என். எம். பெரேரா

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

என். எம். பெரேரா (N. M. Perera, சிங்களம்: ඇන්.ඇම්.පෙරේරා, இயற்பெயர்: நாணயக்காரபத்திரகே மார்ட்டின் பெரேரா, 6 சூன் 1905 – 14 ஆகத்து 1979) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதியும், லங்கா சமசமாஜக் கட்சி நிறுவனரும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.

என். எம். பெரேரா
N. M. Perera
எதிர்க்கட்சித் தலைவர்
In office
19 ஏப்ரல் 1956 – 5 டிசம்பர் 1959
பிரதமர்சாலமன் பண்டாரநாயக்கா
முன்னையவர்சாலமன் பண்டாரநாயக்கா
பின்னவர்சி. பி. டி. சில்வா
In office
14 அக்டோபர் 1947 – 8 ஏப்ரல் 1952
பிரதமர்டி. எஸ். சேனநாயக்க
டட்லி சேனாநாயக்க
பின்னவர்சாலமன் பண்டாரநாயக்கா
நிதியமைச்சர்
In office
10 மே 1970 – 2 செப்டம்பர் 1975
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னையவர்யூ. பி. வன்னிநாயக்க
பின்னவர்பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா
In office
11 சூன் 1964 – 17 டிசம்பர் 1964
பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா
முன்னையவர்ரி. பி. இலங்கரத்தின
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1905-06-06)6 சூன் 1905
இலங்கை
இறப்பு14 ஆகத்து 1979(1979-08-14) (அகவை 74)
அரசியல் கட்சிலங்கா சமசமாஜக் கட்சி (லசசக)
கல்விகலாநிதி
முன்னாள் கல்லூரிபுனித யோசேப்பு பாடசாலை, கதீட்ரல் ஆண்கள் பாடசாலை, முகத்துவாரம் புனித தோமையர் கல்லூரி, ஆனந்தா கல்லூரி, இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன் பொருளியல் பள்ளி
வேலைஅமைச்சர், பொருளியலாளர்

ஆரம்ப வாழ்க்கை தொகு

என். எம். பெரேரா கொழும்பு பாலத்துறையில் நாணயக்காரபத்திரகே ஆபிரகாம் பெரேரா, யொகானா பெரேரா என்பவருக்கும் ஒன்பது பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார்.[1] பாலத்துறை யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் முகத்துவாரம் புனித தோமையர் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைக் கற்றார்.[2][3][4] 1919 இல் கொள்ளுப்பிட்டி புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் 1922 இல் கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் கல்வி பயின்றார். ஆனந்தா கல்லூரியின் துடுப்பாட்ட அணியில் விளையாடினார்.

கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர் இலண்டன் சென்று பொருளியல் பள்ளியில் 1927–33 காலப்பகுதியில் பயின்று,[5] பொருளியலில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தொடர்ந்து இலண்டன் பல்கலைக்கழகத்தின் DSc பட்டம் பெற்றார். முதன் முதலில் DSc பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் இவரே ஆவார்.

அரசியலில் தொகு

1935 ஆம் ஆண்டில் லங்கா சமசமாசக் கட்சியை நிறுவியவர்களில் பெரேராவும் ஒருவர். 1936 இல் சபரகமுவா மாகாணத்தின் ருவான்வெல்ல தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவானார். அவரும் பிலிப் குணவர்தனாவும் இணைந்து பிரிந்தானிய ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலைக்கான அக்கட்சியின் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் 1940 இல் கைது செய்யப்பட்டார். 1942 ஏப்ரல் 5 இல் சிறையில் இருந்து தப்பி இரகசியமாக இந்தியா சென்றார். அங்கு அவர் இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-லெனினியக் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

போர் முடிவுற்ற காலத்தில் சமசமாசக் கட்சி இரண்டாக பிளவடைந்தது. சமசமாசக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இயங்கி வந்தார். 1947 தேர்தலை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

1954 இல் கொழும்பு மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். 1956 தேர்தலை அடுத்து மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார். 1960களின் ஆரம்பத்தில் கட்சி மேலும் பிளவடைந்தது. என், எம். பெரேராவின் தலைமையில் சிலர் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் இணைந்தனர். இதனை அடுத்து சமசமாசக் கட்சி நான்காம் அனைத்துலகம் உறுப்புரிமையை இழந்தது.

1964 – 1965 காலப்பகுதியிலும், பின்னர் 1970 – 1975 காலப்பகுதியிலும் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 1977 தேர்தலில் முதல் தடவையாக நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Dr. NM Perera: a politician ahead of his times" (PDF). pdfs.island.lk. 2009. Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 13 ஆகத்து 2009.
  2. "Dr. N.M. Perera 1905 – 1979 : An honest and upright politician". Archived from the original on 2005-09-08. Retrieved 2015-09-04.
  3. "Dr. N. M. Perera: A true visionary". Archived from the original on 2008-02-22. Retrieved 2015-09-04.
  4. "Doughty fighter and man of principles". Archived from the original on 2013-07-03. Retrieved 2015-09-04.
  5. "MIA: Encyclopedia of Marxism: Glossary of People". Encyclopedia of Marxism:.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எம்._பெரேரா&oldid=3839885" இலிருந்து மீள்விக்கப்பட்டது