அசாம் ஆளுநர்களின் பட்டியல்
அசாம் ஆளுநர்களின் பட்டியல், அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]
அசாம் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், அசாம் | |
வாழுமிடம் | ராஜ்பவன், குவகாத்தி |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | நிக்கோலஸ் பீட்சன் பெல் |
உருவாக்கம் | 3 சனவரி 1921 |
ஆக்கிரமிக்கப்பட்ட அசாம் பிரித்தானிய இராணுவத் தளபதிகள் (1824-26)
தொகு1824 ஆம் ஆண்டில், பிரித்தானிய படைகள் அசாமை ஆக்கிரமித்தன, இது அரசியல் ரீதியாக ஒருபோதும் இந்தியாவின் அல்லது பர்மாவின் பகுதியாக இல்லை.
- ஜார்ஜ் மெக்மொரின், 1824
- ஆர்தர் ரிச்சர்ட்ஸ், 1824-26
அசாம் பிரித்தானிய அரசியல் முகவர்கள் (1826–28)
தொகுபிப்ரவரி 24, 1826இல், யண்டபூ ஒப்பந்தம் அசாமின் சில பகுதிகளை, பர்மாவிலிருந்து பிரிட்டனுக்கு வழங்கியது.
- டேவிட் ஸ்காட், 1826-28
அசாம் ஆணையர்கள் (1828–74)
தொகு1828 ஆம் ஆண்டில், மேற்கு அசாம் வங்காள மாகாணத்தில் இணைக்கப்பட்டது, அதன்பின்னர் 1833 ஆம் ஆண்டில் அசாமின் எஞ்சிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. அசாமின் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார், இவர் வங்காள ஆளுநருக்கு அடிபணிந்தார்.
- டேவிட் ஸ்காட், 1828-20 ஆகத்து 1831
- தாமஸ் காம்ப்பெல் இராபர்ட்சன், 1831-34
- பிரான்சிஸ் ஜென்கின்ஸ், 1834-61
- ஹென்றி ஹாப்கின்சன், 1861-74
அசாம் தலைமை ஆணையர்கள் (1874-1905)
தொகு1874 ஆம் ஆண்டில், அசாம் வங்காள அதிபரிடமிருந்து பிரிக்கப்பட்டது.
- ரிச்சர்ட் ஹார்டே கீட்டிங், 1874–78
- ஸ்டீவர்ட் கொல்வின் பேய்லி, 1878–81
- சர் சார்லஸ் ஆல்பிரட் எலியட், 1881-85
- வில்லியம் எர்ஸ்கைன் வார்டு, 1885-87, முதல் முறையாக
- சர் டென்னிஸ் ஃபிட்ஸ்பாட்ரிக், 1887-89
- ஜேம்ஸ் வெஸ்ட்லேண்ட், 1889
- ஜேம்ஸ் வாலஸ் குயின்டன், 1889-91
- வில்லியம் எர்ஸ்கைன் வார்டு, 1891-96, இரண்டாவது முறை
- சர் ஹென்றி ஜான் ஸ்டெட்மேன் காட்டன், 1896-1902
- சர் ஜோசப் பாம்ப்ஃபில்ட் புல்லர், 1902-05
கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் துணைநிலை ஆளுநர்கள் (1905–12)
தொகு1905 ஆம் ஆண்டில், வங்காளம் பிரிக்கப்பட்டது மற்றும் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவை துணைநிலை ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன.
- சர் ஜோசப் பாம்ப்ஃபில்ட் புல்லர், 1905-06
- இலான்சலோட் ஹரே, 1906–11
- சார்லஸ் ஸ்டூவர்ட் பேலி, 1911-12
அசாம் தலைமை ஆணையர்கள் (1912–21)
தொகு1912 ஆம் ஆண்டில், கிழக்கு வங்காளம் மீண்டும் வங்காளத்துடன் இணைக்கப்பட்டது, அசாம் மாகாணம் மீண்டும் ஒரு தலைமை ஆணையரால் ஆளப்பட்டது.
- சர் ஆர்க்டேல் ஏர்ல், 1912-18
- சர் நிக்கோலஸ் டாட் பீட்சன்-பெல், 1918–3 சனவரி 1921
அசாம் ஆளுநர்கள் (1921–47)
தொகு1921 ஆம் ஆண்டில், தலைமை ஆணையர் ஆளுநராக மேம்படுத்தப்பட்டார்.
- சர் நிக்கோலஸ் டாட் பீட்சன்-பெல், 3 சனவரி 1921 – 2 ஏப்ரல் 1921
- சர் வில்லியம் சின்க்ளேர் மாரிஸ், 3 ஏப்ரல் 1921 - 10 அக்டோபர் 1922
- சர் ஜான் ஹென்றி கெர், 10 அக்டோபர் 1922 - 28 சூன் 1927
- சர் எக்பர்ட் லாரி லூகாஸ் ஹம்மண்ட், 28 சூன் 1927 - 11 மே 1932
- சர் மைக்கேல் கீன், 11 மே 1932 - 4 மார்ச் 1937
- ராபர்ட் நீல் ரீட், 4 மார்ச் 1937 - 4 மே 1942
- சர் ஆண்ட்ரூ கோர்லே கிளோ, 4 மே 1942 - 4 மே 1947
- சர் முகம்மது சலே அக்பர் ஐடாரி, 4 மே 1947 - 15 ஆகத்து 1947
அசாம் ஆளுநர்கள் (1947 முதல்)
தொகுஇந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "President Kovind Appoints 5 New Governors, Tamil Nadu Gets Its Own After A Year". NDTV.com. https://www.ndtv.com/india-news/president-approves-appointment-of-5-governors-1-lieutenant-governor-1757018. பார்த்த நாள்: 30 September 2017.
- ↑ "P B Acharya to assume additional charge as Assam Governor". The Indian Express. 11 December 2014. http://indianexpress.com/article/india/india-others/p-b-acharya-to-assume-additional-charge-as-assam-governor/. பார்த்த நாள்: 9 January 2015.
- ↑ http://www.business-standard.com/article/news-ians/najma-heptulla-mukhi-appointed-governors-116081700886_1.html