கசௌலி
கசௌலி (Kasauli) (இந்தி: कसौली), இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில், 1900 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்திய இராணுவப் பாசறை நகரம் ஆகும். [1] 1842ல் கசௌலி பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் படைத்துறை நகரத்தை நிறுவினர். [2]
கசௌலி
कसौली | |
---|---|
படைவீடு | |
ஆள்கூறுகள்: 30°54′N 76°58′E / 30.9°N 76.96°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சோலன் |
ஏற்றம் | 1,900 m (6,200 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 173204 |
இந்நகரம் சிம்லாவிலிருந்து 77 கிமீ தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 65 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கசௌலி நகரத்தின் தொடருந்து நிலையம் 1927 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. [3]
மக்கள் தொகையியல்
தொகுகசௌலி பாசறை நகரத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 3,885 ஆகும். அதில் ஆண்கள் 2,183 ஆகவும்; பெண்கள் 1,702 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 406 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.23% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 94.05 % ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 87.56 % ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 780 பெண்கள் வீதம் உள்ளனர். [4]954 வீடுகளைக் கொண்டுள்ள கசௌலி பாசறை நகராட்சி மன்றம் ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
சமயம்
தொகுமொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 91.97% ஆகவும்; இசுலாமியர்கள் 2.70% ஆகவும்; கிறித்தவர்கள் 2.27% ஆகவும்; சீக்கியர்கள் 2.21% ஆகவும்: பௌத்தர்கள் 0.49% ஆகவும்; சமணர்கள் 0.31% ஆகவும்; மற்றவர்கள் 0.05% ஆகவும் உள்ளனர்.
தட்ப வெப்பம்
தொகுகசௌலி நகரத்தின் குளிர்கால வெப்பம் 2 பாகை செல்சியசாகவும், கோடை கால வெப்பம் 32 பாகை செல்சியஸ் வரையும் உணரப்படுகிறது. ஆண்டு மழைப் பொழிவு 1020 மில்லி மீட்டராகும்.
கசௌலியின் பிரபல நிறுவனங்கள்
தொகுமத்திய ஆராய்ச்சி நிலையம்
தொகுகசௌலியில் மத்திய ஆராய்ச்சி நிலையம் (CRI) 1905ல் நிறுவப்பட்டது.[5]
உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கசௌலி மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் அம்மை, நாய்க்கடி, பாம்புக்கடி, தேள்கடி, முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் (DPT vaccine) உற்பத்திச் செய்யப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் நுண்ணுரியல் (Microbiology) பாடத்தில் முதுகலை பட்ட மேற்படிப்புகள் கற்றுத்தருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 179.
- ↑ Sharma, Ambika; "Architecture of Kasauli churches"; The Tribune, Online edition, 2 March 2001. Retrieved 7 July 2012.
- ↑ Kasauli, India Page, fallingrain.com. Retrieved 8 July 2011
- ↑ [ http://www.census2011.co.in/data/town/800125-kasauli-himachal-pradesh.html Kasauli Religion Data 2011]
- ↑ "Pasteur Institute of India, Kasauli" Nature 6 July 1940. Retrieved 9 May 2011
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kasauli
- Himachal Pradesh website பரணிடப்பட்டது 2011-07-09 at the வந்தவழி இயந்திரம். Retrieved 8 July 2011
- "Development plan for Kasauli Planning Area" பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம், Himachal Pradesh Government. Retrieved 8 July 2011
- "Kasauli - My Ride" பரணிடப்பட்டது 2014-02-18 at the வந்தவழி இயந்திரம், Tranquilblog
- "Places to visit in Kasauli", Travel Diary