1649
நாட்காட்டி ஆண்டு
1649 (MDCXLIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1649 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1649 MDCXLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1680 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2402 |
அர்மீனிய நாட்காட்டி | 1098 ԹՎ ՌՂԸ |
சீன நாட்காட்டி | 4345-4346 |
எபிரேய நாட்காட்டி | 5408-5409 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1704-1705 1571-1572 4750-4751 |
இரானிய நாட்காட்டி | 1027-1028 |
இசுலாமிய நாட்காட்டி | 1058 – 1059 |
சப்பானிய நாட்காட்டி | Keian 2 (慶安2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1899 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3982 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 20 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னனுக்கு எதிராகத் தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
- சனவரி 27 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
- சனவரி 30 - முதலாம் சார்ல்சு மன்னன் இலண்டன் உவைட்ஹோல் மாளிகையில் தூக்கிலிடப்பட்டார். அவரது மனைவி என்றியேட்டா மரீயா பிரான்சு சென்றார்.
- சனவரி 30 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
- சனவரி 30 - முதலாம் சார்லசுவின் மகன் இளவரசர் இரண்டாம் சார்ல்சு தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் பேரரசனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
- பெப்ரவரி 5 - இசுக்கொட்லாந்து இரண்டாம் சார்ல்சை அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
- மார்ச் 19 - பிரபுக்கள் அவையை இல்லாதொழிக்கும் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் கொண்டுவந்தது.[1]
- மே 17 - இங்கிலாந்தில் புதிய மொடல் இராணுவத்தினருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
- மே 19 - இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
- ஆகத்து 15 - அயர்லாந்தைக் கைப்பற்றும் நோக்கோடு ஆலிவர் கிராம்வெல் டப்லின் சென்றடைந்தார்.
- செப்டம்பர் 2 - இத்தாலியின் காஸ்ட்ரோ நகரம் திருத்தந்தை பத்தாம் இன்னொசென்டின் படைகளால் முற்றாக அழிக்கப்பட்டது. காஸ்ட்ரோ போர்கள் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- சனவரி 30 - முதலாம் சார்ல்ஸ், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து பேரரசன் (பி. 1600)
மேற்கோள்கள்
தொகு- ↑ "March 1649 - An Act for the Abolishing the House of Peers". பார்க்கப்பட்ட நாள் 2012-02-16.