1550கள்
பத்தாண்டு
1550கள் பத்தாண்டு 1 சனவரி, 1550 அன்று துவங்கி 31 திசம்பர், 1559 அன்று முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1550
- பெப்ரவரி 8 - மூன்றாம் யூலியசு 221வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- சூன் 12 - பின்லாந்தின் எல்சிங்கி நகரம் (அன்று சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது.
- சூலை 21 - இயேசு சபை மூன்றாம் யூலியுசு திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது..
- ஐசுலாந்து முழுமையாக சீர்திருத்தத் திருச்சபையின் கீழ் வந்தது.
- பிரான்சிய மொழி இலக்கணத்தின் முதலாவது நூல் வெளியிடப்பட்டது.
- நோஸ்டராடாமசின் முதலாவது பஞ்சாங்கம் வெளிவந்தது.
- வெள்ளி தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1551
- சூலை – உதுமானியப் பேரரசும் கடற்கொள்ளையரும் கோசோ தீவை முற்றுகையிட்டு, 5,000-6,000 வரையான மக்களை லிபியாவுக்குக் கொண்டு சென்றனர்.
- ஆகத்து 15 – திரிப்பொலி உதுமானியப் பேரரசிடம் சரணடைந்தது.
1552
- மார்ச் 26 – குரு அமர் தாஸ் சீக்கியர்களின் 3வது குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஏப்ரல் – பிரான்சின் இரண்டாம் என்றிக்கும், புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கும் இடையில் போர் மூண்டது.
- பாரசீக வளைகுடாவில், உதுமானியப் பேரரசின் செங்கடல் கடற்படை போர்த்துக்கீசரின் ஓர்முசு தீவைத் தாக்கினர்.[1]
- மாறன் அகப்பொருள் என்ற பாட்டியல் இலக்கண நூல் அரங்கேறியது.
1553
- சூலை 10 – இங்கிலாந்தின் ஆறாம் எட்வர்டு மன்னர் இறந்து நான்கு நாட்களின் பின்னர் மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரி ஜேன் கிரே இங்கிலாந்தின் அரசியாக அறிவிக்கப்பட்டார். அடுத்த ஒன்பது நாட்களுக்கு இவர் அரசியாகப் பதவியில் இருந்தார்.
- சூலை 18 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக இலண்டன் மேயரினால் அறிவிக்கப்பட்டார்.
- சூலை 19 – முதலாம் மேரி இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
- ஆகத்து 22 – ஜேன் கிரேயின் ஆதரவாளரான நோர்தம்பர்லாந்து இளவரசர் ஜோன் டட்லி தூக்கிலிடப்பட்டார்.
- ஆகத்து – இங்கிலாந்தின் நாடுகாண்பயணி ரிச்சார்டு சான்சிலர் வெள்ளைக் கடலைக் கடந்து உருசியா சென்று, இங்கிலாந்துக்கும், உருசியாவிற்கும் இடையில் வணிகத்தை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் – இங்கிலாந்தில் ஆங்கிலிக்க ஆயர்கள் கைது செய்யப்பட்டனர். ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் மீளப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
1554
- சனவரி 5 – நெதர்லாந்து ஐன்டோவன் என்ற இடத்த்ல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
- சனவரி 25 – பிரேசிலில் சாவோ பாவுலோ நகரம் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 12 – இங்கிலாந்தின் முடிக்குரியவராக 1553 இல் உரிமை கோரிய லேடி ஜேன் கிரே தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
- மார்ச் 15 – புனித சவேரியாரின் உடல் கோவாவிற்கு கொண்டு வரப்பட்டது.[2]
- மார்ச் 18 – இளவரசி எலிசபெத் இலண்டன் கோபுரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- சூலை 23–சூலை 25 – இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி நேப்பில்சின் பிலிப்பைத் திருமணம் புரிந்தார்.
- நவம்பர் – ஆங்கிலேயக் கடற்படையைச் சேர்ந்த கப்டன் ஜோன் லொக் கினிக்கான பயணத்தை மேற்கொண்டார்.[3][4]
- கத்தோலிக்க மறுமலர்ச்சி ஆரம்பம்
- பெப்ரவரி 11 – தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு என்ற முதலாவது தமிழ் புத்தகம் லிசுபனில் வெளியானது.[5]
1555
- சனவரி 22 – பர்மாவின் மேற்பகுதியில் ஆவா இராச்சியம் வீழ்ச்சியடைந்தது.
