சித்திரை (பஞ்சாங்கம்)

சித்திரை என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 14 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சித்திரை நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சித்திரை நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" சித்திரை ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினான்காவது நட்சத்திரமாகிய சித்திரை 173° 20'க்கும் 186° 40'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சித்திரையின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி இராசியிலும் அடுத்த இரண்டு பாதங்களும் துலை இராசியிலும் அமைந்துள்ளது.

பெயரும் அடையாளக் குறியீடும்

தொகு
 
கன்னி விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சித்திரை நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் கன்னி விண்மீன் கூட்டத்தில் துலை இராசித் தொடக்கத்துக்கு அண்மையாகக் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தின் (இசுப்பிக்கா (Spica) பெயரைத் தழுவியது. சித்திரையின் சமசுக்கிருதப் பெயரான சித்ரா (Chitra) என்பது "அழகியது" அல்லது "ஒளி பொருந்தியது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "ஒளி பொருந்திய மணி" அல்லது "முத்து" ஆகும்.

சோதிடத்தில் சித்திரை

தொகு

இயல்புகள்

தொகு

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சித்திரை நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]

கோள் செவ்வாய்
தேவதை விசுவகர்மா
தன்மை மென்மை
சாதி சத்திரிய சாதி
கோத்திரம் அங்கிரா
பால் பெண்
குணம் இராட்சத குணம்
இயற்கை மூலம் நெருப்பு
விலங்கு பெண் புலி
பறவை மரங்கொத்தி
மரம் வில்வம்
நாடி சுழுமுனை

குறிப்புகள்

தொகு
  1. Raman, B. V., 1992. பக். 40.
  2. வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
  3. Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.

உசாத்துணைகள்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரை_(பஞ்சாங்கம்)&oldid=4176347" இலிருந்து மீள்விக்கப்பட்டது