1540
ஆண்டு 1540 (MDXL) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1540 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1540 MDXL |
திருவள்ளுவர் ஆண்டு | 1571 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2293 |
அர்மீனிய நாட்காட்டி | 989 ԹՎ ՋՁԹ |
சீன நாட்காட்டி | 4236-4237 |
எபிரேய நாட்காட்டி | 5299-5300 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1595-1596 1462-1463 4641-4642 |
இரானிய நாட்காட்டி | 918-919 |
இசுலாமிய நாட்காட்டி | 946 – 947 |
சப்பானிய நாட்காட்டி | Tenbun 9 (天文9年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1790 |
யூலியன் நாட்காட்டி | 1540 MDXL |
கொரிய நாட்காட்டி | 3873 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 6 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் கிளீவ்சின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் என்றியின் நான்காவது மனைவியாவார்.
- மே 17 - சேர் சா சூரி முகலாயப் பேரரசர் உமாயூனைத் தோற்கடித்து சூர் பேரரசைத் தோற்றுவித்தார்.
- சூலை 9 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி தனது நான்காவது மனைவியான கிளீவ்சின் ஆனை மணமுறிப்புச் செய்தார்.
- சூலை 28 - நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தாமசு குரோம்வெல் தூக்கிலிடப்பட்டார். இதே நாளில் என்றி கேத்தரின் ஹவார்டு என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர் என்றியின் ஐந்தாவது மனைவியாவார்.
- செப்டம்பர் - ஜிப்ரால்ட்டர் அலி ஆமெட் என்பவனின் தலைமையில் கொளையிடப்பட்டது. நாட்டின் முக்கியமான தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு மொரோக்கோ கொண்டு செல்லப்பட்டனர்.[1]
- செப்டம்பர் 27 - திருத்தந்தை மூன்றாம் பவுல் இயேசு சபையை அங்கீகரித்தார்.
- ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை மற்றும் வறட்சி பரவி 7 மாதங்கள் வரை நீடித்தது. ரைன் ஆறு, செய்ன் ஆறு என்பவை வறண்டு போயின. இரத்தக்கழிசல், மற்றும் தொற்று நோயினால் பலர் உயிரிழந்தனர்.[2]
பிறப்புகள்
தொகு- மே 9 - மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (இ. 1597)
- பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய கப்பல் தலைவர், அரசியல்வாதி, கொள்ளைக்காரன் (இ. 1596)
- மதுசூதன சரஸ்வதி, இந்திய அத்வைத மரபில் வந்த வேதாந்த தத்துவாதி (இ. 1640)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Drinkwater, John (1786). A history of the late siege of Gibraltar: With a description and account of that garrison, from the earliest periods. Printed by T. Spilsbury. p. 8. பார்க்கப்பட்ட நாள் 2012-10-27.
- ↑ "Weather chronicler relates of medieval disasters". goDutch.com. 2003-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-11-08.