சுவாதி (பஞ்சாங்கம்)

சுவாதி என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 15 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சுவாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சுவாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" சுவாதி ஆகும்.

ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பதினைந்தாவது நட்சத்திரமாகிய சுவாதி 186° 40'க்கும் 200° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சுவாதியின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுமையாக துலை இராசியில் அமைந்துள்ளது.

பெயரும் அடையாளக் குறியீடும்

தொகு
 
பூட்டெசு விண்மீன் கூட்டம்

இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சுவாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பூட்டெசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தின் (ஆர்க்ட்டூரசு (Arcturus) பெயரைத் தழுவியது. சித்திரையின் சமசுக்கிருதப் பெயரான ஸ்வாதி (Swati) என்பது "வாள்" அல்லது "தங்கியிராமை" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காற்றில் அசையும் ஒற்றைப் புல்" ஆகும்.

சோதிடத்தில் சுவாதி

தொகு

இயல்புகள்

தொகு

இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சுவாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]

கோள் இராகு
தேவதை வாயு (காற்றுக் கடவுள்)
தன்மை அசைவது
சாதி வைசிய சாதி
கோத்திரம் அங்கிரா
பால் பெண்
குணம் தேவ குணம்
இயற்கை மூலம் நெருப்பு
விலங்கு ஆண் எருமை
பறவை தேனீ
மரம் மருது
நாடி பிங்கலை

குறிப்புக்கள்

தொகு
  1. Raman, B. V., 1992. பக். 40.
  2. வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
  3. Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.

உசாத்துணைகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாதி_(பஞ்சாங்கம்)&oldid=3245636" இலிருந்து மீள்விக்கப்பட்டது