ஆகத்து 15
நாள்
(ஆகஸ்ட் 15 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஆகத்து 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
MMXXIV |
ஆகத்து 15 (August 15) கிரிகோரியன் ஆண்டின் 227 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 228 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 138 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
- 717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது.
- 927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள்.
- 1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான்.
- 1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் மக்பெத் மூன்றாம் மால்கமுடனான போரில் கொல்லப்பட்டார்.
- 1248 – செருமனியில் கோல்ன் கதீட்ரல் பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இக்கோவில் 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.
- 1261 – பைசாந்தியப் பேரரசராக எட்டாம் மைக்கேல் பலையோலோகசு கான்ஸ்டண்டினோபில்லில் முடிசூடினார்.
- 1281 – சப்பான் மீதான முற்றுகையின் போது குப்லாய் கானின் மங்கோலியக் கடற்படைக் கப்பல்கள் இரண்டாவது தடவையாக கமிக்காசு என அழைக்கப்படும் சூறாவளியின் தாக்கத்தால் அழிந்தன.
- 1461 – திரெபிசோந்து இராச்சியம் உதுமானிய சில்தான் இரண்டாம் முகமதிடம் சரணடைந்தது. பைசாந்தியப் பேரரசின் உண்மையான முடிவு என வரலாற்றாளர்களால கணிக்கப்பட்டது. பேரரசர் டேவிட் பின்னர் கொலை செய்யப்பட்டார்.
- 1483 – சிஸ்டைன் சிற்றாலயத்தை திருத்தந்தை நன்காம் சிக்ஸ்டசு புனிதப்படுத்தினார்.
- 1511 – போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காஅவைக் கைப்பற்றினான்.
- 1519 – பனாமா நகரம் நிறுவப்பட்டது.
- 1534 – லொயோலா இஞ்ஞாசியும் அவரது ஆறு தோழர்களும் ஆரம்ப உறுதியை எடுத்தனர். இது 1540 செப்டம்பரில் இயேசு சபை உருவாகக் காரணமானது.
- 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியார் சப்பான், ககோசிமா கரையை அடைந்தார்.
- 1599 – ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன.
- 1914 – அமெரிக்கக் கட்டடக் கலைஞர் பிராங்க் லாய்டு ரைட்டின் பணியாள் ஏழு பேரைக் கொலை செய்து, ரைட்டின் விஸ்கொன்சின் வீட்டைத் தீயிட்டுக் கொளுத்தினான்.
- 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
- 1914 – முதலாம் உலகப் போர்: முதலாவது உருசிய இராணுவம் கிழக்கு புருசியாவை அடைந்தது.
- 1920 – வார்சாவில் இடம்பெற்ற போரில் போலந்து இராணுவத்தினர் சோவியத் படைகளை வென்றனர்.
- 1939 – போலந்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 26 போர் வானூர்திகளில் 13 தரையில் மோதி எரிந்து அழிந்தன.
- 1940 – கிரேக்க-இத்தாலியப் போர்: இத்தாலிய நீர்மூழ்கி ஒன்று கிரேக்கக் கப்பல் ஒன்றித் தாக்கி மூழ்கடித்தது.
- 1941 – யோசெப் யாக்கோப்சு என்ற ஆங்கிலேயெ இராணுவ வீரர் உளவு நடவடிக்கைகளுக்காக இலண்டன் கோபுரத்தில் வைத்து சுடப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: டிராகூன் நடவடிக்கை: கூட்டுப் படைகள் தெற்கு பிரான்சில் தரையிறங்கின.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ சப்பான் சரணடைந்ததையும், கொரியா சப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.
- 1947 – இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
- 1947 – முகமது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.
- 1948 – கொரியக் குடியரசு உருவானது.
- 1950 – அசாமில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் காரணமாக 574 பேர் உயிரிழந்தனர்.
- 1954 – அல்பிரெடோ ஸ்ட்ரோசுனர் தனது கொடுங்கோலாட்சியை பரகுவையில் ஆரம்பித்தான்.
- 1960 – கொங்கோ குடியரசு (பிராசவில்லி) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1963 – இசுக்கொட்லாந்தில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1963 – மூன்று நாள் கிளர்ச்சியை அடுத்து கொங்கோ குடியரசின் அரசுத்தலைவர் புல்பர்ட் யூலோ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1971 – பகுரைன் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1973 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா கம்போடியா மீதான குண்டுவீச்சை நிறுத்தியது.
- 1974 – தென் கொரியாவின் அரசுத்தலைவர் பார்க் சுங்-கீ மீதான கொலை முயற்சி ஒன்றின் போது முதல் சீமாட்டி யூக் யுங்-சூ கொல்லப்பட்டார்.
- 1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 1977 – ஒகைய்யோ பல்கலைக்கழகத்தினால் இயக்கப்பட்ட பிக் இயர் என்ற வானொலி அதிர்வெண் தொலைநோக்கி ஈர்ப்பிலா வெளியில் இருந்து வானொலி சமிக்கை ஒன்றைப் பெற்றது. இந்நிகழ்வு "வாவ்! சமிக்ஞை" என அழைக்கப்பட்டது.
- 1984 – துருக்கியில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி துருக்கிய இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது.
- 1998 – பிரித்தானியாவில் வட அயர்லாந்து, ஓமா நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர், 220 பேர் காயமடைந்தனர்.
