தொடருந்து நிலையம்

தொடருந்து நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையம் என்பது பொதுவாக இரயிலில் பயணிகள் அல்லது சரக்குகளை ஏற்ற அல்லது இறக்க அமைக்கப்பட்ட இடம் ஆகும்.[1] இது பொதுவாக ஒரு நடை மேடையை தொடருந்துப் பாதைக்குப் பக்கவாட்டில் கொண்டுள்ளது. இவை நிலைய அலுவலர் அலுவலகம், தொடருந்துப் பாதை பராமரிப்புப் பணியாளர்களுக்கான அறைகள், பயணச்சீட்டு விற்பனை அறை போன்றவைகளைக் கொண்டிருக்கும். பெரிய தொடருந்து நிலையங்களில் பொருட் கிடங்கு மற்றும் சரக்குந்து தொடர்பான சேவைகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், தொடருந்து தொடர்பான பல்வேறு துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் போன்றவை கூடுதலாக இருக்கும். இவை இரண்டுக்குமிடையில் பயணிகள் ஏறி, இறங்கிக் கொள்வதற்கு வசதியாக அமைக்கப்படும் தொடருந்து நிலையங்கள் 'தொடருந்து நிறுத்தம்' என்று குறிப்பிடப்படுகின்றது.

சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்.
சென்னை சென்ட்ரல் தொடருந்து நிலையத்தின் உட்பகுதி
கிண்டி தொடர்வண்டி நிறுத்தம்.

தொடருந்து சந்திப்பு

தொகு

ஒன்றுக்கு மேற்பட்ட தொடருந்துப் பாதைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள தொடருந்து நிலையம் தொடருந்து சந்திப்பு எனப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "tamilnadutourism". plan-your-trip-railways. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2024.
  2. keyword: Zwischenbahnhof intermediate station, in: Lexikon der Eisenbahn, Transpress; Motorbuch Verlag, Stuttgart 1990, ISBN 3-344-00160-4, p. 928.

மேலும் காண்க

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Railway station
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடருந்து_நிலையம்&oldid=4103218" இலிருந்து மீள்விக்கப்பட்டது