அஞ்சல் குறியீட்டு எண்
அஞ்சல் குறியீட்டு எண் அல்லது அஞ்சலகச் சுட்டு எண் (PIN) அல்லது பின்கோடு இந்தியாவில் அஞ்சல் சேவைகளை அளிக்கும் இந்திய அஞ்சல் துறையினால் அஞ்சல் அலுவலகங்களைக் குறித்திட பாவிக்கப்படும் எண்ணாகும். இந்த எண் ஆறு இலக்கங்கள் கொண்டது. இந்த முறை ஆகஸ்ட் 15, 1972 அன்று நடைமுறைக்கு வந்தது.[1][2][3]
குறியீட்டமைப்பு தொகு
இந்தியா ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எட்டு மண்டலங்கள் நிலப்பரப்பு தொடர்பாகவும் ஒன்று செயல்பாடு தொடர்பாகவும் பிரிக்கப்பட்டன. அஞ்சலகச் சுட்டு எண்ணின் முதல் இலக்கம் எந்த மண்டலத்தில் அஞ்சலகம் அமைந்துள்ளது எனக் குறிக்கிறது. இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும், மூன்றாவது, வகைப்படுத்தும் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை அடையாளப்படுத்தும்.
இந்தியாவின் மாநிலங்களையும் ஆட்சிப்பகுதிகளையும் உள்ளடக்கிய ஒன்பது பின் மண்டலங்கள்:
- 1 - தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர்(பாகிஸ்தான்-ஆளுமை கீழுள்ள காசுமீர் உட்பட), சண்டிகார்
- 2 - உத்திரப் பிரதேசம், உத்தராகண்டம்
- 3 - இராசத்தான், குசராத், தமன் தியூ, தாத்ரா மற்றும் நகர் அவேலி
- 4 - மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், சத்தீசுக்கர்
- 5 - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்
- 6 - தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி
- 7 - ஒரிசா, மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபார் தீவுகள்
- 8 - பீகார், சார்க்கண்ட்
- 9 - இராணுவ அஞ்சலகம்(APO) மற்றும் கள அஞ்சலகம் (FPO)
முதல் இரு இலக்கங்கள் | ISO 3166-2:IN | அஞ்சல் வட்டம் |
---|---|---|
11 | DL | தில்லி |
12 and 13 | HR | அரியானா |
14 to 15 | PB | பஞ்சாப் |
16 | CH | சண்டிகார் |
17 | HP | இமாச்சலப் பிரதேசம் |
18 to 19 | JK, LA | சம்மு & காசுமீர் |
20 to 28 | UP, UT | உத்திரப் பிரதேசம் |
30 to 34 | RJ | இராசத்தான் |
36 to 39 | GJ | குசராத் |
40 to 44 | MH | மகாராட்டிரம் |
45 to 48 | MP | மத்தியப் பிரதேசம் |
49 | CT | சத்தீஸ்கர் |
50 | TG | தெலுங்கானா |
51–53 | AP | ஆந்திரப் பிரதேசம் |
56–59 | KA | கர்நாடகா |
60–66 | TN | தமிழ்நாடு |
605 | PY | புதுச்சேரி |
67–69 | KL | கேரளா |
682 | LD | லட்சத்தீவு |
70–74 | WB | மேற்கு வங்காளம் |
737 | SK | சிக்கிம் |
744 | AN | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
75–77 | OR | ஒடிசா |
78 | AS | அசாம் |
790–792 | AR | அருணாச்சல பிரதேசம் |
793–794 | ML | மேகாலயா |
795 | MN | மணிப்பூர் |
796 | MZ | மிசோரம் |
80-85 | BR, JH | பீகார், சார்க்கண்டு |
90-99 | APS | இராணுவ சேவை |
சேவை வழி தொகு
நான்காவது இலக்கமானது வரிசைப்படுத்தும் மாவட்டத்தில் வழங்கும் அலுவலகம் அமைந்துள்ள வழியைக் குறிக்கிறது.[4] வரிசைப்படுத்தும் மாவட்டத்தின் முக்கிய பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு இது 0 ஆகும்.
மேற்கோள்கள் தொகு
- ↑ India. Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. 1974. பக். 305. https://books.google.com/books?id=kj9EAAAAIAAJ. பார்த்த நாள்: 17 May 2013.
- ↑ "Mails section". Indian government postal department இம் மூலத்தில் இருந்து 23 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190723133655/https://www.hindustantimes.com/ht-school/it-s-how-india-s-pin-codes-work/story-1yTxGBZFZ64QqlSwZ0ZORL.html.
- ↑ "Using pincode, maps to trace address". timesofindia.com இம் மூலத்தில் இருந்து 2016-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161005130055/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib%3ALowLevelEntityToPrint_TOI&Type=text%2Fhtml&Locale=english-skin-custom&Path=TOIPU%2F2010%2F08%2F20&ID=Ar00401.
- ↑ "Tamilnadu Postal Circle – Pincode". tamilnadupost.nic.in இம் மூலத்தில் இருந்து 2014-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140720160939/http://www.tamilnadupost.nic.in/hsvc/pincode.htm.
வெளி இணைப்புகள் தொகு
- IndiaPost - இந்திய அஞ்சல் சேவை பரணிடப்பட்டது 2007-05-27 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய அஞ்சல் சேவை பரணிடப்பட்டது 2007-05-04 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய பின்கோடுகள் பரணிடப்பட்டது 2010-12-19 at the வந்தவழி இயந்திரம்
- இந்திய சுட்டு எண்கள் அகரவரிசையில் பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம்
- PIN Codes list with lat/long information