ரைன் ஆறு ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. ரைன் , ரைன்: (இலத்தீன் மொழியில் ரெனஸ் (Rhenus) என்றும், ரோமானிய மொழியில் ரீன் (Rein) என்றும், ஜேர்மன் மொழியில் ரெயின் (Rhein) என்றும், பிரஞ்சு மொழியில் லெ ரைன் (le Rhin)[1]டச்சு மொழியில் ரிஜின் (Rijn) என்றும் அழைக்கப்படுகிறது. ரைன் ஆறு ஒரு ஐரோப்பிய ஆறு ஆகும்.

ரைன் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்வட கடல், நெதர்லாந்து

நீளம்1,230 km (820 mi)

இது சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் மற்றும் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பரப்பின் மூலையில் தென்கிழக்கு ஆல்ப்ஸில் (Alps) உள்ள க்ரூபண்டெனில் (Graubünden) தொடங்குகிறது.

சுவிட்சர்லாந்து-ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து-லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) மற்றும் சுவிட்சர்லாந்து-ஜேர்மன் ஆகியவற்றின் வழியாக செல்கிறது. இவற்றின் பகுதியாகவும் அமைந்துள்ளது. பின்னர், ஃபிராங்கோ-ஜெர்மன் எல்லையிலும், ரைன்லாந்து வழியாகவும் பாய்ந்து செல்கிறது. இறுதியில் நெதர்லாந்தில் வட கடலில் கலக்கிறது.

இது ஐரோப்பாவின் நீளமான ஆறுகளில் ஒன்றும் ஆகும். இவ்வாற்றின் நீளம் ஏறத்தாழ 1230 கிலோமீட்டர்கள். மேலும் இது போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கியமான நீர்வழியும் கூட. இதன் கரையை ஒட்டி பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஆறு பல நாடுகளுக்கு எல்லையாகவும் விளங்குகிறது. நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு நாட்டுக்கு உட்பட்ட ஆற்றின் பகுதியில் படகுகள், கப்பல்கள் செல்கையில் நிறுத்தப்பட்டு வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆல்ப்சு மலையில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு வடக்கு நோக்கிப்பாய்ந்து வடகடலில் கலக்கிறது. இந்த ஆறு சுவிட்சர்லாந்து, செர்மனி, பிரான்சு, லக்சம்பெர்கு, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியே பாய்கிறது. இந்த ஆற்றங்கரையில் உள்ள மிகப்பெரிய நகரம் செர்மனியின் கலோன் நகரம் ஆகும். இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஐரோப்பாவின் நடுப்பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள தான்யூப் (1,230 கி.மீ.க்கு அதிகம்)[a][b] ஆற்றுக்கு அடுத்து பெரிய ஆறு இதுவேயாகும்.

ரைன் ஆறானது உயர் ரைன், மேல் ரைன், நடு ரைன், கீழ் ரைன் என்று நான்கு பெயர்களால் அது பாயும் பகுதியைப் பொறுத்து அழைக்கப்படுகிறது.

உயர் ரைன் (Higher Rhein)

தொகு
 
உயர் ரைன் (High Rhine)
 
சுவிட்ஸர்லாந்தில் ஸ்சாஃப்ஹாஸன் பகுதியில் ரைன் நீர்வீழ்ச்சி

கான்ஸ்டன்சு ஏரியிலிருந்து வெளியாகும் ரைன் ஆறானது மேற்கு நோக்கிப்பாய்கிறது. ரைன் அருவி உயர் ரைன் பகுதியில் உள்ளது. மேலும் ஆரெ ஆறு இப்பகுதியில் தான் ரைன் ஆற்றுடன் சேர்கிறது. ரைன் கான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து எழுந்து, பொதுவாக மேற்கு நோக்கி ஹோச்ரைன் என்ற பெயருடன் செல்கிறது, அங்கிருந்து வீழ்ச்சியடையும் போது ரைன் நீர்வீழ்ச்சி என்ற பெயருடன் செல்கிறது. பின்னர் அதன் மிகப் பெரும் கிளையாறு ஆரேயுடன் இணைகிறது. ஆரே ஆறு, ரைன் ஆற்றுடன் இணைந்து, நீர் வெளியேற்றத்தை ஏறக்குறைய இரட்டிப்பாக்குகிறது, அதாவது, நீர் வெளியேற்ற அளவு சராசரியாக 1,000 மீ3 / வினாடி (35,000 கன அடி /வினாடி) என்று மாற்றமடைகிறது. மேலும், டச்சு எல்லையில் ஐந்தில் ஒரு பகுதி நீர் வெளியேற்றப்படுகிறது. ரைன் வடிநிலத்தின் மிக உயரமான இடமான ஃபின்ஸ்டரார்ஹார்ன் (Finsteraarhorn) முடிச்சின் உயரம் 4,274 மீ (14,022 அடி)ஆகும். ஆரே ஆறும் இந்த இடத்தில் இருந்து புறப்படுகிறது.

