பகவந்த் மான்
பகவந்த் மான் (Bhagwant Singh Mann ) (பிறப்பு: 17 அக்டோபர் 1973) இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், நகைச்சுவையாளரும், பாடகரும், முன்னாள் நடிகரும் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இவரது பெயர் அறிவிக்கப்பட்டது.[2]இவர் 10 மே 2017 அன்று சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பகவந்த் மான் | |
---|---|
![]() பகவந்த் சிங் மான் | |
17வது பஞ்சாப் முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மார்ச் 2022 | |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முன்னையவர் | சரண்ஜித் சிங் சன்னி |
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மார்ச் 2022 | |
முன்னையவர் | தல்வீர் சிங் கங்குரா |
தொகுதி | தூரி சட்டமன்றத் தொகுதி |
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 14 மார்ச் 2022 | |
முன்னையவர் | விஜய் இந்தர் சிங்லா |
தொகுதி | சங்கரூர் |
ஒருங்கிணைப்பாளர், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 சனவரி 2019[1] | |
முன்னையவர் | பல்பீர் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பகவந்த் சிங் மான் 17 அக்டோபர் 1973 சங்கரூர், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பஞ்சாப் மக்கள் கட்சி (2012-2014) |
தொழில் | நடிகர், பாடகர், நகைச்சுவையாளர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி |
கையெழுத்து | ![]() |
இசை வாழ்க்கை | |
பிற பெயர்கள் | "நகைச்சுவை மன்னன்", "ஜுக்னு" |
இசை வடிவங்கள் | நகைச்சுவை |
இசைத்துறையில் | 1992–2015 |
அரசியல் வாழ்க்கை
தொகு2011-ஆம் ஆண்டில் பகவந்த் மான் பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார்.[3][4]2012 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் லெகரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மார்ச் 2014-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து சங்கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 2,11,721 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.[5]2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக ஜலாலாபாத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். [6] இவர் 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலின் போது போதை மது சர்ச்ச்சையில் சிக்கினார்.[7] [8]
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பகவந்த் மான் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சங்கரூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்றார்.
பஞ்சாப் முதலமைச்சர் பதவி
தொகுசனவரி 18, 2022 அன்று, பகவந்த் மான், 2022 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சருக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் 93% வாக்காளர்கள் பகவந்த் மான் முதல்வராக ஆக வேண்டும் என்று கூறினர். இவரது தலைமையின் கீழ் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 2022ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களில் 117 இடங்களில் 92 இடங்களை வென்றது.[9] பஞ்சாபின் முதல் அமைச்சராகப் பகவந் மான் பதவியேற்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.[10][11]
இவர் 16 மார்ச் 2022 அன்று, பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் கலனில் பஞ்சாப் முதலமைச்சராக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.[12][13]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ A year after exit Bhagwant Mann reappointed Punjab Aam Aadmi Party Chief
- ↑ Punjab election: AAP announces Bhagwant Mann as its chief ministerial candidate
- ↑ [1] பரணிடப்பட்டது 13 ஆகத்து 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "I want to see Punjab growing- Bhagwant Mann". Americanpunjabinews.com. 2011-03-21. Archived from the original on 3 September 2011. Retrieved 2015-06-19.
- ↑ "Sangrur MP Bhagwant Mann of AAP". India Today (in ஆங்கிலம்). June 2, 2014. Retrieved 2019-05-17.
- ↑ "Bhagwant Mann to contest from Jalalabad". Tribuneindia News Service (in ஆங்கிலம்). Retrieved 2021-06-17.
- ↑ "Mann 'drunk' complaint to Parliament: 'Kejriwal was told many times but least bothered'". The Indian Express (in ஆங்கிலம்). 2016-07-23. Retrieved 2021-06-17.
- ↑ "Bhagwant Mann says won't drink from now, Arvind Kejriwal terms it 'sacrifice' for people". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-01-20. Retrieved 2021-06-17.
- ↑ "AAP Picks Bhagwant Mann For Punjab, Says He Scored 93% In Televote". NDTV News Website (in ஆங்கிலம்). Retrieved 21 January 2022.
- ↑ ""This Big A Majority Scares Me Too," Says Arvind Kejriwal". NDTV.com. Retrieved 2022-03-10.
- ↑ "'Will take oath in Bhagat Singh's ancestral village, not Raj Bhawan':, Bhagwant". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-03-10. Retrieved 2022-03-10.
- ↑ Bhagwant Mann assumes office as Punjab Chief Minister
- ↑ 'Won't waste single day': Bhagwant Mann takes oath as Punjab CM at Bhagat Singh's village