ஆயுதம் (ஒலிப்பு) அல்லது படைக்கலம் என்பது ஒருவரை காயப்படுத்தவோ, கொல்லவோ அல்லது ஒரு பொருளினை அழிக்கவோ, சேதப்படுத்தவோ பயன்படும் ஒரு கருவி ஆகும். ஆயுதங்கள் தாக்கவோ, அல்லது தடுக்கவோ, அச்சமூட்டவோ, தற்காத்துக் கொள்ளவோ பயன்படலாம். மேலோட்டமாக, சேதத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் ஆயுதம் எனலாம். ஆயுதம் என்பது சாதாரண தடியில் இருந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை வரை எதுவாகவும் இருக்கலாம்.

ஒரு வாள்
வெண்கலக் கால ஆயுதங்கள்

இத்தகு படைக்கருவிகளை இலக்கியங்கள் கலம் என்னும் சொல்லாலேயே குறிப்பிட்டுவந்தன. [1]

சங்க கால ஆயுதங்கள் தொகு

சங்க கால மக்கள் இரும்பினைக் கொண்டு பெரும்பான்மையாகப் பல்வேறு வகையான ஆயுதங்களையே செய்தனர். வில், அம்பு, வேல், அரிவாள், ஆண்டலையடுப்பு, ஈர்வாள், உடைவாள், கதிரருவாள், கதை, கவை, கல்லிடு கூடை, கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் கவண், கற்றுப்பொறி, கழுமுள், குந்தம், கூன்வாள், கைபெயர், கோடாரி, சதக்கணி, தண்டம், தூண்டில், தோமரம், புதை, நாராசம், வச்சிரம் , போன்ற கருவிகளை கொல்லர்கள் செய்து கொடுத்தனர் . இதனால் ,கொல்லரின் அடிப்படைத்தொழில் இரும்பாலான ஆயுதங்களைச் செய்தல் என்பது புலனாகிறது .[2]

தமிழரின் போர்க்கருவிகள் தொகு

தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும். வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள். இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும் காணப்படுகின்றன.[3]

வாள் தொகு

வாள் என்னும் போர்க்கருவி சங்க கால இலக்கியங்களில் பலவாறாக கூறப்பட்டு உள்ளது . தொல்காப்பியத்தில் தும்பை திணை , பாடண்திணை, போன்றவற்றிலும் புறநானுற்று பாடல்களிலும் இடம்பெற்றுஉள்ளது . வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை புறநானூற்றுப்பாடல்வழி அறியமுடிகிறது .[4]

வேல் தொகு

வேல் முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியுள்ளனர் . தொல்காப்பியத்திலும் , புறநானூற்று பாடல்களிலும் வேல் பற்றிய செய்திகள் இடம் பெற்று உள்ளன. சிறிய வயதின் போதே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை புறநானூறு பாடலால் அறியமுடிகிறது . வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு குறிப்பிடத்தக்கது .[5]


வில் தொகு

வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர். வில் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்திலும் முல்லைப்பாட்டிலும் , புறநானுற்று பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன . மேலும் , அகநானூறும் வில் பற்றி எடுத்து இயம்புகிறது. சங்ககாலத் தமிழரால் வாள் , வேல் , வில் என்ற இந்த மூன்று கருவிகளும் பயன்படுத்தப்பட்டதை ஒவ்வையார் பாடல் வழி அறிந்துகொள்ளலாம் . [6]

தற்கால ஆயுதங்கள் தொகு

நாகரிகம் வளர்ச்சியடைந்த பிறகு , புதிய நவீன கண்டுபிடிப்புகளால் நவீன ஆயுதங்கள் தற்காலத்தில் பயன்படுத்தபடுகிறது .