- 2005 – காசாக்கரையில் இருந்தும், மேற்குக் கரையின் வடக்கேயுள்ள நான்கு இசுரேலியக் குடியேற்றங்களிலும் இருந்து இசுரேலியரை வெளியேற்றும் நடவடிக்கையை இசுரேல் ஆரம்பித்தது.
- 2005 – இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30-ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
- 2007 – பெருவில் இடம்பெற்ற 8.0 அளவு நிலநடுக்கத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – ஒலிங்கிட்டோ என்ற புதிய புலாலுண்ணும் மிருக இனத்தை அமெரிகக் கண்டத்தில் கண்டுபிடித்திருப்பதாக சிமித்சோனிய நிறுவனம் அறிவித்தது.
- 2015 – வட கொரியா தனது நேரத்தை அரை மணி நேரம் பின்னோக்கி நகர்த்தியது. இது ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தில்லிருந்து 8½ மணி முன்னோக்கியதாகும்.
பிறப்புகள்
- 1195 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசக் குருவானவர், புனிதர் (இ. 1231)
- 1769 – நெப்போலியன் பொனபார்ட், பிரான்சியப் பேரரசர் (இ. 1821)
- 1865 – மிக்கோ உசுயி, சப்பானிய மதத் தலைவர் (இ. 1926)
- 1872 – அரவிந்தர், இந்திய குரு, மெய்யியலாளர் (இ. 1950)
- 1882 – சி. ஆர். நாராயண் ராவ், இந்திய விலங்கியல் மருத்துவர் (இ. 1960)
- 1883 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1971)
- 1892 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழ் வரலாற்றாளர் (இ. 1960)
- 1892 – லூயி டே பிராலி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1987)
- 1896 – கெர்டி கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1957)
- 1900 – ந. பிச்சமூர்த்தி, தமிழக எழுத்தாளர் (இ. 1976)
- 1915 – மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து, இலங்கைத் தமிழ் ஆங்கிலக் கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர் (இ. 1983)
- 1917 – ஆஸ்கார் ரொமெரோ, சல்வதோர் பேராயர் (இ. 1980)
- 1921 – கா. கைலாசநாதக் குருக்கள், ஈழத்து இந்து ஆய்வாளர், பேராசிரியர் (இ. 2000)
- 1922 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், பேராசிரியை (இ. 2011)
- 1922 – வி. கல்யாணம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 2021)
- 1922 – குஷபாவு தாக்கரே, இந்திய அரசியல்வாதி (இ. 2003)
- 1930 – சுவாமி தயானந்த சரசுவதி, தமிழக மரபுவழி அத்வைத வேதாந்த ஆசிரியர் (இ. 2015)
- 1931 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 2015)
- 1935 – ராஜசுலோசனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2013)
- 1945 – காலிதா சியா, வங்காளதேசத்தின் 9வது பிரதமர்
- 1948 – பாரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1954 – ஸ்டீக் லார்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 2004)
- 1961 – சுஹாசினி, தென்னிந்திய நடிகை
- 1963 – அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு, மெக்சிக்கோ இயக்குநர்
- 1964 – அர்ஜூன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1964 – மெலிண்டா கேட்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர்
- 1972 – பென் அஃப்லெக், அமெரிக்க நடிகர்
- 1975 – விஜய் பரத்வாஜ், இந்தியத் துடுப்பாளர்
- 1989 – ஜோ ஜோனஸ், அமெரிக்கபாடகர், நடிகர்
- 1989 – கார்லோஸ் பேனா, அமெரிக்க பாடகர், நடிகர்
- 1990 – ஜெனிபர் லாரன்ஸ், அமெரிக்க நடிகை
- 1992 – அதிபன் பாசுகரன், இந்திய சதுரங்க ஆட்ட வீரர்
இறப்புகள்
- 1038 – முதலாம் இசுடீவன், அங்கேரிய மன்னர் (பி. 975)
- 1328 – எசூன் தெமூர், யுவான் பேரரசர் (பி. 1293)
- 1942 – மகாதேவ தேசாய், இந்திய செயற்பாட்டாளர், நூலாசிரியர் (பி. 1892)
- 1953 – லுட்விக் பிராண்டில், செருமானிய இயற்பியலாளர் (பி. 1875)
- 1975 – சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தின் 1வது அரசுத்தலைவர் (பி. 1920)
- 2013 – செல்லையா பொன்னத்துரை, இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் (பி. 1935)
- 2013 – மரீச் மான் சிங் சிரேஸ்தா, நேபாளத்தின் 28-வது பிரதமர் (பி. 1942)
- 2018 – அஜித் வாடேகர், இந்தியத் துடுப்பாளர் (பி. 1941)
- 2019 – வ. பி. சந்திரசேகர், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1961)
சிறப்பு நாள்
- இந்தியாவின் விடுதலை நாள் (1947, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து)
- விடுதலை நாள் (வட கொரியா, தென் கொரியா, 1945-இல் சப்பானிடம் இருந்து)
- விடுதலை நாள் (கொங்கோ குடியரசு, 1960-இல் பிரான்சிடமிருந்து)
- தேசிய துக்க நாள் (வங்காளதேசம்)
வெளி இணைப்புகள்
- பிபிசி: இந்த நாளில்
- நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
- கனடா இந்த நாளில் பரணிடப்பட்டது 2012-12-09 at Archive.today