1530கள்
பத்தாண்டு
1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
1530
- பெப்ரவரி 24 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசனாக திருத்தந்தை ஏழாம் கிளெமெண்டினால் முடிசூட்டப்பட்டான்.
- அக்டோபர் 8 - உரோமில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நவம்பர் 5 - நெதர்லாந்தின் ரைமர்சுவால் நகரம் வெள்ளத்தில் அழிந்தது.
- ஆத்திரியப் படைகள் அங்கேரியின் எசுட்டர்கோம் நகரைக் கைப்பற்றி முன்னேறினர்.
- நசிருதீன் உமாயூனின் முகலாய ஆட்சிக் காலம் ஆரம்பமானது.
1531
- சனவரி 26 - போர்த்துகல், லிஸ்பன் நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.[1]
- ஏப்ரல் - பெருவின் புனா தீவில் உள்ளூர் பழங்குடியினருடன் இடம்பெற்ற சமரில் பிரான்சிஸ்கோ பிசாரோ வெற்றி பெற்றார்.[2]
- ஹேலியின் வால்வெள்ளி தோன்றியது.
- பிரான்சிசுக்கோ டெ மொண்டேஜோ எசுப்பானியர்களின் ஆட்சியில் இருந்த யுகட்டானின் தலைநகராக சிச்சென் இட்சாவை அறிவித்தார்.
- செருமனியின் சில்ட்டாக் நகரில் சூனியக்காரிகள் வேட்டை இடம்பெற்றது.
1532
- மார்ச் 18 - ஆங்கிலேயத் திருச்சபை உரோமுக்கு அளிக்கும் கொடுப்பனவுகளுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் தடை விதித்தது.
- மே 13 - பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் வடக்குக் கரையை அடைந்தார்.
- மே 16 - சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்.
- சூன் 25 - முதலாம் சுலைமான் அங்கேரியை நோக்கி மீண்டும் ஒரு முறை படையெடுத்துச் சென்றான்.
- நவம்பர் 16 - பிரான்சிஸ்கோ பிசாரோவும் அவரது குழுவும் இன்கா பேரரசன் அத்தகுவால்பாவை கைது செய்தனர். ஏராளமான இன்கா படையினரைப் படுகொலை செய்தனர்.
- பாரிசு நாடாளுமன்றம் நகரின் பிச்சைக்காரர்களைக் கைது செய்து கட்டாய வேலைக்கு அனுப்பியது.[3]
- தஞ்சாவூர் ஆளுனர் சேவப்ப நாயக்கர் தஞ்சை நாயக்கர் பேரரசை உருவாக்கி 1560 வரை அரசாண்டார்.[4]
1533
- சனவரி 25 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் ஆன் பொலினைத் திருமணம் புரிந்தார்.
- சனவரி 26 - தாமசு ஆட்லி இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- மார்ச் 30 - தாமஸ் க்ரான்மர் கன்டர்பரின் பேராயராக நியமிக்கப்பட்டார்.
- மே 23 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் அராகனின் கத்தரீனுடனான திருமணம் பேராயர் கிரான்மர் அறிவித்தார்.
- சூன் 1 - ஆன் பொலின் இங்கிலாந்தின் பெண்ணரசியாக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார்.
- சூலை 11 - ஆன் பொலினுடனான திருமண சர்ச்சையால் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி திருத்தந்தை ஏழாம் கிளமெண்டினால் உறவு ஒன்றிப்பில் இருந்து நீக்கினார்.
- சூலை 22 - உதுமானியப் பேரரசுக்கும், ஆஸ்திரியாவுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. முதலாம் பெர்டினாண்டு அங்கேரியின் மீதான தனது உரிமையை விட்டுக் கொடுத்தார்.
- செப்டம்பர் 7 - ஆன் பொலினுக்கு எலிசபெத் பிறந்தார். இக்குழந்தை பின்னர் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தாக முடிசூடினார்.
- நவம்பர் 15 - பிரான்சிஸ்கோ பிசாரோ பெருவின் குசுக்கோ நகரை வந்தடைந்தார்.
- டிசம்பர் 3 - நான்காம் இவான் தனது மூன்றாவது அகவையில் மாஸ்கோவின் பெரும் இளவரசராக முடிசூடினான்.
- மேன்முறையீட்டுக்கான தடைச் சட்டம் இங்கிலாந்தின் அதியுயர்பீடத் தலவனாக அரசனை அறிவித்தது. இதன் மூலம் திருத்தந்தைக்கு மேன்முறையீடு செய்வது இல்லாதொழிக்கப்பட்டது.
