பன்வாரிலால் புரோகித்

இந்திய அரசியல்வாதி

பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit, மராத்தி: बनवारीलाल पुरोहित, பிறப்பு: ஏப்ரல் 16, 1940) என்பவர் மகாராட்டிரம் மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பஞ்சாப் ஆளுநராக பணியாற்றினார் . இவர் 14வது தமிழ்நாடு ஆளுநராக 2017 முதல் 2021 வரை பணியாற்றினார். இவர் முன்னாள் அசாம் மாநில ஆளுநர் மற்றும் முன்னாள் மேகாலயா மாநில ஆளுநராக பணியாற்றினார். பன்வாரிலால் நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ஒரு முறை பாரதீய ஜனதா கட்சியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6] இவர் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர்.[7]

பன்வாரிலால் புரோகித்
Banwarilal Purohit
29வது பஞ்சாப் ஆளுநர்
பதவியில்
31 ஆகஸ்ட் 2021 – 3 பிப்ரவரி 2024
முன்னையவர்வி. பி. சிங்
14வது தமிழ்நாடு ஆளுநர்
பதவியில்
6 அக்டோபர் 2017[1] – 17 செப்டம்பர் 2021
முன்னையவர்சி. வித்தியாசாகர் ராவ்
பின்னவர்ஆர். என். ரவி
அசாம் ஆளுநர்
பதவியில்
22 ஆகத்து 2016 – 30 செப்டம்பர் 2017
முன்னையவர்பத்மநாப ஆச்சாரியார்
பின்னவர்ஜகதீஷ்
மேகாலயா ஆளுநர்
கூடுதல் பொறுப்பு [2]
பதவியில்
27 சனவரி 2017 – 29 செப்டம்பர் 2017
முன்னையவர்வி. சண்முகநாதன்
பின்னவர்கங்க பிரசாத்
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்[3]
பதவியில்
1984-1991 ,1996-1998
தொகுதிநாக்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல் 1940[4]
நவல்கர், சுன்சுனூ மாவட்டம், இராஜஸ்தான்[4] , இந்தியா இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்புஸ்பாதேவி புரோகித்[4]
பிள்ளைகள்இரண்டு மகன்கள், ஒரு மகள்[4]

அரசியல் வாழ்க்கை தொகு

  • பன்வாரிலால் முதன் முதலாக அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியில் சேர்ந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து துவக்கிய இந்திரா காங்கிரஸ் கட்சி சார்பில், 1978 ஆம் ஆண்டில் நாக்பூர் கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]
  • பின்னர் நாக்பூர் தெற்கு தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு 1980 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் 1982 ஆம் ஆண்டு குடிசை மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பனியாற்றியுள்ளார்.
  • 1984 ஆம் ஆண்டில் அவர் 8 வது மக்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில் அவர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு இயக்கத்தை ஆரம்பித்தபோது அதில் சேர்ந்தார். 1991 ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் இந்திய தேசிய காங்கிரசின் தத்தா மெகேவிடம் தோல்வியடைந்தார்.
  • 1996 இல், 11வது மக்களவைக்கு பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பிரமோத் மகாஜனுடன் உருவாகிய தீவிர வேறுபாடு காரணமாக, பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1999-ல் ராம்தேக்கில் இருந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
  • 2003 ஆம் ஆண்டில் விதார்பா ராஜ்யக் கட்சி என்ற தனது சொந்த கட்சியைத் தொடங்கினார். 2004 இல் நாக்பூரிலிருந்து லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார்.
  • 2009 இல் மீண்டும் பா.ஜ.க.வின் சார்பாக போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசின் விலாஸ் முத்தெமரிடம் தோல்வியுற்றார்.
  • பாதுகாப்புத் துறையின் நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய “ஹிதவாதா“ என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.[9]

ஆளுநர் பணிகள் தொகு

ஆகத்து 2016, புரோகித் அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதுவரை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த இந்த ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.[10][11] செப்டம்பர் 30, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இவர் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.[12] இவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.[13] 2016 ஆம் ஆண்டு ஆகத்து 17 ஆம் தேதி அசாம் மாநில ஆளுநராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.[14]

பிற தொழில்கள் தொகு

1979 இல் நாக்பூர் தினசரி செய்தித்தாளான தி ஹிடேவாடாவின் உரிமையை சர்வீன்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டியிடமிருந்து புரோகித் பெற்றார். இச்செய்தித்தாள் 1911 இல் கோபால் கிருஷ்ணா கோகலேவால் தொடங்கப்பட்டது. புரோகித் அதன் தற்போதைய நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நாக்பூரில் உள்ள ஸ்ரீ ராம்தேபாபா பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "His Excellency Governor of Tamil Nadu". www.assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
  2. "President Mukherjee accepts V Shanmuganathan's resignation".
  3. "Banwarilal Purohit Lok Sabha Profiel". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 1 October 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 "Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
  5. "Banwari Lal Purohit: Former Cong leader who claimed he arranged meeting between Rajiv & RSS". 18 August 2016.
  6. "BJP leader Purohit is new governor of Assam - Times of India".
  7. மயிலாடன் (30 செப்டம்பர் 2017). "புதிய ஆளுநர்". விடுதலை இம் மூலத்தில் இருந்து 2017-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171013200847/http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/150375-2017-09-30-11-07-17.html. பார்த்த நாள்: 3 அக்டோபர் 2017. 
  8. "Banwarilal Purohit Appointed Governor of Tamil Nadu, Ganga Prasad of Meghalaya". 30 செப்டம்பர் 2017. http://www.india.com/news/india/banwarilal-purohit-appointed-governor-of-tamil-nadu-ganga-prasad-of-meghalaya-2506430. பார்த்த நாள்: 2 அக்டோபர் 2017. 
  9. "புதிய கவர்னர் பன்வாரிலால்: 10 அம்சங்கள்". தினமலர். 30 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "Banwarilal Purohit sworn in as Assam governor". 22 August 2016.
  11. "Banwarilal Purohit appointed Assam Governor". www.nagpurtoday.in.
  12. "தமிழக ஆளுநராக "பன்வாரிலால் புரோகித்" நியமனம்".
  13. "தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்". Dinamani.
  14. "ஓராண்டுக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் - Panwarilal Purokhit appointed as new Governor of Tamil Nadu - Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 2017-10-01. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
சி. வித்தியாசாகர் ராவ்
தமிழக ஆளுநர்
6 அக்டோபர் 2017 – 17 செப்டம்பர் 2021
பின்னர்
ஆர். என். ரவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்வாரிலால்_புரோகித்&oldid=3882131" இலிருந்து மீள்விக்கப்பட்டது