சூலை

மாதம்
(ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< சூலை 2022 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXII

சூலை (July, ஜூலை)கிரெகொரியின் நாட்காட்டியின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமன் காலண்டரின் படி இது ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்டு வந்தது. இலத்தீன் மொழியின் 'சவிண்டிலஸ்' என ரோமானியர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ரோமானிய மன்னர் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்து இம்மாததிற்கு ஜூலை என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜூலை மாத நிகழ்வுகள்தொகு

 • 1, 1852 - இந்தியாவில் அரை அணா தபால்தலைகள் கராச்சியில் வெளியிடப்பட்டது.
 • 1, 1856 - தென்னிந்தியாவில் ராயபுரம், சென்னை முதல் வாலாஜா ரோடு வரை தொடரூந்து சேவை துவக்கப்பட்டது.
 • 1, 1982 - சத்துணவுத் திட்டம், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் எம். ஜி. ஆர் அறிமுகம் செய்தார்.
 • 2, 1972 - இந்தியா-பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • 5, 1997 - செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு குறித்து சோஜர்ன் இராக்கெட்டை அமெரிக்கா அனுப்பியது.
 • 5, 2010 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் ரகசிய அறை ஒன்றில் தங்க, வைர நகைகள் கண்டெடுப்பு.
 • 7, 1896 - முதல் அசையும் திரைப்படம் பிரான்சில் வெளியீடு
 • 12,1920 - பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
 • 13, 1930 - முதல் உலக கால்பந்தாட்டப் போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது.
 • 14, 1789 - பிரெஞ்சுப் புரட்சி முடிந்து பிரான்சு குடியரசு நாடானது.
 • 15, 1947 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
 • 15, 1955 - பாரத ரத்னா விருது முதன்முதலாக ஜவகர்லால் நேருவுக்கு வழங்கப்பட்டது.
 • 17, 1897 - மார்க்கோனி தந்தி குறியீடுகளை ரேடியோ அலைகள் மூலம் அனுப்பினார்.
 • 17, 1967 - சீனா ஹைடிரஜன் குண்டுகளை சோதனை முறையில் வெடித்தது.
 • 17, 1996 - தமிழ்நாட்டின் தலைநகர் மெட்ராஸ் என்பதை சென்னை எனப்பெயர் மாற்றம் பெற்றது.
 • 20, 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் இறங்கியது.
 • 21, 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையில் சிறீமா பண்டாரநாயக்கா பதவியேற்றார்.
 • 20, 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
 • 24, 1985 – தமிழக முதல்வர் எம். ஜி. ஆர், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா எனப்பெயரிட்டார்.
 • 25, 1978 – உலகில் முதல் சோதனை குழாய் குழந்தை உருவான நாள்
 • 26, 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
 • 27, 2013 – உலகளவில் நறுமண எண்ணெய் வகை சந்தையில் இந்தியா முதலிடம் பிடித்தது.
 • 29, 1927 – இந்தியாவில், கொல்கத்தா நகரில் இரண்டாவது வானொலி நிலையம் துவக்கப்பட்டது.

சூலை மாதம், ஈழத்தமிழரின் வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றது சூலை மாதத்தில் தான்:

வெளி இணைப்புகள்தொகு

சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலை&oldid=2558322" இருந்து மீள்விக்கப்பட்டது