1534
- சனவரி 15 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி, ஆன் பொலின் ஆகியோரின் திருமணத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. அவர்களின் பிள்ளைகள் முடிக்குரிய வாரிசுகளாகவும் அறிவித்தது.[5]
- ஏப்ரல் 7 - சேர் தாமஸ் மோர் இலண்டன் கோபுரத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
- மே 10 - இழ்சாக் கார்ட்டியே வடமேற்குப் பெருவழியைக் காணச் சென்ர போது நியூபவுண்டுலாந்து தீவைக் கண்டுபிடித்தார்.
- சூன் 29 - இழ்சாக் கார்ட்டியே கனடாவின் பிரின்சு எட்வர்ட் தீவைக் கண்டுபிடித்தார்.
- ஆகத்து 15 - லொயோலா இஞ்ஞாசியும் மேலும் ஆறு பேரும் இயேசு சபையை ஆரம்பிக்க பாரிசில் உறுதி பூண்டனர்.
- அக்டோபர் 13 - மூன்றாம் பவுல் (திருத்தந்தை) 220வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- நவம்பர் 3-டிசம்பர் 18 - இங்கிலாந்து திருச்சபையின் உயர் தலைவராக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியை இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
- டிசம்பர் 6 - 200 இற்கும் அதிகமான எசுப்பானியக் குடியேறிகள் எக்குவடோரின் கித்தோவை சென்றடைந்தனர்.
- சடையவர்மன் சீவல்லப பாண்டியனின் ஆட்சிக் காலம் ஆரம்பமானது.
1535
- சனவரி 18 - பெருவின் லிமா நகரம் பிரான்சிஸ்கோ பிசாரோவினால் நிறுவப்பட்டது.
- மார்ச் 10 - பிரே தொமாசு பெர்லாங்கா கலாபகசுத் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- மே 4 - முதலாவது ஆங்கிலேயக் கார்த்தூசிய மாவீரர்கள் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் உத்தரவில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - பிரெஞ்சு நாடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோஒக்கிய தனது இரண்டாவது பயணத்தை மூன்று கப்பல்கள், 110 மாலுமிகளுடன் ஆரம்பித்தார்.
- சூன் 1 - தூனிசு நகர் மீதான தாக்குதலை புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசு ஆரம்பித்தான். உதுமானியரிடம் இருந்து இந்நகரம் கைப்பற்றப்பட்டு 30,000 பேர் வரையில் அங்கு படுகொலை செய்யப்பட்டனர்.
- சூன் 22 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு விசுவாசமாக இருக்க மறுத்த கருதினால் ஜோன் பிசர் தூக்கிலிடப்பட்டார்.[5]
- சூலை 6 - உட்டோப்பியா நூலை எழுதியவரும், இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராகவும் இரிந்த சர் தாமஸ் மோர் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக தூக்கிலிடப்பட்டார்.[6]
- அக்டோபர் 2 - இழ்சாக் கார்ட்டியே செயிண்ட் லாரன்சு ஆற்றுப் பகுதியில் தீவு ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மொண்ட்ரியால் என அழைக்கப்பட்டது.
- அக்டோபர் 4 - முதலாவது ஆங்கில மொழி விவிலியம் ஆண்ட்வெர்ப்பில் அச்சிடப்பட்டது.
1536
- சனவரி 7 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் முதலாம் மனைவி அராகனின் கேத்தரின் இறந்தார்.
- பெப்ரவரி 2 - எசுப்பானியர் பெத்ரோ டெ மெண்டோசா புவெனஸ் ஐரிஸ் நகரக் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 30 - திரிபுக் கொள்கை விசாரணை போர்த்துகலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- மே 2 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாவது மனைவி ஆன் பொலின் விபச்சாரம், தேசத்துரோகக் குற்றச்சாடுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
- மே 17 - ஆன் பொலினுடன் விபசாரம் செய்த குற்றச்சாட்டுக்களுக்காக அவரது சொந்த சகோதரர் ஜோர்ஜ் பொலின் உட்பட ஐந்து பேர் இங்கிலாந்தில் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி ஆன் பொலின் இலண்டன் கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
- மே 30 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
- பிரான்சின் முதலாம் பிரான்சிசு மன்னருக்கும், புனித உரோமைப் பேரரசன் ஐந்தாம் சார்லசிற்கும் இடையில் போர் மீண்டும் ஆரம்பித்தது. பிரான்சிசு துரினைக் கைப்பற்றினான்.
- இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மடாலயங்களைக் கலைக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து இங்கிலாந்தின் பல சமயக் கட்டடங்கள் மூடப்பட்டன.
- சீர்திருத்தத் திருச்சபை டென்மார்க், நோர்வே நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டது.
- இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.[7]
1537
- சனவரி - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றிக்கு எதிராக ரோமன் கத்தோலிக்கர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- மார்ச் 12 - பிரேசிலில் ரெசிஃபி நகரம் போர்த்துக்கீசரினால்ல் நிறுவப்பட்டது.
