ஜலந்தர்

ஜலந்தர் (Jalandhar, பஞ்சாபி மொழி: ਜਲੰਧਰ, இந்தி: जलंधर), என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊர். இது முன்னர் ஜுலுந்தர் என அழைக்கப்பட்டது. நகரப் பகுதியுல் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களும் நகரைச் சுற்றியுள்ள இடங்களில் மேலும் ஒரு மில்லியன் மக்களும் வாழ்கின்றனர்.

Jalandhar
—  நகரம்  —
Jalandhar
இருப்பிடம்: Jalandhar
, Punjab
அமைவிடம் 31°19′32″N 75°34′45″E / 31.3256°N 75.5792°E / 31.3256; 75.5792ஆள்கூறுகள்: 31°19′32″N 75°34′45″E / 31.3256°N 75.5792°E / 31.3256; 75.5792
நாடு  இந்தியா
மாநிலம் பஞ்சாப்
மாவட்டம் Jalandhar
ஆளுநர்
முதலமைச்சர்
Mayor Surinder Mahay
மக்களவைத் தொகுதி Jalandhar
மக்கள் தொகை 714,077 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


228 மீட்டர்கள் (748 ft)

புவியியல்தொகு

ஜலந்தர் நகரம் தில்லியில் இருந்து 375 கிமீ தூரத்திலும், சண்டிகரில் இருந்து 142 கிமீ தூரத்திலும் அம்ரித்சரில் இருந்து 90 கிமீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. "ஜலந்தர்" என்ற பெயர் ஜாலந்தரா என்ற மன்னனின் பெயரில் இருந்து உருவானது. இவன் நீரில் வாழ்ந்ததாக ஐதீகம். "ஜல்" என்பது நீரையும், அந்தர் என்பது "உள்ளே" என்பதும் பொருள். ஜலந்தர் பஞ்சாபின் தலைநகராக 1953ம் ஆண்டு வரை இருந்தது. பின்னர் சண்டிகர் தலைநகராக்கப்பட்டது. பிரித்தானியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது இதன் பெயர் ஜுலுந்தர் ஆகும்.

மக்கள்தொகு

2001 ஆம் ஆண்டு தரவுகளின் படி[1] ஜலந்தரின் மக்கள் தொகை 701,223. இவர்களில் 54 விழுக்காட்டினர் ஆண்கள். 74 விழுக்காட்டினர் படிப்பறிவுள்ளோர். 10 விழுக்காட்டினர் 6 வயதிற்கும் குறைவானோர்.

மேற்கோள்கள்தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. 2004-06-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-11-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலந்தர்&oldid=2085238" இருந்து மீள்விக்கப்பட்டது