ஆனந்தா கல்லூரி

ஆனந்தா கல்லூரி (Ananda College) இலங்கையிலுள்ள முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். இக்கல்லூரி கொழும்பு, மருதானையில் அமைந்துள்ளது. இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மிசனரிக் கல்வி முறை இலங்கையில் அறிமுகமானது. இந்நிலையில் உயர்குல பௌத்தர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு நவம்பர் 1, 1886இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும். அரசியல்வாதிகளாகவும். உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

Ananda College
ஆனந்தா கல்லூரி
அமைவிடம்
கொழும்பு, இலங்கை
அமைவிடம்6°55′30″N 79°52′09″E / 6.92500°N 79.86917°E / 6.92500; 79.86917
தகவல்
வகைதேசியப் பாடசாலை
தொடக்கம்1886
மொத்த சேர்க்கை        
இணைப்புபௌத்தம்
இணையம்
ஆனந்தாக் கல்லூரி

இலங்கையில் தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தேசிய பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரி தரம் 01 முதல் க.பொ.த. உயர்தரம் வரை சகல வகுப்புகளும் நடைபெறுகின்றன. தற்போது சுமார் 8000 மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர்.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தா_கல்லூரி&oldid=3232897" இலிருந்து மீள்விக்கப்பட்டது