கான்ஸ்டன்ஸ் ஏரிலிருந்து (சுன்ஹாஹாசென் (Schaffhausen) ஜூரிச் (Zürich) பாசல் (Basel) ஸ்டேட் (Stadt) மண்டலப் பகுதிகள் தவிர) ஏனைய ஜேர்மனிய-சுவிட்ஸைலாந்துப் பகுதிகளுக்கு ரைன் ஆறு, எல்லையாகத் தோற்றமளிக்கிறது. அன்டர்சீ (Untersee) மலையின், மேற்கு முடிவில், ஸ்டெயின் ஆம் ரீனில் (Stein am Rhein) உயர் ரைன் தொடங்குகிறது. அல்பைன் ரைன் மற்றும் மேல் ரைன் போலல்லாமல், உயர் ரைன், மேற்கு நோக்கி செல்கிறது. ரைன் ஆறு 395 மீட்டர் முதல் 252 மீட்டர் வரை உள்ள உயரத்திலிருந்து வீழ்ச்சியடைகிறது.

மேல் ரைன் (Upper Rhein)

தொகு
 
பிரீசக் அருகே(Breisach) ரைன் (முகப்பு) மற்றும் ரைன் கால்வாய் (பின்பகுதி)

பேசலின் மையத்தில், நீரோட்டப் பாதையில் முதல் முக்கிய நகரம் "ரைன் முழங்கால் (Rhine knee)" அமைந்துள்ளது. இது ஒரு பெரிய வளைவு ஆகும். இந்த வளைவில், ரைனின் ஆற்றின் திசை ஒட்டுமொத்தமாக மேற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி மாறுகிறது. இங்கே உயர் ரைன் முடிவடைகிறது. சட்டப்பூர்வமாக, மத்திய பாலம் உயர் மற்றும் மேல் ரைன் ஆறுகளுக்கு இடையே எல்லையாக உள்ளது.

நடு ரைன் (Middle Rhein)

தொகு

ரைன் ஆறு செர்மனியின் நீளமான ஆறு. இங்கு நெக்கர், மெயின், மோசல்லே ஆகிய துணையாறுகள் உள்ளன. பிங்கென், பான் ஆகிய நகரங்களுக்கு இடையே ரைன் ஆறானது நில அரிப்பினால் உண்டான ரைன் பள்ளத்தாக்கின் வழியே பாய்கிறது. இப்பள்ளத்தாக்கு மிகவும் ஆழமானது. இந்தப் பகுதி எழில் மிக்கது. இப்பகுதியில் பல கோட்டைகளும் வைன் தோட்டங்களும் உள்ளன. நடு ரைனின் பொருளாதாரம் திராட்சைத் தோட்டத்தொழிலையும் சுற்றுலாவையுமே பெருமளவு சார்ந்துள்ளது.

ரைன் நதிக்கரையில் அமைந்த நகரங்கள்

தொகு

சுவிட்சர்லாந்து

தொகு

பிரான்சு

தொகு

செர்மனி

தொகு

நெதர்லாந்து

தொகு

புவியியல்

தொகு

வழக்கமாக, ரைன் ஆற்றின் நீளமானது, 1939 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, "ரைன்-கிலோமீட்டர்" அல்லது ரீன்கிலோமீட்டர் (Rheinkilometer), என்ற அலகினால் அளக்கப்படுகிறது. கான்ஸ்டன்ஸில் (Constance) உள்ள பழைய ரைன் பாலத்திலிருந்து, அப்பாலத்தை சுழிப்புள்ளியாகக் கொண்டு, ஹோக் வேன் ஹாலண்ட் (Hoek van Holland) வரை உள்ள தூரம் (1036.20 கி.மீ) ரைன் ஆற்றின் நீளமாகக் கணக்கிடப்படுகிறது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் நிறைவுசெய்யப்பட்ட பல கால்வாய்ப் பாசனத் திட்டங்களின் காரணமாக ஆற்றின் நீளம் கணிசமாக குறைக்கப்பட்டு வருகிறது.[c] 2010 ஆம் ஆண்டில் டச்சு ஆய்வாளர், ரிஜெக்ஸ்வாட்டர்ஸ்டாட் (Rijkswaterstaat) என்பவரால், 1,232 கிலோமீட்டர் (766 மைல்கள்) என மேற்கோள் காட்டப்பட்டது.[a]

