பிரஜ் குமார் நேரு

சர் பிரஜ் குமார் நேரு (Braj Kumar Nehru) (4 செப்டம்பர் 1909 - 31 அக்டோபர் 2001) இவர் ஓர் இந்திய இராஜதந்திரியாகவும் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதராகவும் இருந்தார் (1961-1968).[2] இவர் பிரிஜ்லால் நேரு மற்றும் இராமேசுவரி நேருவின் மகனும், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் மருமகனும் ஆவார்.

பிரஜ் குமார் நேரு
அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர்
பதவியில்
1961–1968
முன்னையவர்எம். சி. சாக்ளா
பின்னவர்அலி யுவர் ஜங்
ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர் ஸ்தானிகர்]
பதவியில்
1973–1977
முன்னையவர்அபா பந்த்
பின்னவர்நாராயண கணேசு கோர்
சம்மு காசுமீரின் ஆளுநர்
பதவியில்
22 பிப்ரவரி 1981-26 ஏப்ரல் 1984
முன்னையவர்இலட்சுமி காந்த் ஜா
பின்னவர்சக்மோகன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-09-04)4 செப்டம்பர் 1909
அலகாபாத், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரிட்டிசு இந்தியா
இறப்பு31 அக்டோபர் 2001(2001-10-31) (அகவை 92)
கசௌலி, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
துணைவர்
சோபா (மாக்டோல்னா பிரீட்மேன்) (தி. 1935)
[1]
பிள்ளைகள்அனில் குமார்
முன்னாள் கல்லூரிஆக்சுபோர்டு இலண்டன் பொருளியல் பள்ளி

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிரிஜ்லால் நேரு மற்றும் இராமேசுவரி நேரு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[3]அலகாபாத் பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பொருளியல் பள்ளியிலும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.[4] பல்வேறு துறைகளில் சிறப்பான சேவைகளை வழங்கியதற்காக இவருக்கு பஞ்சாப் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் முனைவர் பட்டம் வழங்கியது.[5] இவரது தாத்தா நந்தலால் நேரு, மோதிலால் நேருவின் மூத்த சகோதரராவார்.[6] இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு உறவினர். 1935ஆம் ஆண்டில், இவர் இங்கிலாந்தில் ஒரு சக மாணவியான ஆத்திரிய யூத பின்னணியைச் சேர்ந்த மாக்டோல்னா பிரீட்மேன் என்பவரை மணந்தார்.[1] இவர் தனது பெயரை சோபா நேரு என்று மாற்றினார். இவர்களுக்கு ஆதித்யா நேரு, அசோக் நேரு, அனில் நேரு என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.

தொழில்

தொகு

தேசியம்

தொகு

1934 இல் இந்தியக் குடிமை பணியில் சேர்ந்த இவர் இந்தியாவின் ஏழு வெவ்வேறு மாநிலங்களின் ஆளுநராக உயர்ந்தார். இவர் ஜம்மு-காஷ்மீர் (1981–84), அசாம் (1968–73),[3] குசராத்து (1984–86), நாகாலாந்து (1968–73), மேகாலயா (1970–73), மணிப்பூர் (1972–73) மற்றும் திரிபுரா (1972–73) ஆகிய மாகாணங்களில் ஆளுநராக பணி புரிந்தார். 1934 முதல் 1937 வரை இவர் பஞ்சாப் மாகாணத்தில் பல்வேறு அரசு பதவிகளை வகித்தார்.[3] இவர், 1957 இல் பொருளாதார விவகாரங்களின் செயலாளரானார். இவர் 1958 இல் இந்தியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான (வெளி நிதி உறவுகள்) தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

பாரூக் அப்துல்லா அரசாங்கத்தை கலைக்கும் முடிவில் இந்திரா காந்திக்கு உதவ மறுத்ததால் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பதவியிலிருந்து ஒரே இரவில் குசராத்திற்கு மாற்றப்பட்டார்.[7]

பன்னாடு

தொகு

நேரு, உலக வங்கியில் (1949) நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார அமைச்சராக இருந்தார் (1954).[3] 1958 ஆம் ஆண்டில் எய்ட் இந்தியா கிளப்பை உருவாக்க இவர் உதவினார், இது இந்தியாவின் வளர்ச்சிக்காக 2 மில்லியன் அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்த நாடுகளின் கூட்டமைப்பாகும். இவர் ஓர் இராஜதந்திரியாகவும், பல நாடுகளின் தூதராகவும் பணியாற்றினார். மேலும் 1951-ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் மறுத்துவிட்டார். இவர் 1973 முதல் 1977 வரை இலண்டனில் இந்திய உயர் ஸ்தானிகராகவும் இருந்தார். இவர், 14 ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் முதலீட்டுக் குழுவின் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இழப்பீட்டு மாநாட்டில் பிரிட்டனுடனான 'ஸ்டெர்லிங்ஸ் பேலன்ஸ்' பேச்சுவார்த்தையில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

எழுத்தாளர்

தொகு

இவர் நைஸ் கைஸ் பினிஷ் செகண்ட் என்ற சுயசரிதையை எழுதினார்.[8] இவரிடம் 35 ஆண்டுகள் பணியாற்றிய திரு.ரமேஷ் குமார் சக்சேனா என்பவர் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத உதவினார்.

இறப்பு

தொகு

இவர் இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் கசௌலியில் 31 அக்டோபர் 2001 அன்று தனது 92 வது வயதில் காலமானார். இவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது .

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sharma, Ashwani (27 April 2017). "Kasauli loses its oldest resident, Jawaharlal Nehru cousin's wife". The Indian Express. http://indianexpress.com/article/india/kasauli-loses-its-oldest-resident-jawaharlal-nehru-cousins-wife-4629747/. 
  2. "Braj Kumar Nehru, India's Ambassador to US & UK". highbeam.com. 13 November 2001. Archived from the original on 12 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 "Governors of Gujarat: details of the life sketch of B.K. Nehru". Rajbhavan (Govt of India). Archived from the original on 10 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Braj Kumar Nehru". Scotsman.com. 2 January 2002. http://www.scotsman.com/news/obituaries/braj-kumar-nehru-1-591934. 
  5. chandigarh (31 October 2001). "B.K. Nehru Dead". tribune.com. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  6. "Community: Prominent Kashmiri's". KECSS (Regd). Archived from the original on 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  7. http://www.rediff.com/news/may/03nehru.htm
  8. "Living A Full Life". Outlook. 26 March 1997. http://www.outlookindia.com/article.aspx?203247. பார்த்த நாள்: 6 March 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜ்_குமார்_நேரு&oldid=3926705" இலிருந்து மீள்விக்கப்பட்டது