சியா-உல்-ஹக்

ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (ஆகஸ்ட் 12 1924ஆகஸ்ட் 17 1988) பாகிஸ்தான் நாட்டின் அரசுத்தலைவராக ஜூலை 1977 முதல் ஆகஸ்ட்1988 வரையில் ஆட்சி புரிந்தவர். 1976 இல் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியாமிக்கப்பட்ட இவர் ஜூலை 5, 1977 இல் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.

முகமது சியா-உல்-ஹக்
Muhammad Zia-ul-Haq 1982.jpg
பாகிஸ்தானின் 6வது ஜனாதிபதி
பதவியில்
16 செப்டம்பர் 1978 – 17 ஆகஸ்ட் 1988
பிரதமர் முகமது கான் ஜுனேஜோ
முன்னவர் பசால் இலாஹி சௌத்திரி
பின்வந்தவர் குலாம் இஷாக் கான்
பாகிஸ்தானின் 8வது இராணுவத் தளபதி
பதவியில்
11 அக்டோபர் 1976 – 17 ஆகஸ்ட் 1988
முன்னவர் டிக்கா கான்
பின்வந்தவர் மிர்சா அஸ்லாம் பெக்
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஆகஸ்ட் 1924
Flag of Imperial India.svg ஜலந்தர், இந்தியா
இறப்பு 17 ஆகஸ்ட் 1988 (அகவை 64)
பகவல்பூர், பஞ்சாப், பாகிஸ்தான்
அரசியல் கட்சி இராணுவம்
சமயம் வஹாபி, இஸ்லாம்

இவர் ஆகஸ்ட் 17, 1988 இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muhammad Zia-ul-Haq
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா-உல்-ஹக்&oldid=3266480" இருந்து மீள்விக்கப்பட்டது