உந்துகணை தொகு

உந்துகணை (Rockets) என்பது சக்தி மீளுதைப்புத் (Energy Reaction) தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் விண்ணூர்திகளாகும். உந்துகணைத் தொழிநுட்பமானது வானவேடிக்கை, ஏவுகணை, விண்வெளிப்பயணம் போன்ற பல்வேறுபட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உந்துகணைகள், அவற்றிற் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அடிப்படையில் பிரதானமாக இரண்டுவகையாகப் பிரிக்கப்படுகின்றன. திண்ம எரிபொருள் உந்துகணைகள் (Solid Propellant Rocket), திரவ எரிபொருள் உந்துகணைகள் (Liquid Propellant Rocket) பெரும்பாலும் குறுந்தூரத்திற்கு ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள், திண்ம எரிபொருள் உந்துகணைகளையே பயன்படுத்துகின்றன. நெடுந்தூர ஏவுகணைகள் மற்றும் விண்வெளிப் பயண ஊர்திகள் போன்றவற்றிற் பயன்படுத்தப்படும் உந்துகணைகள் திரவ எரிபொருள் உந்துகணைகளைப் பயன்படுத்துகின்றன. உந்துகணைகளின் வரலாறு, கி.மு. 1232 இல் சீனர்களால் மொங்கோலியர்களுடனான யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகளுடன் ஆரம்பமாகின்றது. உந்துகணைகள் பலகாலமாக போர்கள், கடல்சார் மீட்புப்பணிகள், சமிக்கை வழங்குதல் மற்றும் வானவேடிக்கை போன்றவற்றிற் பயன்படுத்தப்பட்டுவந்த போதிலும் அவற்றின் அடிப்படைத் தத்துவ விளக்கம் 20 ஆம் நூற்றாண்டிலேயே தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டதுடன் அதன்பின்னரே அவை தொழிநுட்ப மற்றும் பயன்பாட்டுரீத்தில் பாரியளவில் வளர்ச்சியடையத் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக விண்வெளிப் பயணங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளும் விண்வெளி தொடர்பான விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வேகம்பெற்றன. ஆரம்பகால திண்ம எரிபொருள் உந்துகணைகளில் எரிபொருளாக கரிமருந்தே (Gun Powder) பயன்படுத்தப்பட்டது. உலகின் முதலாவது திரவ எரிபொருள் உந்துகணை Robert Goddard இனால் 1926 ஆம் ஆண்டு ஏவப்பட்டது. 1920 ஆம் ஆண்டுகளில் பல உந்துகணை ஆராய்ச்சி நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 1920 களின் நடுப்பகுதியில், ஜெர்மனிய விஞ்ஞானிகள் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி உச்ச வலுவைப் பெறக்கூடிய உந்துகணைகளை வடிவமைக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பலதரப்பட்ட ஆய்வுகள் பல நாடுகளிலும் நடத்தப்பட்டன .

எறிகணை தொகு

எறி கணை என்பது தொலைதூரத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் கருவியாகும் . இது ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .

ஏவுகணை தொகு

இன்றைய காலத்தில் ஏவுகணையை ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தயாரித்து வருகின்றது . எதிரி நாட்டு இலக்கை அழிக்கும் வகையில் , கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை , அணு ஆயுதம் எடுத்துச்செல்லும் ஏவுகணை, எதிரி நாட்டு ஏவுகணையினை வானிலேயே தாக்கும் ஏவுகணை என்று பல வகைகளில் இன்று தயாரிக்கப்படுகிறது . ஒரு நாட்டின் ராணுவப்பலத்தை நிரூபிக்க இந்த மாதிரியான ஏவுகணைகள் பயன்படுகின்றது .

துப்பாக்கி தொகு

தனி நபர் ஆயுதமாக துப்பாக்கி , கைத்துப்பாக்கி ,சிறு கைத்துப்பாக்கி , போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது , இது பாதுகாப்பு படையில் உள்ள வர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டு உள்ளது . துப்பாக்கி வகைளில் இலகுரக துப்பாக்கி, இயந்திரத் துப்பாக்கி, சுழல் துப்பாக்கி போன்றவைகள் ராணுவத்தில் போர் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது .

 
GP K100 target

இயந்திரத்துப்பாக்கி தொகு

1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் இயந்திரத்துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது.


பீரங்கி தொகு

பீரங்கி என்பது ஈய வெடிகுண்டுகளை செலுத்தும் ஆயுதம் ஆகும் . ஒரு நாட்டின் தரைப் பாதுகாப்பிற்கும், ராணுவ பலத்தை எடுத்துக்காட்டுவதற்கும் பீரங்கிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்தவொரு சாலை களிலும் சிறப்பாகவும், விரைவாகவும் சென்று தாக்குதல் நடத்துவதுதற்கு ஏற்ற சிறப்பம்சங்களுடன் பீரங்கிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாதுகாப்பு வசதிகள், விரைவாக செல்லும் திறன், வெடிகுண்டுகளை ஏவும் திறன் போன்றவற்றை வைத்து பீரங்களின் வல்லமை நிர்ணயிக்கப்படுகிறது. போர் நடைபெறும்போது தரை வழித்தாக்குதலில் மிக முக்கிய பங்கு வகிப்பது பீரங்கிகள்தான். குறிப்பாக, நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தரைப்படையினருக்கு மிக முக்கிய கருவியாக பீரங்கிகள் விளங்குகின்றன. இந்த நிலையில், தற்காப்பு, தாக்குதல் திறன், வேகம், இலக்கை தாக்கும் துல்லியம் போன்றவற்றில் நவீனமான பீரங்கிகளை முதன்மை போர் பீரங்கிகள் என்று குறிப்பிடுகின்றனர்.


