இராசிச் சக்கரம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராசிச் சக்கரம் என்பது பன்னிரண்டு இராசி மண்டலங்கள், நவக்கிரகங்கள், பன்னிரு வீடுகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் ஆகியவற்றை கொண்ட சோதிடப் பொறியாகும். இந்த இராசிச் சக்கரம் பன்னிரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. இதற்கு வீடுகள் என்று பெயர். மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த இராசிச் சக்கரம் அமைக்கப்பெறுகிறது. ஆனால் இந்து சோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பெறுகின்றன. அதற்கு பனையோலையில் வட்டத்தினை விட கோடுகளாக வரைதல் ஏதுவாக இருந்ததே காரணம்.