- சூன் 2 - புதிய உலகத்தின் பழங்குடியினர் அடிமைப்படுத்தப்படுவதோ அல்லது சூறையாடப்படுவதோ குற்றம் என திருத்தந்தை மூன்றாம் பவுல் அறிவித்தார்.
- சூன் 24 - பிரான்சிஸ் சவேரியார் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
- எசுப்பானியர் உருளைக் கிழங்கை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினர்.
- பெங்களூரின் நவீன வரலாறு ஆரம்பம்.
1538
- பெப்ரவரி 24 - புனித உரோமைப் பேரரசன் முதலாம் பெர்டினாண்டுக்கும், உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் உருவானது. இதன் படி, சாபோல்யா அங்கேரியின் அரசனாக அங்கீகரிக்கப்பட்டான். அங்கேரிப் பேரரசின் வடக்கு, மேற்குப் பகுதிகள் பெர்டினாண்டின் வசம் வந்தன.
- ஆகத்து 6 - கொலொம்பியாவின் பொகோட்டா நகரம் உருவாக்கப்பட்டது.
- மிங் அரசமரபுக் காலத்தில் முதற்தடவையாக சீனாவின் மத்திய, தென்கிழக்குப் பகுதிகளில் பத்தாண்டுகள் நீடித்த கடுமையான வறுமை, மற்றும் தொற்றுநோய்கள் ஏற்பட்டன.
- சீனாவில் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது.
- தூத்துக்குடி, பனிமய மாதா பேராலயம் கட்டப்பட்டது.
1539
- ஜனவரி 12 - புனித ரோமப் பேரரசு மன்னன் ஐந்தாம் சார்ல்ஸ், மற்றும் பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
- ஜனவரி 14 - ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
- ஏப்ரல் 27 - கொலம்பியாவின் பொகோட்டா நகரம் அமைக்கப்பட்டது.
- மே 30 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
- செப்டம்பர் 7 - குரு அங்காத் தேவ் சீக்கியர்களின் இரண்டாவது குருவானார்.
தேதி அறியப்படாதவை
தொகு- ஷேர் ஷா சூரி, முகலாய அரசர் ஹுமாயுனை, சாவ்சா போர்க்களத்தில் தோற்கடித்தான்.
ஐரோப்பா
தொகு- எட்டாம் ஹென்றி ஆங்கிலத் திருச்சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.[8]
- டென்மார்க் மற்றும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் அறிமுகமானது.
தென் அமெரிக்கா
தொகு- ஸ்பானியர்கள் பெரு நாட்டைக் கைப்பற்றினர்.
- பிரேசில் நாட்டில் குடியேற்றம் ஆரம்பமானது.[9]
முகலாயப் பேரரசு
தொகுபிறப்புகள்
தொகு1530
1532
- துளசிதாசர்,[10] புலவர், மெய்யியலாளர் (இ. 1623)
1533
- செப்டம்பர் 7 - இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (இ. 1603)
- ஏகநாதர், மராத்திப் புனிதர் (இ. 1599)
1534
- செப்டம்பர் 24 - குரு ராம் தாஸ், நான்காவது சீக்கிய குரு (இ. 1581)
1535
1538
- அக்டோபர் 2 - சார்லஸ் பொரோமெயோ, புனிதர் (இ. 1584)
இறப்புகள்
தொகு1530
- நவம்பர் 29 - தாமஸ் வோல்சி, இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர், கர்தினால் (பி. 1473)
- டிசம்பர் 26 - பாபர், முகலாயப் பேரரசர் (பி. 1483)
1531
- வல்லபாச்சார்யா, இந்திய மெய்யியலாளர் (பி. 1479)
1534
1535
- சூலை 6 - தாமஸ் மோர், ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1478)
1536
- மே 19 - ஆன் பொலின், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவி (பி. 1501/1507)
1539
- செப்டம்பர் 22 - குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469)
மேற்கோள்கள்
தொகு- ↑ Bharatdwaj, K. (2006). Physical Geography: Introduction To Earth. Discovery Publishing House. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183561631.
- ↑ Prescott, W.H., 2011, The History of the Conquest of Peru, Digireads.com Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420941142
- ↑ Foucault, Michel (January 30, 2013). Madness and Civilization: A History of Insanity in the Age of Reason. Knopf Doubleday Publishing Group. p. 47. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ "Nayaks history". Thanjavur district Collectorate. Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் July 11, 2013.
- ↑ 5.0 5.1 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 210–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ Everett, Jason M., ed. (2006). "1535". The People's Chronology. Thomson Gale.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 1
- ↑ Everett, Jason M., ed. (2006). "1539". The People's Chronology. Thomson Gale.
- ↑ "The Press in Colonial America" (PDF). A Publisher’s History of American Magazines — Background and Beginnings. Archived from the original (PDF) on 2016-06-27. பார்க்கப்பட்ட நாள் 2013-08-22.
- ↑ Pandey 2008, pp. 23–34.