இதன் பாயும் பகுதி வழக்கமாக பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது:

நீளம் பிரிவு சராசரி வெளியேற்றுதல் அளவு உயர ஏற்றம் இடது கிளையாறுகள் (முழுமை பெறாதவை) வலது கிளையாறுகள் (முழுமை பெறாதவை)
76 கி.மீ.[remark 1] சுவிட்ஸர்லாந்தில் (Switzerland) கிரிசன் (Grisons) பகுதியில் உள்ள பல்வேறு மூலங்கள் மற்றும் தலை எனப்படும் முன்னீர் உற்பத்தி வோர்டர் ரீன்(Vorderrhein) மற்றும் ஹின்டெர் ரீன் ஆறு (Hinterrhein) 114 மீ3/வினாடி[2] 584மீ  ஆவுவா ரஸ்ஸீன் (Aua Russein), ஷ்மூயர் (Schmuèr) [3] ரைன் டா டுமா (Rein da Tuma), ரைன் டா கர்னெரா (Rein da Curnera), ரைன் டா மெடெல் (Rein da Medel), ரைன் டா சம்விட்க் (Rein da Sumvitg) ரைன் டா விக்லியுட்ஸ்(Rein da Vigliuts), க்ளோக்ன் (Glogn) (வல்சர் ரைன் Valser Rhine), ரபியுசா (Rabiusa), ஹிண்டெர் ரீன் ஆறு (Hinterrhein river) (வலது: ரக்ன் டா ஃபெரெரா (Ragn da Ferrera), அல்புலா ஆறு (Albula river) (இடது: கெல்ஜியா ஆறு (Gelgia river); வலது: லாந்துவாஸ்ஸர்(Landwasser)[3]
c. 90 கி.மீ. ரைன் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஆல்பைன் ரைன் ஆறு (ஆஸ்த்ரியா மற்றும் ஸ்விர்சர்லாந்து நாடுகளுக்கிடையே எல்லையாகவும், லீச்டென்ச்டீன் (Liechtenstein) நாட்டின் சுற்று எல்லையாகவும் அமைகிறது. 400 ம் டமினா (Tamina)[4] ப்லெஸ்ஸர் (Plessur) ஆறு, லாந்துகுவார்ட் (Landquart) ஆறு,[4]
c. 60 கி.மீ. கான்ஸ்டன்ஸ் (Constance) ஏரி, கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைந்துள்ள சீரைன் (Seerhein) என்னும் சிறிய கால்வாய், கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் ஒபர்சீ (Obersee) இணைப்பு மற்றும் கான்ஸ்டன்ஸ் ஏரியுடன் இணைக்கும் அன்டர்சீ (Untersee) இணைப்பு; 395 மீ கோல்டாச் (Goldach) ஆறு[5] டான்பிர்னர் ஆச் (Dornbirner Ach), லீப்ல் ஆச் (Leiblach), ஸ்சுஸ்ஸன் (Schussen), ரோட் ஆச் (Rotach), ப்ருன்னிஸா ஆச் (Brunnisaach), லிப் ஆச்(Lipbach), சீஃபெல்டர் ஆச் (Seefelder Aach), ரடோல்ஃப்ஸெல்லர் ஆச் (Radolfzeller Aach)[5]
c. 150 கி.மீ.[remark 2] கான்ஸ்டன்ஸ் ஏரியின் வெளியேறு முகப்பிலிருந்து பேசல் நோக்கி பாயும் உயர் ரைன். இது ஜெர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாடுகளின் எல்லையில் கணிசமான பகுதியில் வியாபித்துள்ளது 1,300 மீ3/வினாடி[6] 246 m சுவிட்ஸர்லாந்து நாட்டின் தர் (Thur), டாஸ் (Töss) ஆறு, க்ளாட் (Glatt) ஆறு, ஆரே ஆறு (Aare),[remark 3] எர்கோல்ஸ் (Ergolz), பிர்ஸ்(Birs)[7] உடாச் (Wutach) ஆறு[7]
362 கி.மீ.[remark 4] பேசல் முதல் பின்கென் வரை பாயும் சமதளப் பகுதி உயர் ரைன் ஆறு எனப்படுகிறது. இந்த உயர் ரைன் ஆற்று சமதளப் பகுதி ஃப்ராங்கோ மாற்றும் ஜெர்மன் நாடுகளின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. 79 மீ பிரான்சு I ஆறு, மோடர் (Moder) ஆறு, ரைனின் பகுதியான லாடர் (Lauter) ஆறு, நாஹே (Nahe) ஆறு வீசல் ஆறு(Wiese), ரைனின் பகுதியான எல்ஸ் (Elz) ஆறு, ரைனின் பகுதியான கின்ஸிக் (Kinzig) ஆறு, ரென்ச் (Rench) ஆறு, ஆச்சர் (Acher) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் மூர்க் (Murg) ஆறு, வடக்கு கருப்புக் காட்டில் பாயும் ஆல்ப் (Alb) ஆறு, ப்ஃபின்ஸ் (Pfinz) ஆறு, நெக்கர் (Neckar) ஆறு, மெயின் (Main) ஆறு