- பெப்ரவரி 4 – ஜோன் ரொஜர்சு இலண்டனில் தீயில் எரிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். இங்கிலாந்தின் முதலாம் மேரியின் ஆட்சியில் சீர்திருத்தத் திருச்சபையின் முதலாவது மாவீரரானவர் இவராவார்.
- பெப்ரவரி 8 – சீர்திருத்தத் திருச்சபையின் லாரன்சு சோன்டர்சு தீயில் எரிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- ஏப்ரல் 10 – இரண்டாம் மர்செல்லுசு 222வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 22 நாட்கள் மட்டுமே இவர் பதவியில் இருந்தார்.
- மே 23 – நான்காம் பவுல் 223வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- சூலை 12 – திருத்தந்தை நான்காம் பவுல் உரோமில் முதலாவது யூத சேரியை ஆரம்பித்தார்.
- அக்டோபர் 25 – புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு முடி துறந்ததை அடுத்து முதலாம் பெர்டினாண்டு ஆட்சியேறினான்.
- உருசியா பின்லாந்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சுவீடன் உடனான உருசியாவின் 60-ஆண்டு கால அமைதி ஒப்பந்தம் முறிவடைந்தது.
- நசிருதீன் உமாயூன் முகலாயப் பேரரசனாக முடிசூடினான்.
- ஆங்கிலேயக் கடற்படைக் கப்டன் ஜோன் லொக் தனது கினி பயணத்தை முடித்து திரும்பினான். தனது பிற்கால வணிக மொழிபெயர்ப்புத் தேவைக்காக அங்கிருந்து 5 இன மக்களை அழைத்து வந்தான்.
- கருப்பினத்தவரைக் குறிக்கும் எசுப்பானியச் சொல்லான "நீக்ரோ" புழக்கத்துக்கு வந்தது.
1556
- ஜனவரி 16 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான். அவனது தம்பி பேர்டினண்ட் ரோம் பேரரசின் மன்னன் ஆனான்.
- ஜனவரி 23 - சீனாவில் ஷான்கி (Shaanxi) மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 830,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 5 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
தேதி அறியப்படாதவை
தொகு1557
- சூன் 7 – இங்கிலாந்தின் முதலாம் மேரி தனது கணவர் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்புவின் பிரான்சுக்கு எதிரான போரில் இணைந்து கொண்டார்.
- சீனாவின் மிங் அரசின் அனுமதியுடன், மேற்கத்தைய, கீழைத்தேய வணிகர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, போர்த்துக்கீசர் மக்காவுவில் குடியேறினர்.
- எசுப்பானியா திவாலா நிலைக்கு வந்தது.[6]
- வேல்சு கணிதவியலாளர் ராபர்ட் ரெக்கார்டே என்பவர் சமன் (=), மற்றும் ஆங்கிலக் கூட்டல், கழித்தல் குறிகளை தனது The Whetstone of Witte எனும் நூலில் அறிமுகப்படுத்தினார்.
1558
- சனவரி 7 – கைசு இளவரசர் பிரான்சிசு தலைமையில் பிரெஞ்சுப் படையினர் இங்கிலாந்தின் கலே நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 24 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் முதலாம் பிரான்சிசுக்கும் இடையில் நோட்ரே டேம் டி பாரிசில் திருமணம் நடந்தது.
- நவம்பர் 17 – கத்தோலிக்கரான முதலாம் மேரி இறந்ததை அடுத்து, அவரது ஒன்றுவிட்ட சகோதரியும், சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவருமான எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடி 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்.
1559
- சனவரி – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு 14 வயதான வலோயிசின் எலிசபெத் என்பவரை மூன்றாவது மனைவியாகத் திருமணம் புரிந்தார்.
- சனவரி 15 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் வெஸ்ட்பின்சுடர் மடத்தில் இங்கிலாந்தின் அரசியாக முடிசூடினார்.
- பெப்ரவரி 27 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் இங்கிலாந்து திருச்சபையை நிறுவினார்.
- சூலை 10 – [[பிரான்சின் இரண்டாம் என்றி விபத்து ஒன்றில் இறந்ததை அடுத்து அவரது மகன் இரண்டாம் பிரான்சிசு பிரான்சின் மன்னனானான்.
