உத்தரம் (பஞ்சாங்கம்)
உத்தரம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 12 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது உத்தர நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் உத்தர நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" உத்தரம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், பன்னிரண்டாவது நட்சத்திரமாகிய உத்தரம் 146° 40'க்கும் 150° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் உத்தரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதற் பாதம் சிங்கராசியிலும் அடுத்த மூன்று பாதங்களும் கன்னிராசியிலும் அமைந்துள்ளன.
பெயரும் அடையாளக் குறியீடும்
தொகுஇந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தர நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரத்தின் (டெனெபோலா (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் சமசுக்கிருதப் பெயரான உத்தர பால்குனி (Purva Phalguni) என்பது "பிந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் நான்கு கால்கள்" ஆகும்.
சோதிடத்தில் உத்தரம்
தொகுஇயல்புகள்
தொகுஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. உத்தர நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]
கோள் | சூரியன் |
தேவதை | ஆர்யமன் |
தன்மை | நிலையானது |
சாதி | சங்கர சாதி |
கோத்திரம் | வசிட்டர் |
பால் | பெண் |
குணம் | மனித குணம் |
இயற்கை மூலம் | தேயு |
விலங்கு | ஆண் மாடு |
பறவை | சில்வண்டு |
மரம் | அலரி |
நாடி | இடை |
குறிப்புக்கள்
தொகு- ↑ Raman, B. V., 1992. பக். 40.
- ↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.
- ↑ Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.
உசாத்துணைகள்
தொகு- Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
- வெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.
- Harness, Dennis M., Masco, Maire M., The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage பரணிடப்பட்டது 2012-05-26 at the வந்தவழி இயந்திரம்.
வெளியிணைப்புக்கள்
தொகு}