர் பிரசிலியா அமைந்துள்ள ஓர் கூட்டரசு மாவட்டமும் (distrito federal) அடங்கியது. இந்த மாநிலங்கள் பொதுவாக வரலாற்றை ஒட்டி, பொதுவான எல்லைகள் ஏற்பட்டதை ஒட்டி, காலப்போக்கில் உருவானவை ஆகும். கூட்டரசு மாவட்டம் ஓர் தனி மாநிலமாக கருத முடியாது; இருப்பினும் மாநிலத்தின் சில பண்புகளையும் நகராட்சிகளின் பண்புகளையும் கொண்டுள்ளது. கூட்டரசு மாவட்டத்தை கோயாசு, மினாஸ் ஜெரைசு மாநிலங்கள் சூழ்ந்துள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசிலின்_மாநிலங்கள்&oldid=1623211" இலிருந்து மீள்விக்கப்பட்டது