சூரிய தேவன் (இந்து சமயம்)
(சூரிய தேவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூரியன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.
சூரியன் | |
---|---|
![]() | |
அதிபதி | ஒளி, வெப்பம், பகல் மற்றும் சூரிய கிரகத்தின் கடவுள் |
சமசுகிருதம் | सूर्यदेव |
தமிழ் எழுத்து முறை | சூரியன் |
வகை | நவக்கிரகங்கள், தேவர் |
இடம் | சூர்ய லோகம் |
ஆயுதம் | சக்கரம்,சங்கு |
துணை | புராணங்களில் உஷா,ராத்திரி |
பெற்றோர்கள் | காசியபர்,அதிதி |
குழந்தைகள் | வைவஸ்வத மனு, யமன், சனீஸ்வரன், அஸ்வினிகள், தபதி, சாவர்ணி மனு, யமுனா, ரேவந்தன், பத்ரா |
தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.
சூரியனின் முதல்-மனைவிக்கு பிறந்தவர்கள் யமன் மற்றும் யமுனை (நதி) எனவும், சூரியனின் முதல்-மனைவி சூரியனின் வெப்பம் தங்க முடியாமல் சிறிதுகாலம் அவரைப் பிரிந்திருக்க எண்ணி, தன்னைப்போலவே ஒரு நிழலை உருவாக்கிவிட்டு சென்றாள் எனவும், அந்த நிழல் உருவம் தான் சாயா எனப்படும் சூரியனின் இரண்டாவது மனைவி எனவும், சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் தான் நவக்கிரகங்களில் ஒருவராகிய சனி எனவும் கூறப்படுகின்றது.