- ஆகஸ்டு 15 – 1,500 ஆண்களைக் கொண்ட 13 கப்பல்களில் எசுப்பானிய மதப்பரப்புனர்கள் வேராகுரூசு நகரில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு வந்து சேர்ந்தனர்.
- செப்டம்பர் 19 – புளோரிடாவில் வந்திறங்கிய சில் வாரங்களில் எசுப்பானிய மதப்பரப்புனர்கள் அங்கு இடம்பெற்ற சூறாவழியினால் பெரும் அழிவைச் சந்தித்தனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐந்து கப்பல்கள் அழிந்தன. மேலும் பட்டினியாலும், தாக்குதல்களினாலும் பெரும் அழிவைச் சந்தித்த அவர்கள் தமது திட்டத்தை 1561 இல் கைவிட்டனர்.
- செப்டம்பர் 21 – 15-வயது இரண்டாம் பிரான்சிசு பிரான்சின் அரசனாக அதிகாரபூர்வமாக முடிசூடினான்.[7]
- போர்த்துகலுக்கான பிரெஞ்சுத் தூதுவர் சீன் நிக்கொட் மூக்குப்பொடியை பிரான்சில் அறிமுகப்படுத்தி, புகையிலையின் மருத்துவ குணங்களை விளக்கினார்.[8]
பிறப்புகள்
தொகு1550
- ஜான் நேப்பியர், இசுக்காட்டிய கணிதவியலர் (இ. 1617)
- குருஞான சம்பந்தர்
1551
- சனவரி 14 – அபுல் ஃபசல், பேரரசர் அக்பரின் அரசியல் ஆலோசகர் (இ. 1602)
1552
- சூன் 2 – முதலாம் இராச உடையார், மைசூர் அரசர் (இ. 1617)
- அக்டோபர் 6 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதகுரு (இ. 1610)
1554
1558
- அந்தரே பூர்த்தாடோ தெ மென்டோன்சா, போர்த்துக்கேய இந்தியாவின் படைத்தளபதி, ஆளுனர் (இ. 1611)
1559
- சூலை 22 – பிரின்டிசி நகர லாரன்சு, இத்தாலியப் புனிதர் (இ. 1619)
இறப்புகள்
தொகு1552
- டிசம்பர் 2 – பிரான்சிஸ் சவேரியார், எசுப்பானிய மதப்பரப்புனர் (பி. 1506)
1553
- பெப்ரவரி 17 - மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492)
1555
- மார்ச் 23 – மூன்றாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) (பி. 1487)
- ஏப்ரல் 30 – இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை) (பி. 1501)
1556
- பெப்ரவரி 22 - ஹுமாயூன், முகலாய பேரரசன் (பி. 1508)
1557
- சூன் 11 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் மன்னர் (பி. 1502)
- செப்டம்பர் 1 – இழ்சாக் கார்ட்டியே, பிரெஞ்சு நாடுகாண் பயணி (பி. 1491)
- டிசம்பர் 13 – டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலர் (பி. 1499)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chronology". Western Islam 11th-18th Centuries. New Cambridge History of Islam. Vol. 2. Maribel Fierro (editor). Cambridge: Cambridge University Press. 2010. p. xxxiii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521839570.
Failed Ottoman attempt to conquer Hormuz.
{{cite book}}
: CS1 maint: others (link) - ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 2
- ↑ Grun, Bernard (1991). The Timetables of History (3rd ed.). New York: Simon & Schuster. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-671-74919-6.
- ↑ Kerr, Robert (1824). A general history and collection of voyages and travels. Vol. 7. Edinburgh: Blackwood. p. 229. பார்க்கப்பட்ட நாள் 2011-11-27.
- ↑ கமில் சுவெலபில், Companion Studies to the History of Tamil Literature, Handbuch Der Orientalistik Series, Brill Academic Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004093656, 1992, pp. 151-152.
- ↑ Archer, Christon; et al. (2002). World History of Warfare. Lincoln: University of Nebraska Press. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8032-4423-8.
- ↑ Guy, John, My Heart is my Own, London, Fourth Estate, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841157538
- ↑ Austin, Gregory. "Chronology of Psychoactive Substance Use". Drugs & Society. Comitas Institute for Anthropological Study. Archived from the original on 2011-08-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.