மே 4
நாள்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 4 (May 4) கிரிகோரியன் ஆண்டின் 124 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 125 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 241 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- 1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார்.
- 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- 1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார்.
- 1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது.
- 1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது.
- 1814 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான்.
- 1814 – எசுப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா, மிசிசிப்பி, மற்றும் கிழக்கு லூசியானாவில் கூட்டமைப்புப் படைகள் சரணடைந்தன.
- 1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
- 1904 – பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1912 – ரோட்சு என்ற கிரேக்கத் தீவை இத்தாலி கைப்பற்றியது.
- 1919 – மே நான்கு இயக்கம்: சீனாவின் பிராந்தியங்கள் சப்பானுக்கு வழங்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தை எதிர்த்து தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
- 1926 – ஐக்கிய இராச்சியத்தில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
- 1930 – மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் முதல் நாள் கைப்பற்றிய துளகி தீவு மீது அமெரிக்கக் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பூர்க் நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை பிரித்தானிய இராணுவத்தினர் விடுவித்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: வடக்கு செருமனி பிரித்தானியாவிடம் சரணடைந்தது.
- 1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
- 1949 – இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தில் டொரினோ உதைபந்தாட்ட அணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
- 1953 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே கிழவனும் கடலும் என்ற புதினத்துக்காக புலிட்சர் பரிசு பெற்றார்.
- 1959 – முதலாவது கிராமி விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
- 1970 – வியட்நாம் போர்: அமெரிக்காவில், ஒகையோ மாநிலத்தில் கெண்ட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
- 1978 – தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படைகள் தெற்கு அங்கோலாவில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர்.
- 1979 – மார்கரெட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார்.
- 1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் செஃபீல்டு போர்க்கப்பல் அர்கெந்தீனா ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
- 1990 – லாத்வியா சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
- 1994 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக்கரை, மற்றும் எரிக்கோவில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
- 2002 – நைஜீரியாவில் உள்ளூர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – நைரோபியில் பேருந்துகளில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
தொகு- 1649 – சத்திரசால், இந்திய ஆட்சியாளர் (இ. 1731)
- 1767 – தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
- 1777 – லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857)
- 1825 – தாமசு என்றி அக்சுலி, ஆங்கிலேய உயிரியலாளர் (இ. 1895)
- 1909 – ஆ. மு. சரிபுத்தீன், இலங்கைத் தமிழறிஞர், புலவர் (இ. 2000)
- 1922 – யுஜினி கிளார்க், அமெரிக்க உயிரியலாளர் (இ. 2015)
- 1928 – ஓசுனி முபாரக், எகிப்தின் 4வது அரசுத்தலைவர்
- 1929 – திக்கிரி அபேயசிங்க, இலங்கை சிங்கள வரலாற்றாளர் (இ. 1985)
- 1929 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (இ. 1993)
- 1940 – ராபின் குக், அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்
- 1942 – சாம் பிட்ரோடா, இந்திய தொழில் முனைவாளர், கண்டுபிடிப்பாளர்
- 1945 – என். ராம், இந்திய இதழியலாளர்
- 1958 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர் (இ. 1990)
- 1965 – சம்பிக்க ரணவக்க, இலங்கை அரசியல்வாதி
- 1981 – அலெக்சாண்டர் கெரென்சுகி, உருசிய அரசியல்வாதி (இ. 1970)
- 1983 – திரிசா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
தொகு- 1799 – திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (பி. 1750)
- 1879 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
- 1912 – நெட்டி இசுட்டீவன்சு, அமெரிக்க மரபணுவியலாளர் (பி. 1861)
- 1949 – எஸ். ஏ. கணபதி, மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1925)
- 1972 – காயிதே மில்லத், தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1896)
- 1980 – சோசப்பு பிரோசு டிட்டோ, யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவர் (பி. 1892)
- 1997 – டபிள்யூ. தகநாயக்க, இலங்கையின் 5வது பிரதமர் (பி. 1902)
- 2011 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. 1933)
- 2017 – சற்சொரூபவதி நாதன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1937)
- 2021 – வி. கல்யாணம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1922)
- 2021 – டிராபிக் ராமசாமி, தமிழக சமூக செயற்பாட்டாளர் (பி. 1934)
- 2023 – காரைக்குடி மணி, தமிழக மிருதங்கக் கலைஞர் (பி. 1945)
சிறப்பு நாள்
தொகு- பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்
- இறந்தவர்கள் நினைவு நாள் (நெதர்லாந்து)