மிதிவெடி தொகு

கண்ணிவெடி என்பது மண்ணில் புதைத்தும் , புதைக்காமலும் அதை பயன்படுத்தலாம் . எதிரியை தாக்குவதற்கு இதை ராணுவத்தில் பயன்படுத்துவர் .

குண்டு விமானம் தொகு

குண்டு விமானம் என்பது குண்டுகளை தன்னுடன் எடுத்து சென்று தாக்கும் விமானம் ஆகும் . இது அணு குண்டுகளையும் எடுத்து சென்று எதிரி நாட்டை தாக்க கூடியது . ராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது .

போர்க் கப்பல் தொகு

போர்க் கப்பல் என்பது போர் புரிவதற்காகச் சிறப்பாகக் கட்டப்படும் கப்பல் ஆகும். இவை வணிகக் கப்பல்களைவிட வேறுபட்ட முறையில் பெரிய அளவில் அமைக்கப்படுகின்றன. ஆயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமன்றி இவை, சேதங்களைத் தாங்கக் கூடியவையாகவும், வேகமாகச் செல்லத்தக்க வகையிலும், இலகுவாகத் திசைமாற்றத்தக்க வகையிலும் உருவாக்கப்படுகின்றன. போர்க் கப்பல்கள், பொதுவாக ஆயுதங்கள், அவற்றுக்குத் தேவையான வெடிபொருட்கள், போர் வீரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்கின்றன. போர்க் கப்பல்கள் பொதுவாக ஒரு நாட்டின் கடற்படைக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. தனியாரும், நிறுவனங்களும் கூடச் சில வேளைகளில் போர்க் கப்பல்களை தயாரிப்பதுண்டு .

நீர்மூழ்கிக் கப்பல் தொகு

நீர்மூழ்கிக் கப்பல் என்பது நீரினுள் மூழ்கி செல்லக்கூடியது . இது , போர்களில் ஒற்றர்களைப்போல செயல்படுபவை. கடலின் உள்ளே நீண்ட தூரம் வரை செல்லக்கூடியவை. புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார். சில வருடங்களுக்கு முன்னால் சிறிய அளவில் செய்யப்பட்டன. தற்போது 400 அடி நீளம் வரை உள்ளன. நீர்மூழ்கிக் கப்பலில் 2 என்ஜின்கள் உள்ளன. நீர்மட்டத்திற்கு மேலே ஒரு என்ஜின் உள்ளது. இது கப்பல் செல்லும்போது நீராவியால் இயக்கப்படும். இன்னொன்று, கப்பல் நீரில் மூழ்கிச் செல்லும்போது மின்சாரத்தால் இயக்கப்படும். தற்போதுள்ள புதிய கப்பல்கள் 12,000 மைல் தூரம்வரை நிற்காமல் செல்லக்கூடியவை. 60 மணிநேரம் மின்சார ஆற்றலும் செயல்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காற்று வாங்க மேடை ஒன்று இருக்கும். மேலே பீரங்கி இருக்கும். கடலின் உள்ளே செல்லும்போது பீரங்கியை உள்ளே இழுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேடையின்மீது ஒரு சிறிய கோபுரம் அமைந்திருக்கும். கோபுர உச்சியில் பெரிஸ்கோப் (Periscope) இரட்டைக் கண்ணாடி 2 அல்லது 3 பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று சரியாகத் தெரியாவிட்டாலும் இன்னொன்று உதவும். இந்தக் கண்ணாடியில் நான்கு திசைகளிலும் திருப்பிப் பார்க்கும் வசதியும் உள்ளது. எனவே, நீரினுள் இருக்கும்போது கண்ணாடியின் உதவியால் மாலுமி மேலே நடைபெறும் செயல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பெரிஸ்கோப் செயல்படவில்லையெனில் கப்பலுக்கு வழி தெரியாது. எனவே, நீர்மூழ்கிக் கப்பலின் கண்கள் அழைக்கப்படுகிறது.

படைக்கலங்கள் தொகு

  • எஃகு [7]
  • எஃகம் [8]

காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி - பட்டினப்பாலை 70
  2. 1 .வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே“ என்று புறநானூற்றின் 312ஆவது பாடல் குறிப்பிடுகிறது
  3. 3. கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176
  4. 4 .புறநானூறு 63 பாடல்
  5. 5. புறநானூறு 279 பாடல்
  6. 7. புறநானூறு 98 பாடல்
  7. முருகன் வேல்
  8. கேடயம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுதம்&oldid=2845818" இலிருந்து மீள்விக்கப்பட்டது