வி. கல்யாணம்

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்

வி. கல்யாணம் (V. Kalyanam, 15 ஆகத்து 1922 – 4 மே 2021) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். 1920 ஆம் ஆண்டில் பிறந்த இவர் காந்தியின் வாழ்க்கையில் கடைசி சில ஆண்டுகள் அவருடைய நேர்முகச் செயலாளராக இருந்தார்.[1][2] 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்து கொண்டிருந்தபோது கல்யாணம் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார்.[3] இணைந்த நாள் முதல் கடைசியாக காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரை இவர் காந்தியடிகளிடம் தொடர்ந்து பணிபுரிந்தார். நாதுராம் கோட்சே காந்தியடிகளை சுட்டபொழுது கல்யாணம் காந்தியடிகளுக்குச் சற்று பின்புறமாகத்தான் நின்று கொண்டிருந்தார்.[4] சுடப்பட்டவுடன் காந்தி இறந்து போனார், அவர் இறக்கும்போது ’ஹே ராம்’ என்ற சொற்களை உச்சரிக்கவில்லை என்று வி. கல்யாணம் குறிப்பிட்டது சர்ச்சையானது.[4] ஒரு கூர்மதி கொண்ட பத்திரிக்கையாளரின் ஊகத்திலான செய்தி அது என்றார்.[5] நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் காந்தியின் இறப்பைக் குறித்து முதலில் தகவல் கொடுத்தவர் இவரே ஆவார்.[6]

வி. கல்யாணம்
பிறப்பு(1922-08-15)15 ஆகத்து 1922
சிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு4 மே 2021(2021-05-04) (அகவை 98)
சென்னை, இந்தியா
அறியப்படுவதுவிடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்

பின்னாளில், கல்யாணம் எட்வினா மவுண்ட்பேட்டனுக்குச் செயலாளராக இலண்டனில் பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பிய இவர் இராசகோபாலாச்சாரி மற்றும் செயப்பிரகாசு நாராயணன் ஆகியோருக்காகப் பணிபுரிந்தார்.[3]

காந்தியடிகளின் தியாகத்தை காங்கிரசு கட்சி மறந்து விட்டது என்று கல்யாணம் விமர்சனம் செய்தார்.[2][7] கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதால் காங்கிரசு கட்சி கலைக்கப்பட வேண்டும் என்று காந்தி விரும்பியதாக இவர் தெரிவித்தார்[8]. மேலும், இந்தியாவில் ஊழல் பெருகியதற்கு சவகர்லால் நேருவே பொறுப்பு எனவும் அவர் கூறினார்.[9]

2014 ஆம் ஆண்டில் வி.கல்யாணம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.[10]

மறைவு தொகு

வி. கல்யாணம் முதுமை காரணமாக 2021 மே 4 அன்று தனது 98-வது அகவையில் சென்னையில் காலமானார்.[11]

மேற்கோள்கள் தொகு

  1. "Mahatma Gandhi's personal secretary V Kalyanam hails Narendra Modi's 'Swachch Bharat'". The Economic Times.
  2. 2.0 2.1 "Gandhi vs Godse debate irrelevant, says Kalyanam". Deccan Chronicle.
  3. 3.0 3.1 "rediff.com: Mahatma Gandhi's secretary V Kalyanam recalls his days with the Father of the Nation".
  4. 4.0 4.1 "Mahatma Gandhi : Last Day / Last Hours".
  5. கல்யாணம்: ஒரு காந்திய வாழ்வு!, குமரி எஸ். நீலகண்டன், 2021 மே, 9, இந்து தமிழ்
  6. "V Kalyanam, Mahatma Gandhi's ex- personal secretary joins AAP". www.oneindia.com.
  7. "Gandhiji's PS Slams Godse Statue Plan". The New Indian Express.
  8. Mini Muringatheri. "'Gandhiji would have begun a revolution'". The Hindu.
  9. http://www.newindianexpress.com/cities/chennai/article227936.ece
  10. "Mahatma Gandhi's ex-secretary joins AAP". The Times of India.
  11. May 4, Yogesh Kabirdoss / TNN / Updated:; 2021; Ist, 21:27. "V Kalyanam, Gandhiji’s last personal secretary, dies in Chennai | Chennai News" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/v-kalyanam-gandhijis-last-personal-secretary-dies-in-chennai/articleshow/82390971.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கல்யாணம்&oldid=3446751" இலிருந்து மீள்விக்கப்பட்டது