ஆகத்து 17
நாள்
(ஆகஸ்ட் 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 17 (August 17) கிரிகோரியன் ஆண்டின் 229 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 230 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 136 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார்.
- 1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார்.
- 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது.
- 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர்.
- 1585 – வால்ட்டர் ரேலியினால் அனுப்பப்பட்ட முதல் தொகுதிக் குடியேறிகள் புதிய உலகத்தில் உரோனோக் தீவில் (இன்றைய வட கரொலைனாவில்) தரையிறங்கினர்.
- 1668 – உதுமானியாவின் அனத்தோலியாவில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 8,000 பேர் வரை உயிரிழந்தன்ர்.
- 1712 – டென்மார்க், சுவீடன் நாடுகளுக்கிடையே பெரும் கடற்படைப் போர் இடம்பெற்றது.
- 1717 – ஒரு மாத முற்றுகையின் பின்னர் ஆத்திரியப் படைகள் பெல்கிரேட் நகரை உதுமானியர்களிடம் இருந்து கைப்பற்றின.
- 1740 – பன்னிரண்டாம் கிளெமெண்டுக்குப் பின்னர் பதினான்காம் பெனடிக்டு 247-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1807 – இராபர்ட் புல்டனின் நோர்த் ரிவர் நீராவிக் கப்பல் நியூயோர்க் நகரில் இருந்து ஆல்பெனி நோக்கி அட்சன் ஆற்றில் தனது பயணத்தைத் தொடங்கியது. இதுவே உலகின் முதலாவது நீராவிக் கப்பல் பயணிகள் சேவை ஆகும்.
- 1836 – ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் பிறப்பு, திருமண, இறப்புப் பதிவுகளை சட்டபூர்வமாக்கியது.
- 1862 – அமெரிக்க இந்தியப் போர்கள்; லக்கோட்டா பழங்குடியினர் அமெரிக்காவின் மினசோட்டாவில் வெள்ளையினக் குடியேற்றவாதிகள் மீது தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1918 – போல்செவிக் புரட்சித் தலைவர் மொயிசேய் யுரீத்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் செருமனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சர்ச்சில், பிராங்க்ளின் ரூசவெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.
- 1945 – சுகர்ணோ இந்தோனேசியாவின் விடுதலையை அறிவித்தது. இடச்சுப் பேரரசுக்கு எதிரான இந்தோனேசிய தேசியப் புரட்சி ஆரம்பமானது.
- 1947 – இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
- 1958 – அமெரிக்காவின் சந்திரனைச் சுற்றும் முதலாவது திட்டம் பயனியர் 0 விண்ணுக்கு ஏவப்பட்டு 77 செக்கன்களில் அழிந்தது.
- 1959 – மொன்ட்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
- 1960 – காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1962 – கிழக்கு ஜெர்மனியில் இருந்து பெர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18-வயது பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
- 1969 – மிசிசிப்பியில் இடம்பெற்ற தரம் 5 சூறாவளியில் 256 பேர் உயிரிழந்தனர்.
- 1970 – வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
- 1977 – சோவியத் ஒன்றியத்தின் ஆர்க்திக்கா வடதுருவத்தை அடைந்த முதலாவது தரைக்கப்பல் ஆகும்.
- 1988 – பாக்கித்தான் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 1991 – சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில் வேட் பிராங்கம் என்பவன் சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
- 1999 – வடமேற்கு துருக்கியில் 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 2005 – காசாக்கரையில் இருந்து இசுரேலியர்களின் கட்டாய வெளியேற்றம் ஆரம்பமானது.
- 2005 – வங்காளதேசத்தின் 64 மாவட்டங்களில் 300 இடங்களில் ஐநூறுக்கும் அதிகமான குண்டுகள் தீவிரவாதிகளினால் வெடிக்க வைக்கப்பட்டன.
- 2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் அதிகமான எட்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
- 2009 – உருசியா, அக்காசியாவில் அணை ஒன்று உடைந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.
- 2015 – பேங்காக், பிரம்மன் கோயிலில் குண்டு வெடித்ததில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், 123 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1607 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (இ. 1665)
- 1761 – வில்லியம் கேரி, ஆங்கில புரட்டஸ்தாந்து மதகுரு (இ. 1834)
- 1874 – வேதநாயகம் சாமுவேல் அசரியா, ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயர் (இ. 1945)
- 1882 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (இ. 1973)
- 1920 – அ. வரதராசன், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி (இ. 2009)
- 1926 – சியான் செமீன், சீனாவின் 5வது அரசுத்தலைவர் (இ. 2022)
- 1932 – வி. சூ. நைப்பால், நோபல் பரிசு பெற்ற திரினிதாது-ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 2018)
- 1934 – முரசொலி மாறன், இந்திய அரசியல்வாதி (இ. 2003)
- 1943 – ரொபேர்ட் டி நீரோ, அமெரிக்க நடிகர்
- 1944 – லாரி எலிசன், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1950 – வாசுதேவன் பாஸ்கரன், வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர்
- 1953 – எர்ட்டா முல்லர், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-செருமானியக் கவிஞர், எழுத்தாளர்
- 1959 – டேவிட் கொரேஷ், அமெரிக்க மதத் தலைவர் (இ. 1993)
- 1962 – தொல். திருமாவளவன், தமிழக அரசியல்வாதி
- 1963 – சங்கர், இந்தியத் திரைப்பட இயக்குநர்
- 1970 – ஜிம் கூரியர், அமெரிக்க டென்னிசு ஆட்ட வீரர்
- 1977 – தியெரி ஹென்றி, பிரான்சியக் காற்பந்தாட்ட வீரர்
- 1990 – குசல் பெரேரா, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 1850 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெருவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1778)
- 1909 – மதன் லால் டிங்கரா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1883)
- 1969 – ஆட்டோ ஸ்டர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1888)
- 1969 – லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, செருமானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1886)
- 1983 – கே. ஏ. மதியழகன், தமிழக அரசியல்வாதி, தமிழ்நாடு அமைச்சர் (பி. 1926)
- 1986 – எம். ஜி. சக்கரபாணி, தென்னிந்திய நாடக, திரைப்பட நடிகர் (பி. 1911)
- 1988 – சியா-உல்-ஹக், பாக்கித்தானின் 6வது அரசுத்தலைவர் (பி. 1924)
- 2007 – தசரத் மான்ஜி, இந்தியப் பொறியாளர் (பி. 1934)
- 2021 – ஜோக்கிம் பெர்னாண்டோ, இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடக நடிகர்
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (இந்தோனேசியா, சப்பானிடம் இருந்து 1945)
- விடுதலை நாள் (காபோன், பிரான்சிடம் இருந்து 1960)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
- "ஆகத்து 17 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.