159 கி.மீ.[remark 5] பின்கென் பகுதியில் தொடங்கி, ரைன் கார்கே (Gorge) வழியாக பான் (Bonn) அல்லது கொலொக்னே வரை பாயும் மத்திய ரைன் முழுமையாக ஜெர்மன் நாட்டின் உள்ளேயே பாய்கிறது. 45 மீ மோஸெல்லே (Moselle) ஆறு, ரைனின் பகுதியான நெட்டெ (Nette) ஆறு, அஹர் (Ahr) ஆறு லாஹ்ன் (Lahn), வீய்ட் (Wied) ஆறு, சீக் (Sieg)
177 கி.மீ.[remark 6] பான் நீரோட்டத்தில் கீழே உள்ள பகுதியிலிருந்து கீழ் ரைன் ஆறு பாய்கிறது. வடக்குப் பாலியா(Westphalia)வில் உள்ள வடக்கு ரைன் ஆறு பாயும் இப்பகுதி கீழ் ரைன் ஆற்றுப் பகுதி எனப்படுகிறது. 11 மீ எர்ஃப்ட் (Erft) உப்பர் (Wupper), டஸ்ஸல் (Düssel), ருர் (Ruhr) ஆறு, எம்ஸ்சர் (Emscher), லிப்பெ ஆறு (Lippe)
c. 50 கி.மீ. நெதெர்ம்ஞ்ன் (Nederrijn) அல்லது "நெதெர் ரைன்" "Nether Rhine" எனப்படுவது நெதர்லாந்து (Netherlands) நாட்டில், ரைன்-மியூஸ் (Meuse)-ஷெல்டெட் (Scheldt) ஆகியவை இணைந்த நிலவியல். ஆற்றிடைத்திட்டு ஆகும். இது கெல்தெர்லாந்தின் ஔடெரெஜின் (Oude Rijn) என்று அழைக்கப்படுகிறது.. 2,900 மீ3/வினாடிக[remark 7] 0 m மியூஸ்(Meuse) [[ஔடெ ஜெஸ்ஸல் Oude பெர்கெல் எனப்படும் ஐ ஜெஸ்ஸல் மற்றும் குடெ ஜெஸ்ஸல்லின் பகுதிகள்
  1. length of the Vorderrhein (including Rein da Medel)
  2. கான்ஸ்டன்ஸ் முதல் பேசல் (Basel) வரை: ரைன்கிலோமீட்டர்Rheinkilometer 0–167.
  3. ஆரே ஆறும், ரைன் ஆறும் இணையும் இடத்தில், ஆரே ஆறு சராசரியாக 560 மீ³/வினாடி என்ற வேகத்திலும், ரைன் ஆறு சராசரியாக 439 மீ³/வினாடி என்ற வேகத்திலும், கலக்கின்றன. இதிலிருந்து, நீர் பாய்தலின் அளவின் அடிப்படையில், ஆரே ஆற்றின் துணையாறு ரைன் என்பது உறுதியாகின்றது.
  4. பேசல் முதல் பின்கென் (Bingen) வரை:ரைன்கிலோமீட்டர் 167–529.
  5. பின்கென் முதல் கொலொக்னே (Cologne) வரை: ரைன்கிலோமீட்டர் 529–688 (159 கி.மீ.); மத்திய ரைன் ஆற்றைப் பற்றிய முழுமையான வரையறை இல்லை. மத்திய ரைன் நீரோட்டத்தில் மேலே உள்ள பகுதியிலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும், மெயின் ஆறு தொடங்கும் இடத்திலிருந்து கணக்கிடுவதாக சில கருத்துக்களும் உள்ளன.
  6. ரைன்கிலோமீட்டர் 688–865.5 (177.5 கி.மீ.) கொலொக்னே முதல் டச்சு(Dutch)-ஜெர்மன்(German) எல்லை வரை:
  7. the total discharge of the Rhine is subject to significant fluctuations, and average values cited vary between sources; the total discharge taken into account here consists of: மாஸ்மான்டு (Maasmond): 1450 m3/s, ஹாரிங்வ்லீட் (Haringvliet): 820 m3/s, டென் ஓஎவர் (Den Oever): 310 m3/s, கார்ன்வெர்டர்ஸன்து(Kornwerderzand): 220 m3/s, ஐ ஜே முய்டென் (IJmuiden): 9 m3/s, ஷெல்ட் - ரைன் கால்வாய் 10 m3/s

