1979
1979 (MCMLXXIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 3 - இலங்கையில் வண. பிதா ஜேம்சு பத்திநாதர் செட்டிகுளத்தில் அகதிகளுக்கு உதவுகிறார் என்னக் குற்றம் சாட்டி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.
- சனவரி 15 - மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார். யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைக் கண்டறிந்தார்.
- பெப்ரவரி 10 - இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- பெப்ரவரி 16 - இலங்கையில் காசி ஆனந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட 11 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
- மார்ச் 7 - இலங்கை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
- ஏப்ரல் 1 - ஈரான் இசுலாமியக் குடியரசாக மாறியது.
- ஏப்ரல் 11 - தான்சானியப் படைகள் உகண்டாவின் தலைநகரான கம்பலா வை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓடினார்.
- சூன் 23 - இலங்கை குருநாகலில் தமிழர் கடைகள் தாக்கப்பட்டன.
- சூலை 11 - யாழ்ப்பாணத்தில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- சூலை 13 - யாழ்ப்பாணம், நவாலியில் இன்பம், செல்வம், பாலேந்திரன் என்ற மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் முதல் இருவரின் உடல்கள் தாக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
- சூலை 16 - சதாம் உசேன் ஈராக்கிய அதிபரானார்.
- சூலை 17 - இலங்கை நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேறியது. அடுத்த மூன்று நாட்களுக்குள் 47 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
- செப்டம்பர் 7 - ஈ-எஸ்-பி-என் ஒளிபரப்பு ஆரம்பம்
- செப்டம்பர் 28 - ஈழத் தமிழ் அரசியல்வாதி மா. க. ஈழவேந்தன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார்.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- பெப்ரவரி 11 - மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை கருநாடக இசை, வயலின் வாத்தியக் கலைஞர் (பி. 1912)
- ஆகத்து 14 - என். எம். பெரேரா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
- ஆகத்து 27 - மவுண்ட்பேட்டன் பிரபு, விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநர் (பி. 1900)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - செல்டன் லீ கிளாசோ, அப்துஸ் சலாம், ஸ்டீவன் உவைன்பர்க்
- வேதியியல் - ஹெபர்ட் பிரவுன், கியோர்க் விட்டிக்
- மருத்துவம் - அலன் கோர்மாக், கொட்பிரி ஔன்சுஃபீல்ட்
- இலக்கியம் - இடிசீசு எலிட்டிசு
- சமாதானம் - அன்னை தெரேசா
- பொருளியல் (சுவீடன் வங்கி வழங்கும் பரிசு) - தொயோடோர் சூல்ட்சு, ஆர்தர் லூயிசு
இவற்றையும் பார்க்கவும்
தொகு1979 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ United Nations Educational, Scientific and Cultural Organization. Regional Centre for Culture and Book Development in Asia (1979). Newsletter. p. 3.
- ↑ American Academy of Arts and Sciences (July 1994). Fundamentalisms Observed. University of Chicago Press. p. 403. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-50878-8.
- ↑ J. Robert Moskin, American Statecraft: The Story of the U.S. Foreign Service (Thomas Dunne Books, 2013), p. 594.