சரக்கு
சரக்கு என்பது வணிக லாபத்துக்காக கப்பல், வானூர்தி, தொடர்வண்டி, அல்லது சரக்குந்து ஆகியவற்றின் மூலம் இடம்பெயர்க்கப்படும் பொருட்களைக் குறிக்கும். தற்காலத்தில் பெட்டகங்கள் பல்வேறு போக்குவரத்து மூலங்கள் வழியாகக் கொண்டு செல்ல உதவுகின்றன.
உப்பு, எண்ணெய், வேதிப்பொருட்கள், உணவு தானியங்கள், ஊர்திகள், இயந்திரங்கள் முதலிய பல்வேறு பொருட்கள் இடம்பெயர்க்கப்படுகின்றன. இவையனைத்தும் சரக்கு எனப்படும். பழங்கள் முதலிய கெடக்கூடிய சரக்குகள் பெரும்பாலும் விமானங்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகின்றன. தரைவழி சரக்குப் போக்குவரத்தில் தொடர்வண்டி முதன்மையான இடம் வகிக்கிறது.