படத்தொகுப்பு

தொகு
 
வியாமலா ஹின்டர் ரைன் (Viamala Hinterrhein)
 
ரைன் பேய் காட்லீபென் (Rhein bei Gottlieben)
 
ஸ்சஃப்ஹாசன்2 (Schaffhausen2)
 
ரைன்முயன்டங் இம் போடென்சீ (Rheinmuendung im Bodensee)

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 The Rhine only has an official length scale (Rheinkilometer) downstream of Constance. Its full length is subject to the definition of the Alpine Rhine. In 2010, there were media reports to the effect that the length of the Rhine had long been under-reported in 20th-century encyclopedias, and upon request by journalists, Dutch Rijkswaterstaat cited a length of 1,232 km."Der Rhein ist kürzer als gedacht – Jahrhundert-Irrtum". sueddeutsche.de. பார்க்கப்பட்ட நாள் 27 March 2010.."Rhine River 90 km shorter than everyone thinks". The Local – Germany's news in English. 27 March 2010. பார்க்கப்பட்ட நாள் 9 April 2010. "'We checked it out and came to 1,232 kilometres,' said Ankie Pannekoek, spokeswoman for the Dutch government hydrology office." As of 2018, the popular press still reports a shorter length of 745 miles (~1,200 kilometers).Sheppard, David; Chazan, Guy (2 November 2018). "Where did the Rhine go? Drought-hit cargo river sparks economic fears.". OZY இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190716065458/https://www.ozy.com/fast-forward/where-did-the-rhine-go-drought-hit-cargo-river-sparks-economic-fears/90247. 
  2. The Rhine is cited as the "twelfth-longest river of Europe"[யாரால் சொல்லப்பட்டது?] if one counts the Russian rivers Volga, Ural, Pechora, Kama, Northern Dvina–Vychegda, Oka, and Belaya, which, based on the modern conventional boundary between Europe and Asia are within European Russia or form part of the boundary with Asia. Eastern European rivers Dnieper, Don, and Dniester, which run into the Black Sea, are also longer than the Rhine.
  3. most notably the straightening of the Upper Rhine planned by Johann Gottfried Tulla, completed during 1817–1876.

மேற்கோள்கள்

தொகு
  1. "Le Rhin" (official site) (in பிரெஞ்சு). Paris, France: L'Institut National de l'Information Geographique et Forestrière IGN. Archived from the original on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. sum of Vorderrhein and Hinterrhein discharges according to Hydrologischer Atlas der Schweiz, 2002, Tab. 5.4 "Natürliche Abflüsse 1961–1980".
  3. 3.0 3.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Vorderrhein. Gewässernetz 1:2 Mio. National Map 1:200 000 (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  4. 4.0 4.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Alpenrhein. Gewässernetz 1:2 Mio. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). Lake Constance. Gewässernetz 1:200 000, Flussordnung. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
  6. Average over the period 1961–1990: 1,297 m3/s (M. Spreafico und R. Weingartner, Hydrologie der Schweiz: Ausgewählte Aspekte und Resultate, Berichte des BWG, 2005, citing Schädler and Weingartner, 2002); regular yearly peak at 2,500 m3/s, exceptional peaks above 4,000 m3/s. Simon Scherrer, Armin Petrascheck, Hanspeter Hode, Extreme Hochwasser des Rheins bei Basel – Herleitung von Szenarien (2006).
  7. 7.0 7.1 "Maps of Switzerland – Swiss Confederation – GEWISS" (online map). High Rhine. Gewässernetz 1:2 Mio. National Map 1:2 Mio (in German). Cartography by Swiss Federal Office of Topography swisstopo. Berne, Switzerland: Federal Office for the Environment FOEN. 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-01-05 – via http://map.geo.admin.ch. {{cite map}}: External link in |via= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்_ஆறு&oldid=3777221" இலிருந்து மீள்விக்கப்பட்டது